கார் ஓட்ட லைசென்ஸ் வாங்கிய டிடிஎஃப் வாசன்! இன்னும் இந்த சுவரு எத்தனை உசுர காவு வாங்கப்போகுதோ?

பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் பைக் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்ட நிலையில், அவருக்கு தற்போது கார் ஓட்டுவதற்காக லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து அவர் கார் ஓட்டி செல்லும் வீடியோவையும் தனது யூடியூப் சேனிலில் வெளியிட்டுள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சமூக வலைதளங்களில் பிரபலமாக பேசப்படுபவர் டிடிஎஃப் வாசன். இவர் பைக்கில் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து வீடியோக்களை வெளியிட்டு வருவார். இவர் வெளியிடும் வீடியோக்களில் இவர் அதிவேகமாக பைக் ஓட்டுவது மற்றும் பொது சாலைகளில் சாகசம் செய்வது உள்ளிட்ட பல்வேறு வேலைகளை செய்து சட்ட விரோதமாக செயல்பட்டதற்காக அபராதம் மற்றும் தண்டனைகளை பெற்று வந்தார்.

ttf vasan car driving licence

இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இவர் சென்னையில் இருந்து மகாராஷ்டிராவிற்கு பைக் ரைடு செய்து கொண்டிருந்தபோது காஞ்சிபுரம் மாவட்டம் பகுதியில் இவர் பைக்கில் வேகமாக பயணித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது இவர் வீலிங் செய்ய முயற்சி செய்தார். இதில் எதிர்பாராத விதமாக இவரது வாகனம் விபத்தில் சிக்கியது.

இதில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தபோது இவர் சட்டவிரோதமாக சாலையில் அபாயகரமாக வாகனம் ஓட்டியது தெரியவந்தது. மேலும் இவர் விபத்தில் சிக்கிய காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தன. அந்த காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் இவருக்கு சட்ட விரோதமாக வாகனம் ஓட்டியதன் காரணமாக ஜெயில் தண்டனை வழங்கப்பட்டது.

ttf vasan car driving licence

படுகாயங்களுடன் இருந்த டிடிஎஃப் வாசன் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு ஜாமீன் பெற்று இவர் வெளியே வந்த நிலையில், இவர் பைக் ஓட்டாமல் தன் நண்பர்களுடன் பைக்கில் காரில் பயணித்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அவ்வப்போது சைக்கிள் ஓட்டி அதையும் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டு வந்தார். இவரால் பைக் ஓட்ட முடியாத சூழ்நிலை இருந்தது.

இந்நிலையில் நீண்ட நாட்களாக இவர் பைக் ஓட்டாத வீடியோக்களை மட்டுமே வெளியிட்டு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று அவர் கார் ஓட்டிக்கொண்டே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இவர் மீண்டும் லைசென்ஸ் இல்லாமல் கார் ஓட்ட துவங்கி விட்டாரா என நினைத்திருந்தனர். ஆனால் இந்த வீடியோவில் அவர் தான் கார் ஓட்ட லைசன்ஸ் வாங்கி விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

ttf vasan car driving licence

இந்த வீடியோவில் அவர் ஆந்திர மாநிலத்தில் தடா பகுதிக்கு காரில் பயணிப்பது போல வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் நண்பர்களுடன் காரில் பயணிக்கிறார். காரை அவர்தான் ஓட்டி செல்கிறார் அவரது நண்பர்கள் உடன் இருக்கிறார்கள். இதன் மூலம் பிரபல யூட்யூபில் டிடிஎஃப் வாசன் பைக் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது காருக்கு லைசென்ஸ் வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

தமிழகம் முழுவதும் இவர் பிரபலமான யூடியூப்ராக இருப்பதால் இவர் தமிழகத்தில் கார் ஓட்ட லைசென்ஸ் வாங்கினாரா அல்லது வேறு மாநிலத்தில் கார் ஓட்ட லைசென்ஸ் வாங்கினாரா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. பெரும்பாலும் இவர் வெளிமாநிலங்களில் கார் ஓட்டல லைசென்ஸ் வாங்கியிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிடிஎஃப் வாசன் தற்போது கார் ஓட்ட லைசென்ஸ் வாங்கிய நிலையில் இந்த வீடியோவில் அவர் இனி காரில் இந்தியா முழுவதும் வலம் வந்து பல்வேறு விதமான சாதனைகளை செய்யப் போவதாகவும், உலக சாதனையை செய்யப் போவதாகவும், இந்த வீடியோவில் கூறியுள்ளார். தற்போது பலர் இளைஞர்களுக்கு இவர் கார் ஓட்டுவதிலும் தவறான முன்னுதாரணமாக இருக்கக் கூடாது என நினைத்து வருகிறார்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிடிஎஃப் வாசனுக்கு பைக் ஓட்ட அவரது லைசென்ஸ் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது கார் ஓட்டுவதற்காக லைசென்ஸ் வாங்கியுள்ளார். இது அவரது உரிமை என்றாலும் பலருக்கு இது அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. சாலையில் இவர் வேகமாக கார் ஓட்டி விபத்தில் சிக்ககூட வாய்ப்பு இருக்கிறது என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 14, 2024, 17:25 [IST]
English summary
Ttf vasan car driving licence reaveled in viral video
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X