போலீசாரிடமிருந்து தப்ப காரை திருடி சாகசம் புரிந்த பலே திருடன்!
போலீசாரிடம் இருந்து தப்பிக்க எண்ணி தாருமாறாக காரை ஓட்டி பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளான் திருடன் ஒருவன். அது குறித்த தகவல்களை காணலாம்.
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் ஒரு மயிர்கூச்செரியும் கார் சேஸ் அரங்கேறியுள்ளது. போலீசாரிடம் இருந்து தப்பிக்க அதிவேகத்தில் காரில் சென்ற போது பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளான் திருடன் ஒருவன்.

காவல்துரையினர் திருடனை காரில் சேஸ் செய்யும் நிகழ்வுகள் அமெரிக்காவில் பொதுவாகவே அடிக்கடி அறங்கேறுவது தான். ஆனால் இங்கு நடந்திருக்கும் சம்பவம் சற்றே வினோதமானது.

அங்குள்ள லூசியானா மாகானத்தில் உள்ள சிறைச்சாலையில் இருந்து 18 வயதே நிரம்பிய கைதி ஒருவன் தப்பியுள்ளான். அவனை பிடிக்க காவல்துறையினர் துரத்திய போது டொயோடோ டகோமா மாடல் கார் ஒன்றினை அவன் திருடி அதிலேயே தப்பியுள்ளான்.

மணிக்கு 185 கிமீ வேகத்தில் சென்ற போது காரை கட்டுப்படுத்த முடியாமல் தினறினான் அச்சிறுவன். சாலையோரத்தில் இருக்கும் பள்ளம் ஒன்றில் தடுமாறிச் சென்றது கார்.

மணிக்கு 185 கிமீ வேகத்தில் சென்ற போது காரை கட்டுப்படுத்த முடியாமல் தினறினான் அச்சிறுவன். சாலையோரத்தில் இருக்கும் பள்ளம் ஒன்றில் தடுமாறிச் சென்றது கார்.

உணவகம் மீது மட்டுமல்லாமல் அதன் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் மீதும் திருடன் ஓட்டிச் சென்ற கார் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அக்காரில் இருந்த பெண்மணி சேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.
ஆனால் உணவகம் முற்றிலும் சேதமானது.
போக்குவரத்து காவல்துறையினரிடமிருந்து தப்பிக்க நினைத்து அதிவேகத்தில் சென்ற போது விபரீதமான சம்பவங்கள் இந்தியாவிலும் கூட ஏற்பட்டுள்ளன என்பது நினைவுகூறத்தக்கது.
புதிய மாருதி பலினோ ஆர்எஸ் காரின் படங்கள்:


Click it and Unblock the Notifications








