Just In
- 1 hr ago
நடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...
- 2 hrs ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 2 hrs ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 3 hrs ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- News
திருத்தணியில் கையில் வெள்ளி வேலுடன் தொண்டர்களுக்கு காட்சி அளித்த மு.க ஸ்டாலின்
- Movies
கோடியில் புரளும் 'கார்த்தி'யின் இயக்குனர்கள்.. பின்னணி என்ன? அதிரடியாய் அலசும் இளம் விமர்சகர்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Lifestyle
உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த கசப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..!
- Sports
ஹப்பா கடைசியில் மனம் மாறிய சென்னை.. சிஎஸ்கே இறக்கிய பெரிய கேம் பிளான்.. கசிந்த தகவல்!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விலை உயர்ந்த பைக்கை பார்த்து வாயை பிளந்த போலீஸ்காரர்... ஓனர்கிட்ட கேட்டாரு பாருங்க ஒரு சந்தேகம்...
விலை உயர்ந்த பைக்கின் உரிமையாளரிடம், காவல் துறை அதிகாரி ஒருவர் தனது சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்டார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

காவல் துறையினர் ஆங்காங்கே வாகன தணிக்கை நடத்தி, வாகன ஓட்டிகளை நிறுத்தி விசாரிப்பது என்பது இந்திய சாலைகளில் பொதுவாக காணக்கூடிய விஷயம்தான். அப்படி காவல் துறையினரால் குறி வைக்கப்படும் நபர்களில், மிகவும் விலை உயர்ந்த சூப்பர் பைக்குகளை ஓட்டி வருபவர்கள் முக்கியமானவர்கள்.

பைக்கின் தோற்றம், சைலென்சர் எழுப்பும் சத்தம் உள்ளிட்ட காரணங்களால், சாலையில் அவர்கள் மட்டும் தனித்து தெரிவார்கள். சூப்பர் பைக்குகளை ஓட்டி வந்தவர்களுக்கு, பல்வேறு காரணங்களுக்காக காவல் துறையினர் அபராதம் விதித்த நிகழ்வுகள், கடந்த காலங்களில் ஏராளமான முறை நடைபெற்றுள்ளன. காவலர்கள் சிலர் அத்துமீறி நடந்து கொண்ட நிகழ்வுகளுக்கும் கூட உதாரணங்கள் உண்டு.

ஆனால் சில காவலர்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு. அதாவது சூப்பர் பைக்குகளை பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ள வேண்டும், அவற்றுடன் புகைப்படம் எடுத்து கொள்ள வேண்டும் என காவல் துறையை சேர்ந்த ஒரு சிலர் விருப்பப்படுகின்றனர். இதற்காகவே சூப்பர் பைக்குகளை ஓட்டி வருபவர்களை நிறுத்துகின்றனர்.

அப்படியான ஒரு சம்பவம் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இன்ஸ்டாகிராமில் iamautomotivecrazer என்ற பக்கத்தில், இது தொடர்பான காணொளி வெளியிடப்பட்டுள்ளது. காவலர்கள் சிலர் பைக்கை நோக்கி மெதுவாக நடந்து வந்து, பின் அதுதொடர்பான விபரங்களை கேட்பதை இந்த காணொளியில் பார்க்க முடிகிறது.

இதற்கு அந்த பைக்கின் உரிமையாளர், இது டிரையம்ப் டைகர் 800 (Triumph Tiger 800) எனவும், இது ஒரு அட்வென்ஜர் டூரர் மோட்டார்சைக்கிள் எனவும் விளக்கம் அளித்துள்ளார். அத்துடன் இது மூன்று சிலிண்டர் மோட்டார்சைக்கிள் எனவும் அதன் உரிமையாளர் கூறுகிறார். அதன்பின் ஒரு காவலர் பைக்கிற்கு மிக நெருக்கமாக வந்து, அதுபற்றி இன்னும் பல்வேறு விபரங்களை விவாதித்துள்ளார்.

அவர் அந்த பைக்கின் மீது மிகவும் ஆர்வம் உடையவராக இருந்தார். இந்த பைக்கில் எப்படி ஏறுவது? எனவும் அவர் சந்தேகம் எழுப்பினார். மற்ற வழக்கமான பைக்குகளுடன் ஒப்பிடும்போது, டிரையம்ப் டைகர் 800 பைக்கின் 'சீட்டிங் பொஷிஷன்' உயரமாக இருக்கும். இதனால் மற்ற பைக்குகளுடன் ஒப்பிடும்போது, டிரையம்ப் டைகர் 800 பைக்கை ஓட்டுவதும் வித்தியாசமாக இருக்கும்.

எனினும் இந்த பைக்கில் எப்படி ஏறுவது? என்பது குறித்து காவலருக்கு, பைக்கின் உரிமையாளர் விளக்கம் அளித்தார். முதலில் அந்த ரைடர் பைக்கை 'சைடு ஸ்டாண்டு' போட்டு நிறுத்தி விட்டார். அதன்பின் ஃபுட் ரெஸ்ட் மீது ஏறி நின்று, இருக்கைக்கு மேலே ஒரு காலை தூக்கி பைக்கின் மற்றொரு பக்கம் போட்டு அமர்ந்தார்.

டிரையம்ப் டைகர் 800 போன்ற பிரம்மாண்டமான அட்வென்ஜர் டூரர் பைக்கில் ஏறி அமர்வதற்கு அனைவரும் பயன்படுத்த வேண்டிய சரியான வழி இதுதான். ஆனால் இப்படி செய்வதால், சைடு ஸ்டாண்டின் ஆயுள் பாதிக்கப்படுமா? என அந்த காவலர் கேள்வி எழுப்பினார். இதற்கு அந்த பைக்கின் உரிமையாளர், அட்வென்ஜர் பைக்கில் ஏறுவதற்கு இதுதான் சரியான வழி என்று தெரிவித்தார்.

மேலும் எடையை தாங்கும் அளவிற்கு சைடு ஸ்டாண்டு வலிமையாக இருக்கும் எனவும் அவர் கூறினார். அதன் பின் அதே வழியை பயன்படுத்தி அந்த காவலரும் பைக்கில் ஏறி அமர்ந்தார். பொதுவாக ஒரு சில காவலர்கள் இதுபோன்ற பைக்குகளை பார்த்தால், சிறிது தூரம் ஓட்டி விட்டு வருவார்கள். ஆனால் இந்த காவலர் அப்படி ஓட்டினாரா? என்பது சரியாக தெரியவில்லை.