யார் மீது தப்புனு சொல்ல முடியல! பல லட்ச ரூபாய் பைக் என்றும் பார்க்காமல் பெண் செய்த செயல்
மும்பையில் பேருந்து நிறுத்தத்திற்கு மிக அருகில் சென்ற சூப்பர்பைக் ரைடர் (Superbike Rider) ஒருவரை அந்த வழியாக சென்ற பெண் ஒருவர் இடைமறித்து தக்க பாடம் புகட்டியுள்ளார். வயதான பெண்மணியாக விளங்கும் இவர் சைலண்டாக பைக் ரைடரை கலாய்க்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி நெட்டிசன்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால், இதில் யார் மீது தவறு உள்ளது என்பதை நாம் மறந்துவிடுகிறோம். வாருங்கள் இந்த சம்பவத்தை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பிரபலமான சியட் டயர் நிறுவனத்தின் ஒரு விளம்பரம் தான் இப்போது எனக்கு நினைவிற்கு வருகிறது. 'சாலை முழுக்க பைத்தியக்காரர்களால் நிரம்பி உள்ளது', ஆதலால் எங்களது டயர்களை வாங்கி பயன்படுத்துங்கள் என்பதுபோல அந்த விளம்பரம் ஒளிப்பரப்பப்பட்டது. அது உண்மைதான் என்பதுபோல் பல சம்பவங்கள் தினந்தோறும் நம் நாட்டின் சாலைகளில் அரங்கேறி வருகின்றன.

குறிப்பாக, சென்னை, மும்பை போன்ற பெரும் மாநகரங்களில் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க பல்வேறு விதமான யுக்திகளை வாகன ஓட்டிகள் கையாளுவதை பார்த்து இருப்பீர்கள். குறிப்பாக, 2-வீலர் ஓட்டிகள் மற்ற வாகனங்களுக்கு இடையேயான சந்துகளில் ஓட்டியே பல கிமீ தொலைவுகளை கடந்து விடுகின்றனர்.
அதேபோல், ஒரு சிலர் சாலையின் ஓரத்தில் பைக்கை ஓட்டியே சாலையில் முன்னேறி செல்வதையும் பார்த்திருக்கிறோம். அவ்வாறுதான், இங்கு ஒருவர் சாலையின் ஓரமாக தனது சூப்பர்பைக்கில் சென்றுள்ளார். சாலையின் ஓரத்தில் இடிப்பதை போல பைக் ஓட்டி சென்றாலே பாதசாரிகளாக இருப்பவர்களில் நிறைய பேருக்கு எரிச்சலாக இருக்கும்.

சில நேரங்களில், இதன் காரணமாகவே பைக் ஓட்டி உடன் பாதசாரிகள் வாக்குவாதத்தில் ஈடுப்பவதை பார்த்திருக்கிறோம். அவ்வாறுதான், மும்பையில் சூப்பர்பைக்கில் சென்றுக் கொண்டிருந்தவருடன் இந்த பெண்மணி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். சாலைக்கு அருகே இருந்த பேருந்து நிறுத்தத்தில் நின்றுக் கொண்டிருந்த இந்த பெண்ணிற்கு அருகே இந்த சூப்பர்பைக் ஓட்டி சென்றுள்ளார்.
இதனை பார்த்ததும் எரிச்சல் அடைந்த இந்த பெண் பைக்கை செல்ல விடாமல் இடைமறித்தப்படி நின்றார். சில வினாடிகளுக்கு எதுவும் பேசாமல் பைக் ஓட்டியை பார்த்தவாறு நின்றுக் கொண்டிருந்தவர் திடீரென "மக்கள் நடப்பதற்கு சாலையில் கொஞ்சம் ஆவது இடம் கொடுங்கள்" என கத்த ஆரம்பித்து விட்டார்.

இதனை டிரையம்ப் ஸ்ட்ரீட் டிரிபிள் ஆர்.எஸ் (Triumph Street Triple RS) என்கிற சூப்பர் பைக்கில் எதிர்கொண்டவர் சம்பவத்தை வீடியோவாக காட்சிப்படுத்தி தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிட, அது வைரலாகி வருகிறது. இந்த டிரையம்ப் சூப்பர்பைக் ஓட்டியும் அந்த பெண்மணி உடன் நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுப்படுவதையும் வீடியோவில் கேட்க முடிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதில் யாருடைய தவறு உள்ளது என்றுபார்த்தால், அரசாங்கத்தின் தவறே உள்ளது. ஏனெனில், பைக் ரைடர் முறையாக சாலையில் தான் சென்றுள்ளார். அந்த பெண்மணி தான் பேருந்து நிறுத்தத்தில் நிற்கிறேன் என்கிற பெயரில் சாலையில் நின்றுக் கொண்டிருந்துள்ளார். அதற்காக அவரையும் நம்மால் குறை சொல்ல முடியாது. ஏனெனில், மக்கள் தொகை அதிகம் நம் இந்தியா போன்ற நாட்டில் பேருந்து நிறுத்தத்திற்கான நிழற்குடையை இன்னும் பெரியதாக வழங்குவது அவசியம் ஆகும்.


Click it and Unblock the Notifications









