திருச்சி-சார்ஜா விமானத்தில் ஏற்பட்ட பிரச்சனை இது தான்! இதுக்கு காரணம் யாரு தெரியுமா?
திருச்சியில் நேற்று 2 மணி நேரம் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானம் ஒன்று நடுவானில் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக சுற்றிக்கொண்டே இருந்தது. இறுதியாக பதைபதைக்கும் தருணத்தில் பத்திரமாக திருச்சி விமான நிலையத்தில் மீண்டும் தரையிறக்கப்பட்டது. இந்த விமானத்தில் என்ன கோளாறு நடந்தது, என்பதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரிக்க சிவில் எவியேஷன் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
திருச்சியில் நேற்று மாலை 5:43 மணிக்கு விமான நிலையத்திலிருந்து சார்ஜா செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விமானம் டேக் ஆஃப் ஆனது. அடுத்த ஒரு சில நிமிடங்களிலேயே விமானத்தில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

திருச்சி விமான நிலையத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு 2 மணி நேரம் விமானம் வானில் வட்டமடிக்கப்பட்டது. பின்னர் 141 பயணிகளுடன் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்த விமான பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இது நேற்று ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த அளவுக்கு மிக பரபரப்பான சம்பவமாக இருந்தது.
சிவில் ஏவியேஷன் இயக்குனரகம் தரப்பிலிருந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் இந்த விமானத்தின் லேண்டிங் உள்ள ஹைட்ராலிக் பிரச்சனை ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதாவது விமானம் ஓடுபாதையில் ஓடி டேக் ஆஃப் ஆனவுடன் விமானத்திற்கு கீழே இருக்கும் சக்கரங்கள் ஹைட்ராலிக் முறையில் விமானத்திற்கு உள்ளே செல்ல வேண்டும். ஆனால் அது வேலை செய்யாமல் தொடர்ந்து சக்கரம் வெளியேவே இருந்துள்ளது.

விமானம் அதிகமான உயரத்தில் பறக்கும் போது சக்கரம் வெளியே இருந்தால் அந்த சக்கரத்திற்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் விமானம் தரையிறங்க முடியாமல் கூட போக வாய்ப்பு இருக்கிறது. இதனால் லேண்டிங் காரணமாக விமானம் அதிக உயரத்தில் பறக்கவில்லை குறைவான உயரத்திலேயே பறந்தது.
லேண்டிங் பிரச்சினை இருப்பது தெரிந்தவுடன், இது லேண்டிங் செய்யும்போது விபத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பையும் உண்டாக்கும் என பலர் கருதினார்கள். இதன் காரணமாக தான் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி விமான நிலையத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் என பல அவசரநிலை உதவியாளர்கள் விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டார்கள்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்காமல் விமானம் தரையிறக்கப்பட்டது. இந்நிலையில் சிவில் ஏவியேஷன் இயக்குனரகம் தரப்பிலிருந்து இந்த ஹைட்ராலிக் பிரச்சனை ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரிக்க தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஹைட்ராலிக் பிரச்சனை எப்படி ஏற்பட்டது இதன் பராமரிப்பு பணி எப்பொழுது நடைபெற்றது குறித்த விபரங்கள் தற்போது விசாரணை நடைபெற்று வருகின்றன.
லேன்டிங் கியரில் உள்ள ஹைட்ராலிக் எப்படி?: பொதுவாக ஹைட்ராலிக் வேலை செய்யாமல் போவதற்கு இரண்டு விதமான காரணங்கள் இருக்கலாம். இந்த ஹைட்ராலிக் என்பது அதிக பிரஷருக்கு உட்பட்ட திரவங்கள் மூலம் இயக்கப்படும் ஒரு கருவியாகும்0 இந்த திரவங்களின் பிரஷர் குறைந்து இருந்தால் இந்த ஹைட்ராலிக் செயல்படுவதில் பிரச்சனை ஏற்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது.
இல்லையென்றால் ஹைட்ராலிக் மூலம் மடங்கும் இடத்தில் வேறு ஏதாவது பொருட்கள் இருந்தாலும் அது தட்டுப்பட்டு ஹைட்ராலிக் செயல்படாமல் சரியாக மடங்காமல் போக வாய்ப்பு இருக்கிறது. இதற்கான உண்மையான காரணம் விசாரணைக்கு பின்னர் தான் தெரிய வரும்? இதில் ஹைட்ராலிக் பிரஷர் குறைவாக இருந்தால் விமானத்தை எடுக்கும் முன்பே விமானிக்கு தெரிந்திருக்கும். இடையில் ஏதாவது பொருட்கள் இருந்தால் கிரவுண்ட் ஸ்டாப்கள் இதை கவனித்து இருப்பார்கள் எங்கு பிரச்சினை நடந்தது என்பதை விசாரணைக்கு பிறகு தான் தெரிய வரும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விமானங்களில் இதுபோன்று ஹைட்ராலிக் பிரச்சனை ஏற்படுவது சாதாரண விஷயம் அல்ல. இது விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் விஷயமாகவும் அதிர்ஷ்டவசமாக ஹைட்ராலிக் மடங்காமல் லேண்டிங் செய்வதற்கு வசதியாக இருந்ததால் விமானம் எடையை குறைத்த பிறகு லேண்டிங் செய்ய முடிவு செய்யப்பட்டது. விமான நிறுவனங்கள் இதற்கு பின்னால் இருக்கும் காரணத்தை கண்டறிந்து அந்த பிரச்சனை இனி நடக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









