அப்படி போடு அருவாள! கார் டிரைவருக்கு தக்க பாடம் புகட்டிய லாரி டிரைவர்! இனி ஒருத்தரும் இதை செய்ய மாட்டாங்க!
இந்தியாவில் பண்டிகை காலம் (Festive Season) களைட்ட தொடங்கியுள்ளதால், மக்கள் பலரும் விடுமுறையை கொண்டாட மலை பகுதிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக மலை சாலைகளில் மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் (Traffic Jam) ஏற்பட தொடங்கியுள்ளது. சில சமயங்களில் வாகனங்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை கூட ஏற்படுகிறது.
ஆனால் இது போன்ற சமயங்களில் புத்திசாலித்தனமாக செயல்படுகிறேன் என்ற பெயரில் ஒரு சிலர், தவறான லேனில், அதாவது எதிர்திசையில் உள்ள லேனில் சென்று, குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர். இந்த தவறான யுக்தியை மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) காரின் டிரைவர் ஒருவரும் கடைபிடித்தார்.

ஆனால் அவரது திட்டம் வெற்றியடையவில்லை. அதற்கு பதிலாக லாரி டிரைவர் ஒருவரிடம் இருந்து, அவருக்கு தக்க பாடம் கிடைத்தது. இது குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி. யூடியூப் (YouTube) தளத்தில் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது பதிவிடப்பட்டுள்ளது.
மலையின் மீது ஏறுவதற்காக நிறைய வாகனங்கள் வரிசையில் காத்து கொண்டிருப்பதை இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால் வாகனங்கள் கீழே இறங்கி வரும் திசையில் இடம் காலியாக இருந்தது. அதற்காக நாம் அந்த லேனில் வாகனத்தை ஓட்டி செல்ல கூடாது. ஏனெனில் அந்த லேனில் வந்து கொண்டிருக்கும் வாகனங்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆனால் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் டிரைவர் இதை உணராமல், வாகனங்கள் கீழே இறங்கி வருவதற்கான லேனில், காரை ஓட்ட தொடங்கினார். அப்போது எதிர் திசையில் லாரி ஒன்று வந்தது. இதனால் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் டிரைவர் செய்வதறியாமல் திகைத்தார். இதற்கு பின் நடந்ததுதான் தரமான சம்பவமே.
லாரியின் டிரைவர், மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை பின்னோக்கி ஓட்ட வைத்தார். வேறு வழியே இல்லாமல் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரும் பின்னோக்கி நகர தொடங்கியது. ஆனால் அந்த காரின் டிரைவர் அப்போதும் திருந்தியதாக தெரியவில்லை. ஏனெனில் இடையில் சிறிய இடைவெளி கிடைத்தால் கூட புகுந்து விடலாம் என அவர் முயற்சி செய்தார்.
ஆனால் லாரி டிரைவர் அதற்கும் அனுமதிக்கவில்லை. தொடர்ந்து மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை பின்னோக்கி ஓட்ட வைத்தார். இந்த சம்பவம் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் உரிமையாளருக்கு தக்க பாடத்தை புகட்டியிருக்கும் என நாம் நம்பலாம். உண்மையில் இந்த சம்பவத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் டிரைவர் மீதுதான் தவறு.
பொறுமை இல்லாத காரணத்தால், கீழே இறங்கி வரும் வாகனங்களுக்கு அவர் தொந்தரவை ஏற்படுத்தியுள்ளார். எங்களை பொறுத்தவரையில் இந்த விஷயத்தில் லாரியின் டிரைவர் செய்தது முற்றிலும் சரி. இந்த வீடியோ வைரல் ஆக பரவி வரும் நிலையில், மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் டிரைவர் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்ற தகவல் வெளியாகவில்லை.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வீடியோவை வைத்து பார்க்கையில், பொறுமை இல்லாத காரணத்தால்தான், மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் டிரைவர் இப்படி செய்திக்க கூடும் என்பது நமக்கு தெரிய வருகிறது. அல்லது வேறு ஏதேனும் அவசரம் காரணமாக அவர் இப்படி செய்தாரா? என்பது நமக்கு உறுதியாக தெரியவில்லை.
மற்ற வாகன ஓட்டிகள் இப்படி நடந்து கொள்ள கூடாது என்ற பாடத்தை இந்த வீடியோ அனைவருக்கும் உணர்த்துகிறது. மலை பகுதி சாலைகள் என்றாலும் சரி அல்லது சமதள நகர சாலைகள் என்றாலும் சரி, இப்படி தவறான லேனில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் இதே போன்ற நிலைமை ஏற்படும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








