ஒரு சிலர் மட்டும் எப்படி குறைவான கட்டணத்தில் விமான டிக்கெட்டை புக் பண்றாங்க? அதுக்கு இந்த ரகசியம் தெரியணும்!

விமானங்களில் டிக்கெட் விலை மிகவும் அதிகம் என்பதால், பலர் விமான பயணத்தை தவிர்த்து வருகின்றர்.

Recommended Video

New Maruti Brezza Tamil Review | ஆட்டோமேட்டிக் செயல்திறன், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா

ஆனால் இந்தியாவில் மிகவும் குறைவான கட்டணத்தில் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்கு நிறைய ட்ரிக்ஸ் இருக்கிறது. அவற்றை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒரு சிலர் மட்டும் எப்படி குறைவான கட்டணத்தில் விமான டிக்கெட்டை புக் பண்றாங்க? அதுக்கு இந்த ரகசியம் தெரியணும்!

ஒரு முறையாவது விமானத்தில் பறந்து பார்த்து விட வேண்டும் என்னும் ஆசை கிட்டத்தட்ட அனைவருக்குமே உள்ளது. ஆனால் விமான டிக்கெட்களின் விலை மிகவும் அதிகம் என்பதால், அனைவராலும் அந்த ஆசையை நிறைவேற்றி கொள்ள முடிவதில்லை. எனினும் விமானத்தில் மிகவும் குறைவான கட்டணத்தில் பயணம் செய்வதற்கு ஒரு சில வழிகள் இருக்கின்றன.

ஒரு சிலர் மட்டும் எப்படி குறைவான கட்டணத்தில் விமான டிக்கெட்டை புக் பண்றாங்க? அதுக்கு இந்த ரகசியம் தெரியணும்!

இந்த வழிகளை பின்பற்றினால், மிகவும் குறைவான கட்டணத்தில் உங்களால் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும். இந்த வழிகள் பலருக்கும் தெரிவதில்லை. எனவே அவர்கள் அதிக கட்டணம் செலுத்தி விமான பயணங்களை மேற்கொள்கின்றனர். இதில், நீங்களும் ஒருவர் என்றாலோ அல்லது குறைவான செலவில் விமானத்தில் பறக்க வேண்டும் என விரும்புபவர் என்றாலோ இந்த செய்தி உங்களுக்குதான்.

ஒரு சிலர் மட்டும் எப்படி குறைவான கட்டணத்தில் விமான டிக்கெட்டை புக் பண்றாங்க? அதுக்கு இந்த ரகசியம் தெரியணும்!

பொதுவாக திங்கள் கிழமை காலை நேரங்களில் முக்கிய நகரங்களுக்கான விமான டிக்கெட்களின் விலை மிக அதிகமாக இருக்கும். வாரத்தின் முதல் நாளில், தொழில் ரீதியாக நிறைய பேர் விமானங்களில் பயணம் செய்வார்கள் என்பதுதான் இதற்கான காரணம். அதேபோல் வெள்ளி கிழமை மாலைகளில், முக்கிய நகரங்களில் இருந்து பலர் விமான பயணங்களை மேற்கொள்வார்கள்.

ஒரு சிலர் மட்டும் எப்படி குறைவான கட்டணத்தில் விமான டிக்கெட்டை புக் பண்றாங்க? அதுக்கு இந்த ரகசியம் தெரியணும்!

இதுவும் அன்றைய தினத்தில் விமான டிக்கெட் கட்டணங்களை உயர்த்தி விடும். எனவே இந்த அவசரத்தை நீங்கள் தவிர்த்தால், குறிப்பிடத்தக்க அளவில் பணத்தை சேமிக்க முடியும். நீங்கள் விமான பயணங்களை மேற்கொள்வதாக இருந்தால், செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் டிக்கெட்களை முன்பதிவு செய்யுங்கள். இந்த 3 நாட்களிலும் விமான டிக்கெட்களின் விலை மலிவாக இருக்கும்.

ஒரு சிலர் மட்டும் எப்படி குறைவான கட்டணத்தில் விமான டிக்கெட்டை புக் பண்றாங்க? அதுக்கு இந்த ரகசியம் தெரியணும்!

இதேபோல் பண்டிகை சமயங்களில் விமானங்களில் பயணம் செய்பவர்கள், பண்டிகை தினத்தில் டிக்கெட்டை முன்பதிவு செய்தால், ஓரளவிற்கு பணத்தை சேமிக்கலாம். அதாவது தீபாவளி என்றால், தீபாவளி நாளிலேயே டிக்கெட்டை முன்பதிவு செய்யுங்கள். பெரும்பாலான பயணிகள் பண்டிகைக்கு முன்னதாகவே வீடு அல்லது சுற்றுலா செல்லும் இடங்களுக்கு சென்று சேர்ந்து விட வேண்டும் என விரும்புவார்கள்.

ஒரு சிலர் மட்டும் எப்படி குறைவான கட்டணத்தில் விமான டிக்கெட்டை புக் பண்றாங்க? அதுக்கு இந்த ரகசியம் தெரியணும்!

எனவே பண்டிகை நாளில் விமான டிக்கெட்களின் விலை சற்று மலிவாக இருக்கும். அதேபோல் முன்கூட்டியே டிக்கெட்களை முன்பதிவு செய்வதன் மூலமும் பணத்தை சேமிக்கலாம். இது தெரிந்த விஷயம்தானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆம், உண்மைதான். கடைசி நேரத்தை காட்டிலும் முடிந்த அளவிற்கு முன்கூட்டியே முன்பதிவு செய்தால், டிக்கெட் விலை குறைவாக இருக்கும் என்பது பலருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.

ஒரு சிலர் மட்டும் எப்படி குறைவான கட்டணத்தில் விமான டிக்கெட்டை புக் பண்றாங்க? அதுக்கு இந்த ரகசியம் தெரியணும்!

ஆனால் பொதுவாக இந்த விஷயம் பலருக்கும் தெரியுமே தவிர, எவ்வளவு நாட்களுக்கு முன்னால் முன்பதிவு செய்ய வேண்டும்? முன்கூட்டியே முன்பதிவு செய்வதற்கும், கடைசி நேரத்தில் முன்பதிவு செய்வதற்கும் விலையில் எவ்வளவு மடங்கு வித்தியாசம் வரும்? என்பது போன்ற கேள்விகளுக்கு பலருக்கும் மிகவும் துல்லியமாகவும், விரிவாகவும் பதில் தெரியாது.

ஒரு சிலர் மட்டும் எப்படி குறைவான கட்டணத்தில் விமான டிக்கெட்டை புக் பண்றாங்க? அதுக்கு இந்த ரகசியம் தெரியணும்!

நீங்கள் முன்கூட்டியே திட்டமிட்டிருந்தால், 30-90 நாட்களுக்கு முன்னதாகவே விமான டிக்கெட்களை முன்பதிவு செய்து விடுங்கள். விமானம் புறப்படும் நாளுக்கு முந்தைய கடைசி 2-3 வாரங்களில், டிக்கெட்களின் விலை கிடுகிடுவென உயர தொடங்கி விடும். எனவேதான் முன்கூட்டியே திட்டமிட்டு, விமான டிக்கெட்களை முன்பதிவு செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறது.

ஒரு சிலர் மட்டும் எப்படி குறைவான கட்டணத்தில் விமான டிக்கெட்டை புக் பண்றாங்க? அதுக்கு இந்த ரகசியம் தெரியணும்!

ஒரு சில மாதங்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யப்படும் டிக்கெட் விலையுடன் ஒப்பிடும்போது, உடனடியாக பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டின் விலை, 2-4 மடங்கு வரை அதிகமாக இருக்கும். எனவே நீங்கள் முன்கூட்டியே விமான டிக்கெட்களை முன்பதிவு செய்து விட்டால், பல ஆயிரங்களை மிச்சம் பிடிக்க முடியும்.

ஒரு சிலர் மட்டும் எப்படி குறைவான கட்டணத்தில் விமான டிக்கெட்டை புக் பண்றாங்க? அதுக்கு இந்த ரகசியம் தெரியணும்!

உதாரணத்திற்கு விமானம் புறப்படும் நாளில் நீங்கள் முன்பதிவு செய்யும் டிக்கெட்டின் விலை 12-14 ஆயிரம் ரூபாய் என்று வைத்து கொள்வோம். ஆனால் நீங்கள் ஒரு சில மாதங்களுக்கு முன்னரே முன்பதிவு செய்தால், இதே டிக்கெட்டை தோராயமாக வெறும் 5 ஆயிரம் ரூபாய் என்ற விலையிலேயே வாங்கி விடலாம். எவ்வளவு பெரிய வித்தியாசம் வருகிறது பாருங்கள்.

ஒரு சிலர் மட்டும் எப்படி குறைவான கட்டணத்தில் விமான டிக்கெட்டை புக் பண்றாங்க? அதுக்கு இந்த ரகசியம் தெரியணும்!

ஆனால் இருக்கைகளை நிரப்புவதற்கு போதுமான கால அவகாசம் இருக்கும் என்பதால், விமான நிறுவனங்கள் அனைத்து பயணிகளுக்கும் மிகவும் குறைவான விலையில் டிக்கெட்களை விற்பனை செய்யாது. முதல் ஒரு சில இருக்கைகளுக்கு மட்டுமே மிகவும் குறைவான விலையில் டிக்கெட் விற்பனை செய்யப்படும். அதாவது முதலில் முன்பதிவு செய்யப்படும் 15-20 இருக்கைகளுக்கான டிக்கெட் விலை மட்டுமே குறைவாக இருக்கும்.

ஒரு சிலர் மட்டும் எப்படி குறைவான கட்டணத்தில் விமான டிக்கெட்டை புக் பண்றாங்க? அதுக்கு இந்த ரகசியம் தெரியணும்!

அதன்பின் விமான நிறுவனங்கள் டிக்கெட் விலையை உயர்த்த தொடங்கி விடும். எனவே முடிந்தவரைக்கும் முன்கூட்டியே டிக்கெட்களை முன்பதிவு செய்து விடுங்கள். இங்கே நாங்கள் கூறியுள்ள எளிய வழிகளை பின்பற்றினாலே, உங்கள் விமான பயண கனவை மிகவும் குறைவான செலவில் நிறைவேற்றி கொள்ள முடியும்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 14, 2022, 14:33 [IST]
English summary
Tricks to book cheap flight tickets in india
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+