டிடிஎஃப் வாசனின் குடுமியில் கை வைத்த போலீஸ்! தமிழ்நாட்டுக்கு இன்னைக்குதான் உண்மையான தீபாவளி! போட்றா வெடிய!
தமிழ்நாட்டில் சமீப காலமாக அவ்வப்போது ட்ரெண்ட் ஆகும் பெயர்களில் ஒன்று டிடிஎஃப் வாசன் (TTF Vasan). யூடியூபராக (YouTuber) மட்டும் இருந்த இவர், சமீபத்தில் நடிகர் (Actor) என்ற அவதாரத்தையும் எடுத்துள்ளார். அவர் நடிப்பில் உருவாகி வரும் மஞ்சள் வீரன் (Manjal Veeran) திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
மன உளைச்சலில் இருந்து விடுதலை தரக்கூடிய தமாஸ் காட்சிகள் அதிகளவில் இடம்பெறலாம் என கூறப்படுவதுதான் இதற்கு காரணம். எனவே கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, மஞ்சள் வீரன் திரைப்படம் விரைவில் வெளியாக வேண்டும் என கோயில்களில் பிரார்த்தனை செய்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் மஞ்சள் வீரன் திரைப்படம் வெளியாகுமா? என்பது சந்தேகம்தான். ஏனெனில் கதையின் நாயகனான டிடிஎஃப் வாசன் தற்போது சாலை விபத்து (Road Accident) ஒன்றில் சிக்கியுள்ளார். பொது சாலையில் பைக் ஸ்டண்ட் செய்ய போய், டிடிஎஃப் வாசன் விபத்தில் சிக்க, அவரது தங்கங்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
ஆனால் டிடிஎஃப் வாசன் உயிருக்கு ஆபத்து இல்லை என்பது அவரது தங்கங்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது. தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுசெட்டி சத்திரம் பகுதியில் நடைபெற்றுள்ளது. இந்த விபத்திற்கு டிடிஎஃப் வாசனின் சேட்டைதான் காரணம் என்பதால், பாலுசெட்டி சத்திரம் போலீஸ், அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல் மற்றும் மற்றவர்களின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவித்தல் என 2 பிரிவுகளின் கீழ் டிடிஎஃப் வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதெல்லாம் போதாது என சமூக வலை தளங்களில் பல நல்ல உள்ளங்களின் குரல்கள் கேட்க, காவல் துறை அவற்றுக்கு செவி கொடுத்துள்ளது.
ஆம், டிடிஎஃப் வாசனின் டிரைவிங் லைசென்ஸை (Driving Licence) ரத்து செய்ய, போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு, காவல் துறை அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. டிடிஎஃப் வாசனின் நடவடிக்கைகளால் இளைஞர்கள் சீரழிந்து வருவதை கண்டு விரக்தியில் இருந்தவர்களுக்கு, இச்செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல் துறை அதிகாரிகளின் பரிந்துரையை ஏற்று, டிடிஎஃப் வாசனின் டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதுதான் இந்த மகிழ்ச்சிக்கு காரணம். டிடிஎஃப் வாசனின் டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டால், மற்றவர்கள் இதுபோன்ற விபரீதங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் குறையும் என்பதில் நமக்கு துளியும் சந்தேகம் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் பைக் ஸ்டண்ட்களுக்கு எதிரானது அல்ல. பொது இடங்களில், மற்றவர்களுக்கு ஆபத்தான முறையில் பைக் ஸ்டண்ட்களை செய்வதற்கு மட்டுமே எதிரானது. உங்களுக்கு பைக் ஸ்டண்ட்களில் ஆர்வம் இருந்தால், தனியார் இடங்களில் செய்யுங்கள். அதுவும் முறையான பயிற்சி பெற்ற பிறகு!
தேவையான பாதுகாப்பு உபகரணங்களை எல்லாம் அணிந்து கொண்டு! அதை விடுத்து விட்டு 'சென்சேஷன்' ஆக வேண்டும் என்பதற்காக மற்றவர்களுக்கு தேவை இல்லாமல் பாதிப்புகளை ஏற்படுத்த வேண்டாம். அத்துடன் இளைய தலைமுறையினருக்கு தவறான முன்னுதாரணமும் ஆக வேண்டாம் என்பதுதான் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








