பயங்கர விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன்! உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அட்மிட்! அதிர்ச்சி வீடியோ
தமிழக இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் யூடியூபர்களில் (YouTuber) ஒருவர் டிடிஎஃப் வாசன் (TTF Vasan). இவருக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் உள்ளனரோ, அதே அளவிற்கு எதிர்ப்பாளர்களும் இருக்கின்றனர். இவரது ஒரு சில நடவடிக்கைகள் சர்ச்சைகளில் சிக்கி விடுவதுதான் இதற்கு காரணம்.
இந்த சூழலில் டிடிஎஃப் வாசன் தற்போது பயங்கரமான சாலை விபத்து (Road Accident) ஒன்றில் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் (Kanchipuram) பகுதியில் இந்த சாலை விபத்து நடைபெற்றுள்ளது. சரியாக இன்று (செப்டம்பர் 17) மாலை 4.32 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. சம்பவம் நிகழ்ந்தபோது, டிடிஎஃப் வாசன் சுஸுகி ஹயபுசா (Suzuki Hayabusa) பைக்கில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது அவர் திடீரென 'வீலி ஸ்டண்ட்' (Wheelie Stunt) செய்ய முயன்றார். அந்த நேரத்தில் நிலைதடுமாறிய அவரது பைக், அருகே இருந்த ஒரு சிறிய பள்ளத்தில் விழுந்தது. பைக் ஒரு இடத்தில் விழுந்த நிலையில், டிடிஎஃப் வாசன் வேறு ஒரு இடத்தில் விழுந்தார். பைக் விழுந்த உடன் அதில் இருந்து புகை கிளம்ப தொடங்கியது.
அந்த அளவிற்கு இந்த விபத்து பயங்கரமானதாக இருந்தது. எனவே இந்த விபத்தில் டிடிஎஃப் வாசனுக்கு படுகாயங்கள் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடைபெற்றவுடன், அருகில் இருந்த மருத்துவமனைக்கு அவர் உடனடியாக அழைத்து செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேறு ஒரு மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பான வீடியோ நமக்கு கிடைத்துள்ளது. அந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது காட்டு தீ போல் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த அதிர்ச்சிகரமான வீடியோவில், டிடிஎஃப் வாசன் வீலி ஸ்டண்ட் செய்ய முயன்று, நிலைதடுமாறி கீழே விழுவதை நம்மால் பார்க்க முடிகிறது.
அத்துடன் டிடிஎஃப் வாசனின் நெருங்கிய நண்பரான அஜீஸையும் இந்த வீடியோவில் நம்மால் காண முடிகிறது. அவரது முகத்தில் பதற்றம் படர்ந்திருந்ததை பார்த்து, ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். எனவே டிடிஎஃப் வாசன் விரைந்து உடல்நலம் தேறி வர வேண்டும் என அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அதுவே டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் பிரார்த்தனையும் கூட!
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொது சாலைகளில் தேவையில்லாமல் பைக் ஸ்டண்ட்களில் ஈடுபட கூடாது என்பதை இந்த சம்பவம் நமக்கு தெளிவாக உணர்த்துகிறது. ஏற்கனவே அதிவேகமாக பயணம் செய்தது, விதிமுறைகளில் மீறி பைக் சாகசங்களில் ஈடுபட்டது தொடர்பாக டிடிஎஃப் வாசன் மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், அவர் கொடூரமான சாலை விபத்தில் சிக்கியிருப்பது, கவலையை ஏற்படுத்துகிறது. டிடிஎஃப் வாசனை தீவிரமாக பின் தொடர்பவர்கள், எக்காரணத்தை கொண்டும், இதுபோன்ற பைக் ஸ்டண்ட்களில் ஈடுபட்டு விட வேண்டாம். டிடிஎஃப் வாசன் சாலை விபத்து தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு, டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் இணைந்திருங்கள்.


Click it and Unblock the Notifications








