முகத்தை மூடாம வந்திருந்தா ஊரே கண்ணு வச்சிருக்கும்.. முகத்தை மூடி கொண்டு 12லட்ச ரூபா ஸ்கூட்டருல வந்தது அவங்களா!
ஆண் நண்பருடன் இளம் நடிகை விலை உயர்ந்த ஸ்கூட்டரில் வலம் வந்த வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. வீடியோ ரசிகர்களைக் கவரும் வகையில் இருந்தாலும் அவர் தற்போது சர்ச்சையில் சிக்கியிருக்கின்றார். யார் அந்த நடிகை?.. எதனால் சர்ச்சையில் சிக்கியிருக்கின்றார்?.. அவர் பயணித்த ஸ்கூட்டரின் விலை ரூ. 12 லட்சம் என சொல்லப்படுவது உண்மைதானா?.. மற்றும் அப்படி என்ன ஸ்கூட்டர் அது?.. அதன் சிறப்பம்சங்கள் என்ன என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
பாலிவுட் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்துக் கொண்டிருக்கின்றார் திரிப்தி டிம்ரி. இவரே தற்போது ஆண் நண்பருடன் ஸ்கூட்டரில் சென்றதன் காரணமாக சர்ச்சையில் சிக்கி இருக்கின்றார். ஆண் நண்பருடன் சென்றதற்காக அல்ல, அவர் தலைக் கவசம் அணியாததன் காரணத்தினாலேயே சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

வெளியில் முகம் தெரியக் கூடாது என்பதற்காக முகத்தை மாஸ்க் கொண்டு மூடிய அவருக்கு, இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது தலைக் கவசம் அணிய வேண்டும் என்பது தெரியாதா என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. அவர் மட்டுமல்ல அவரின் ஆண் நண்பரும் தலைக் கவசம் அணியவில்லை.
இருவரும் தலைக்கவசம் அணியாமல் பயணித்த காரணத்தினாலேயே தற்போது இந்த இந்தி பட நடிகை சர்ச்சையில் சிக்கி உள்ளார். அதேவேளையில், இவர் பயணித்திருப்பது ரூ. 12 லட்சம் விலைக் கொண்ட ஸ்கூட்டர் என்பதும் தெரிய வந்திருக்கின்றது. அப்படி என்ன ஸ்கூட்டர் மாடல் அது என்று-தானே கேக்குறீங்க.
ஹோண்டா எக்ஸ் ஏடிவி 750 (Honda X ADV 750) ஸ்கூட்டர் மாடலே அது ஆகும். ஆனால், இது இந்தியாவில் விற்பனையில் இல்லை என்பது கவனிக்கத்தகுந்தது. அதேவேளையில், இங்கிலாந்து உள்ளிட்ட உலக நாடுகளில் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கின்றது. எனவே இந்த வாகனத்தை பிரத்யேகமாக நடிகை இறக்குமதி செய்திருக்கலாம் என தெரிகின்ரது.
எக்ஸ் ஏடிவி 750 ஓர் அட்வென்சர் வகை ஸ்கூட்டர் மாடல் ஆகும். இது ஓர் ஆல்ரவுண்டர் அட்வென்சர் ஸ்கூட்டர் என்பது கவனிக்கத்தகுந்தது. அதாவது, ஓர் பைக்கை போல இது செயல்படும். குறிப்பாக, ஆஃப்-ரோடுகளைகூட இது சுலபமாக கையாளும் என கூறப்படுகின்றது. இத்தகைய ஸ்கூட்டரிலேயே மும்பையின் நெரிசல் மிகுந்த சாலையில் திரிப்தி டிம்ரி பயணித்திருக்கின்றார்.

இது அனைத்து விதமான சாலைகளையும் சமாளிக்கும் திறன் கொண்ட ஸ்கூட்டர் மட்டுமல்ல, அதிக கவர்ச்சியான லுக் கொண்ட ஸ்கூட்டரும்கூட. குறிப்பாக பிரீமியம் அம்சங்களை மிக தாராளமாக இந்த வாகனம் கொண்டிருக்கும். தொடர்ந்து, ஆற்றலை வெளியேற்றுவதிலும் இந்த ஸ்கூட்டர் மிக சிறந்ததாகக் காட்சியளிக்கின்றது.
இந்த ஸ்கூட்டர் மாடலின் ஸ்பெஷல் எடிசனையே சமீபத்தில் ஹோண்டா நிறுவனம் இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தியது. வெறும் 30 யூனிட்டுகள் மட்டுமே அது விற்பனைக்காக தயார் செய்யப்பட்டன. வழக்கமான எக்ஸ்-ஏடிவி-யைக் காட்டிலும் அதிக கவர்ச்சியான அம்சங்களைத் தாங்கிய ஓர் வாகனமாகவே இதன் சிறப்பு பதிப்பு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது என்பது கவனிக்கத்தகுந்தது.
அதாவது கைகளுக்கு சூடான அனுபவத்தை வழங்கும் திறன் கொண்ட கிரிப், பனி மின் விளக்கு, முன் மற்றும் பின் பக்கத்தில் கிராஷ் குவார்டுகள் என ஏகப்பட்ட அம்சங்களை வழங்கியே அதனை விற்பனைக்குக் கொண்டு வந்தது. இதுதவிர, க்ரூஸர் கனட்ரோல், கம்ஃபோர்ட்டான டிரைவல் அனுபவத்தை வழங்கும் இருக்கைகள், விண்ட்ஸ்கிரீன் மற்றும் பின் பக்க லிட்-டிற்கான சுவிட்ச் உள்ளிட்டவை இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
எஞ்சினைப் பொருத்த வரை இந்த ஸ்கூட்டரில் 745சிசி திறன் கொண்ட லிக்யூடு கூல்டு பாரல்லல் ட்வின் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 58பிஎச்பி பவரை உருவாக்கும் திறன் கொண்டது. டிசிடி கியர்பாக்ஸிற்கு பதிலாக சிவிடி கியர்பாக்ஸே இந்த ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இத்துடன், நான்கு விதமான ரைடிங் மோட்கள், யுஎஸ்டி ஃபோர்க் மற்றும் டிஸ்க் பிரேக் உள்ளிட்ட அம்சங்களும் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்தது போன்ற பல்வேறு அம்சங்களை தாங்கி இருக்கின்ற காரணத்தினாலேயே இந்த ஸ்கூட்டருக்கு அதிகபட்ச விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இத்தகைய விலை உயர்ந்த வாகனத்திலேயே ஹெல்மெட் பயணித்திருக்கின்றார் நடிகை. ஆகையால், விரைவில் அவருக்கு அபராதம் விதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








