மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்

அனிமல் (Animal) திரைப்படம் சமீபத்தில் வெளியாகி, மாபெரும் வெற்றியை பெற்றது. ரன்பீர் கபூர் (Ranbir Kapoor) மற்றும் ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandana) உள்பட பிரபலமான நடிகர், நடிகைகள் பலரும் அனிமல் திரைப்படத்தில் நடித்திருந்தனர். கூடவே திருப்தி டிம்ரி (Tripti Dimri) போன்ற நடிகைகளையும் அனிமல் திரைப்படத்தில் நம்மால் பார்க்க முடிந்தது.

அனிமல் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு திருப்தி டிம்ரி அவ்வளவு பிரபலம் கிடையாது. ஆனால் அனிமல் திரைப்படத்திற்கு பிறகு 'நேஷனல் க்ரஷ்' (National Crush) என ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு அவர் நாடு முழுக்க பிரபலமடைந்து விட்டார். இத்தனைக்கும் அனிமல் திரைப்படத்தில் திருப்தி டிம்ரி-யின் கதாபாத்திரம் சிறியதுதான்.

Range Rover Sport

எனினும் தனது அழகு மற்றும் நடிப்பால் அவர், ரசிகர்களை கவர்ந்து விட்டார். இந்த சூழலில் திருப்தி டிம்ரி-யின் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதில், ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் (Range Rover Sport) காரில், திருப்தி டிம்ரி பயணிப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

இது மிகவும் பிரபலமான ஒரு எஸ்யூவி (SUV) ரக கார் ஆகும். இந்தியாவில் பிரபல மனிதர்கள் பலரும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி காரை வைத்துள்ளனர். இதில், திருப்தி டிம்ரி உடன் அனிமல் திரைப்படத்தில் நடித்திருந்த பாபி தியோல் (Bobby Deol) மிகவும் முக்கியமானவர். அவர் தனது ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரில் பயணிக்கும் வைரல் வீடியோ ஒன்றும் சமீபத்தில் இணையத்தில் வைரலானது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Tripti Dimri Spotted In Range Rover Sport

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரின் ஆரம்ப விலையே 1.69 கோடி ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையோ 2.80 கோடி ரூபாயாக உள்ளது. இத்தனைக்கும் இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) மட்டுமே. ஆன்-ரோடு விலை (On-road Price) இன்னும் கூடுதலாக வரும்.

ஆனால் திருப்தி டிம்ரி பயன்படுத்தியது, யூஸ்டு கார் (Used Car) என கூறப்படுகிறது. ஆனால் இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் உள்ளது. திருப்தி டிம்ரி இதற்கு முன்பு மிகவும் சாதாரணமான ரெனால்ட் டஸ்டர் (Renault Duster) காரைதான் பயன்படுத்தி வந்தார். மும்பை விமான நிலையத்திற்கு (Mumbai Airport) கூட தனது ரெனால்ட் டஸ்டர் காரில் திருப்தி டிம்ரி வந்துள்ளார்.

ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காருடன் ஒப்பிடும்போது, ரெனால்ட் டஸ்டர் மிகவும் சாதாரணமானது. எனவே இதை திருப்தி டிம்ரி-யின் வளர்ச்சியாகவே நாம் கருத வேண்டும். ஆனால் இந்திய சந்தையில் ரெனால்ட் டஸ்டர் கார் தற்போது விற்பனையில் இல்லை. பல்வேறு காரணங்களால் அதன் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது.

எனினும் ரெனால்ட் நிறுவனம் கூடிய விரைவில் டஸ்டர் காரின் புதிய தலைமுறை மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இது ஒரு சமயத்தில் மிகவும் பிரபலமாக இருந்த கார் என்பதால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அனிமல் திரைப்படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்கு பிறகு, திருப்தி டிம்ரி பாலிவுட் (Bollywood) கடந்து, இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்து விட்டார். எனவே வரும் காலங்களில் அவர் இன்னும் நிறைய விலை உயர்ந்த சொகுசு கார்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 27, 2024, 13:00 [IST]
English summary
Tripti dimri spotted in range rover sport suv viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+