வேகமாக வந்து திடீர் பிரேக் போட்டதால் வந்த வினை... அப்பளம்போல் நொறுங்கிய டிரக்கின் ஜீப்!!
சீனாவில், ஒரு கோரமான சாலை விபத்து சமீபத்தில் நடந்தது. ராட்சத இரும்பு குழாய்களை ஏற்றி வந்த டிரக் ஒன்று, சாலை சந்திப்பில் திடீரென பிரேக் போட்டு நிறுத்த முயன்றபோது, எதிர்பாராத விதமாக பின்னால் இருந்த ராட்சத குழாய்கள் முன்னோக்கி பாய்ந்து அந்த டிரக்கின் கேபினை நசுக்கியது.
இதில், அந்த டிரக்கை ஓட்டி வந்த டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கோர விபத்து குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

விபத்து
சீனாவின், அன்ஹுய் மாகாணத்தில் உள்ள சூஸோ என்ற நகரில் இந்த விபத்து நடந்தது. அங்குள்ள சாலை சந்திப்பை கடக்க முற்பட்டபோது அந்த டிரக் விபத்தில் சிக்கியது.

வேகம்
சாலை சந்திப்பு அருகே டிரக் வேகமாக வந்தது. அப்போது, சிவப்பு விளக்கு போடப்பட்டதால், டிரக்கை நிறுத்த டிரைவர் சடன் பிரேக் போட்டு நிறுத்த முயன்றிருக்கிறார்.

எதிர்பாராத சம்பவம்
பிரேக் போட்ட வேகத்தில் பின்னால் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ராட்சத இரும்பு குழாய்கள் முன்னோக்கி வேகமாக பாய்ந்து, கண் இமைக்கும் நேரத்தில் டிரக்கின் ஜீப்பை அப்படியே நசுக்கிவிட்டது. இதில், அந்த டிரக்கை ஓட்டி வந்த டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரை உடனே வெளியே எடுக்க முடியாத அளவுக்கு கேபின் நசுங்கிவிட்டது.

டேஷ் கேமரா
அந்த சாலை சந்திப்பில் நின்றிருந்த கார் ஒன்றின் டேஷ்போர்டு கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன.

அதிக பாரம்
இதுதொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தியதில், வேகமாக வந்து பிரேக் போட்டது மட்டுமின்றி, அனுமதிக்கப்பட்டதைவிட, 31 சதவீதம் அளவுக்கு கூடுதலாக பாரம் ஏற்றி வந்ததும் காரணம் என்று தெரியவந்துள்ளது.
விபத்தின் வீடியோ காட்சிகள்


Click it and Unblock the Notifications








