ஒரே படத்துல தமிழ்நாட்டையே கெறங்கடிச்ச நடிகையா இது! பல கோடி சொத்து இருந்தும் பைக் டாக்ஸில சாதாரணமா போறாங்க!

திரையுலகை சேர்ந்த நடிகைகளின் வருமானம் அதிகம். எனவே ஆடம்பரமான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திரையுலக நடிகைகள் சொகுசு கார்களில்தான் பயணம் செய்கின்றனர். ஆடி (Audi), மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz), பிஎம்டபிள்யூ (BMW), லேண்ட் ரோவர் (Land Rover), ஜாகுவார் (Jaguar) போன்ற பிராண்டுகளின் கார்கள்தான், நடிகைகளின் முதன்மையான தேர்வாக இருக்கின்றன. பிரபலமான நடிகைகளை இந்த பிராண்டுகளின் கார்களில் அடிக்கடி காண முடியும். விலை உயர்ந்த சொகுசு கார்களில் நடிகைகள் பயணம் செய்தது தொடர்பான செய்திகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் கூட நீங்கள் அடிக்கடி வாசித்திருப்பீர்கள்.

ஆனால் ஒரு சில நடிகைகள் மட்டும் இதற்கு விதிவிலக்கு. கோடிகளில் சம்பளம் வாங்கினாலும், அவர்கள் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுள்ளனர். இதற்கு பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் (Shraddha Kapoor) ஒரு உதாரணம். இவர் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு சுமார் 5 கோடி ரூபாயை சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது.

Tripti Dimri

அத்துடன் விளம்பரங்கள் மற்றும் மாடலிங் மூலமும் ஷ்ரத்தா கபூர் வருமானம் ஈட்டுகிறார். இதன் மூலம் அவரது சொத்து மதிப்பு (Net Worth) சுமார் 130 கோடி ரூபாயாக உள்ளது. இவ்வளவு சொத்து இருந்தாலும் கூட, ஷ்ரத்தா கபூர் மிகவும் எளிமையான மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) காரில் பயணம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

ஷ்ரத்தா கபூர் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் நிறைய இடங்களுக்கு வந்து சென்றதை கடந்த காலங்களில் நம்மால் பார்க்க முடிந்துள்ளது. இந்த வரிசையில் தற்போது ஒரு நடிகை, ஷ்ரத்தா கபூரை விட மிகவும் எளிமையான காரியம் ஒன்றை செய்துள்ளார். இது குறித்த சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

Tripti Dimri Uses Bike Taxi Without Helmet

சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று வேகமாக பரவி வருகிறது. யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், பிரபல நடிகை ஒருவர் பைக்கின் பின்னால் அமர்ந்து பயணம் செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த வைரல் வீடியோவில் நாம் காணும் நபர் திருப்தி டிம்ரி (Tripti Dimri) ஆவார்.

கடந்த 2023ம் ஆண்டின் இறுதியில் வெளியான அனிமல் (Animal) திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்தி டிம்ரி மிகவும் பிரபலமானார். இந்த திரைப்படம் மூலம் தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது. எனவே தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக திருப்தி டிம்ரி உருவெடுத்து வருகிறார்.

இருப்பினும் அவர் பைக்கில் மிகவும் எளிமையாக பயணம் செய்திருப்பது கவனம் ஈர்த்துள்ளது. அனேகமாக திருப்தி டிம்ரி பயணம் செய்தது பைக் டாக்ஸியாக (Bike Taxi) இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய நிலையில் ஓலா (Ola), ஊபர் (Uber) மற்றும் ரேபிடோ (Rapido) உள்ளிட்ட நிறுவனங்கள் பைக் டாக்ஸி சேவையை வழங்கி வருகின்றன.

கார் மற்றும் ஆட்டோவை விட கட்டணம் குறைவு மற்றும் போக்குவரத்து நெரிசல் பிரச்னை இருந்தாலும் கூட எளிதாக சென்று விடலாம் போன்ற காரணங்களால் மக்கள் பலரும் பைக் டாக்ஸியை பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதே காரணத்திற்காகதான் திருப்தி டிம்ரியும் பைக் டாக்ஸியை பயன்படுத்தியிருப்பார் என கூறப்படுகிறது.

திருப்தி டிம்ரியிடம் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் (Range Rover Sport) மற்றும் போர்ஷே கேயென்னே (Porsche Cayenne) போன்ற சொகுசு கார்கள் எல்லாம் இருக்கின்றன. அவரது சொத்து மதிப்பு சுமார் 30 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் அவர் எளிமையான முறையில் பைக் டாக்ஸியில் பயணம் செய்திருப்பது ஆச்சரியமான ஒரு விஷயம்தான்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: திருப்தி டிம்ரியின் எளிமை பாராட்டப்பட வேண்டிய ஒரு விஷயம்தான் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. இருப்பினும் அவர் ஹெல்மெட் (Helmet) அணியாமல் பைக்கில் பயணம் செய்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவை பார்க்கும்போது, பைக்கை ஓட்டுபவர் மட்டுமே ஹெல்மெட் அணிந்துள்ளார்.

ஆனால் பின்னால் அமர்ந்திருந்த திருப்தி டிம்ரி ஹெல்மெட் அணியவில்லை. பிரபலமான மனிதர்கள் இது போன்ற தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்த கூடாது என நாங்கள் கருதுகிறோம். இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறையை அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து.

More from DriveSpark

Article Published On: Thursday, April 3, 2025, 13:21 [IST]
English summary
Tripti dimri uses bike taxi without helmet viral video all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+