த்ரிஷாவுக்கு 7 கோடி மதிப்புடைய ரோல்ஸ்ராய்ஸ் காரை பரிசளிக்கும் வருங்கால கணவர்!

By Saravana

தென் இந்திய சினிமா உலகின் லேட்டஸ்ட் பரபரப்பு நடிகை த்ரிஷாவின் திருமணம்தான். சென்னையை சேர்ந்த தொழிலதிபர் வருண் மணியனை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக த்ரிஷா சமூக வலைதளத்தின் மூலமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

வரும் 23ந் தேதி திருமண உறுதிப்படுத்தும் நிகழ்வு நடைபெற இருப்பதாகவும் த்ரிஷா தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நிச்சயதார்த்த விழாவின்போது த்ரிஷாவுக்கு ரோல்ஸ்ராய்ஸ் காரை அவரது வருங்கால கணவர் வருண் மணியன் பரிசாக வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 ரோல்ஸ்ராய்ஸ் குடும்பத்தில்...

ரோல்ஸ்ராய்ஸ் குடும்பத்தில்...

கோலிவுட் சினிமா உலகில் இயக்குனர் ஷங்கர், நடிகர் விஜய்யிடம் ரோல்ஸ்ராய்ஸ் கார் உள்ளது. த்ரிஷாவுக்கு ரோல்ஸ்ராய்ஸ் கிடைத்தால், ரோல்ஸ்ராய்ஸ் குடும்பத்தில் இணையும் மூன்றாவது சினிமா பிரபலம் என்ற பெருமையை த்ரிஷா பெறுவார்.

கார் மாடல்

கார் மாடல்

கருப்பு நிற ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் காரை த்ரிஷாவுக்கு அவரது வருங்கால கணவர் வருண் மணியன் பரிசளிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஸ்ட்லி கிஃப்ட்

காஸ்ட்லி கிஃப்ட்

ரூ.7 கோடி மதிப்பு கொண்ட அந்த ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் காரை த்ரிஷாவுக்கு பரிசளிக்கப்பட உள்ளதாம். ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் காரின் சிறப்பம்சங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

காஸ்ட்லி ரோல்ஸ்ராய்ஸ்

காஸ்ட்லி ரோல்ஸ்ராய்ஸ்

ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் விற்பனை செய்யும் கோஸ்ட், ரயீத் கார்களைவிட அதிக விலை கொண்ட ரோல்ஸ்ராய்ஸ் கார் மாடல் ஃபான்டம். இந்தியாவில் ரூ.4.60 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சக்திவாய்ந்த கார்

சக்திவாய்ந்த கார்

ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் காரில் 453 பிஎச்பி பவரையும், 720என்எம் டார்க்கையும் அளிக்கும் 6,749சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டது. 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.

இருக்கை வசதி

இருக்கை வசதி

ஓட்டுபவர் உள்பட 4 பேர் அமர்ந்து செல்வதற்கான இருக்கை வசதி கொண்டது. 395 லிட்டர் பூட்ரூம் கொண்ட கார் மாடல். மேலும், இந்த கார் 2,580 கிலோ எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கஸ்டமைஸ் வசதி

கஸ்டமைஸ் வசதி

எந்தவொரு வண்ணத்திலும் இந்த காரை ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். மேலும், வாடிக்கையாளர்கள் விரும்பும் அனைத்து வசதிகளுடன் இந்த கார் கஸ்டமைஸ் செய்து தரப்படுகிறது. சிலரின் விருப்பப்படி, இருக்கைகள், டேஷ்போர்டில் மணமக்கள் பெயர்களையும் பொறித்து தருகிறது ரோல்ஸ்ராய்ஸ்.

ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம்

ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம்

த்ரிஷாவுக்கு பரிசாக வரப்போகும் ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் காரின் முழுமையான விபரங்களை கீழே உள்ள இணைப்பை சொடுக்கி தெரிந்துகொள்ளலாம்.

ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம்!

More from DriveSpark

Article Published On: Saturday, January 10, 2015, 11:34 [IST]
English summary
As per the sources, actress Trisha is going to get lavish swanky vehicle from her would-be husband. Varun Manian is likely to gift Trisha a beautiful, wonderful jet black color Rolla Royce Phantom car which is worth of Rs 7 Crores. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+