டெல்லி- ஆக்ரா இடையே இந்தியாவின் அதிவேக ரயில் வெற்றிகரமாக சோதனை
டெல்லி- ஆக்ரா இடையில் இந்தியாவின் அதிவேக ரயிலின் சோதனை ஓட்டம் இன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, வரும் நவம்பர் முதல் இந்த வழித்தடத்தில் அதிவேக ரயிலின் பயணிகள் சேவை துவங்க உள்ளது.
வரும் ரயில்வே பட்ஜெட்டில் புல்லட் ரயில் திட்டம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு முந்தயை கட்டத்தை இந்திய ரயில்வே துறை இன்று எட்டியுள்ளது. இந்த அதிவேக ரயில் திட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டிருப்பதற்கு, ரயில் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

சோதனை ஓட்டம்
டெல்லி- ஆக்ரா இடையில் 10 பெட்டிகள் கொண்ட சோதனை ரயில் இன்று இயக்கப்பட்டது. இது சதாப்தி ரயிலை அடிப்படையாகக் கொண்ட பெட்டிகளே சோதனையில் இடம்பெற்றது. ஆனால், அவற்றை விட அதிக வேகத்தில் செல்லும் கட்டமைப்பு கொண்டது.

எஞ்சின்
காஸியாபாத் ரயில் எஞ்சின் பணிமனையிலிருந்து வந்த WAP- 7 என்ற 5,400 எச்பி திறன் கொண்ட மின்சார எஞ்சின் மூலம் சோதனை ரயில் இயக்கப்பட்டது. சோதனை ஓட்டத்தின்போது அதிகபட்சமாக மணிக்கு 160 கிமீ வேகம் வரை தொட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பயண நேரம்
டெல்லி - ஆக்ரா இடையிலான தூரத்தை தற்போது டெல்லி- போபால் சதாப்தி ரயில் 120 நிமிடங்களில் கடக்கிறது. ஆனால், இந்த புதிய அதிவேக ரயில் 90 நிமிடங்களில் கடந்துவிடும். பயண நேரத்தில் 30 நிமிடங்கள் வரை குறையும். ஆனால், இன்று சோதனையின்போது இந்த தூரத்தை 100 நிமிடங்களில் சோதனை ரயில் கடந்தது.

மேம்படுத்தப்பட்ட தடம்
ரூ.15 கோடி செலவில் இந்த ரயில் வழித்தடம் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அபாயகரமான பகுதிகளாக கண்டறியப்பட்ட இடங்களில் 27 கிமீ தூரத்துக்கு கம்பி வேலியும் அமைக்கப்பட்டுள்ளது.
Picture Credit: Wikipedia

பாதுகாப்பு
அதிவேக சோதனை ரயில் இயக்கப்பட்ட ரயில் வழித்தடத்தில் பாதுகாப்பு கருதி ரயில்வே போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

அடுத்த அதிவேக ரயில்கள்
டெல்லி- ஆக்ரா வழித்தடத்தை தொடர்ந்து டெல்லி- கான்பூர் மற்றும் டெல்லி- சண்டிகர் இடையே அதிவேக ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

பயணிகள் சேவை?
வரும் நவம்பர் மாதம் முதல் டெல்லி- ஆக்ரா இடையிலான அதிவேக ரயில் பயணிகள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. இந்த அதிவேக ரயிலின் கட்டண நிர்ணயம் குறித்து பரிசீலித்து வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Picture Credit: Wikipedia


Click it and Unblock the Notifications








