டிடிஎஃப் வாசன் லைசென்ஸ் 10 ஆண்டுகளுக்கு ரத்து! மஞ்சள் வீரன் ஷூட்டிங்க்கு ஏதும் பிரச்சனை வராதே?

பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசனை ஓட்டுனர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படுவதாக காஞ்சிபுரம் ஆர்டிஓ அலுவலகம் அறிவித்துள்ளது. சமீபத்தில் இவர் வீலிங் செய்ய முயன்று விபத்தில் சிக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாலும் நிலையில் இந்த நடவடிக்கையை ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் எடுத்துள்ளனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தமிழகத்தில் மோட்டோ விலாகிங் செய்யும் பிரபலமான ஈட்டி வராக இருப்பவர் டிடிஎஃப் வாசல். கோவையை சேர்ந்த இவர் இந்தியா முழுவதும் பைக் ரைடு செய்து அதை வீடியோவாக எடுத்து யூட்யூபில் வெளியிட்டு பிரபலமானார். இவருக்கு இன்றைய இளைஞர்கள் பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். இவர் சமீப நாட்களாக அதிக வேகமாக வாகனம் ஓட்டியதில் சர்ச்சையில் சிக்கினார்.

ttf vasan license cancelled

இதற்கு முன்னர் மீது அதிக வேகமாக வாகனம் ஓட்டுவது அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுவது இன்றைய இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருப்பது என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் இவர் செய்திகளில் அடிக்கடி இடம் பெற்று வந்தார். இருந்தாலும் தொடர்ந்து அதிக வேகமாக வாகனம் ஓட்டுவது பொது சாலையில் சாகசம் செய்வது என பல சட்ட விரோத செயல்களை செய்து வந்தார்.

இந்நிலையின் கடந்த 15ஆம் தேதி இவர் சென்னையில் இருந்து மகாராஷ்டிராவிற்கு தனது ஹயபுஸா பைக்கில் சென்று கொண்டிருந்தார். பைக் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது பாலு செட்டி சத்திரம் என்ற பகுதியில் பைக் வந்து கொண்டிருந்தபோது இவர் பைக்கில் வீலிங் செய்ய முயற்சி செய்துள்ளார்.

ttf vasan license cancelled

அப்பொழுது எதிர்பாராத விதமாக இவர் பைக் ஸ்லிப் ஆகி பெரும் விபத்தில் சிக்கினார். இந்த பைக் விபத்தில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு கை உடைந்து படுகாயம் ஏற்பட்டது உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த விபத்து குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது. இதையடுத்து காஞ்சிபுரம் போலீசார் இவர் மீது வழக்கு பதிவு செய்து இவரை கைது செய்தனர்.

சென்னையில் கைது செய்யப்பட்ட இவர் தொழில் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் இவர் கோர்ட்டில் ஜாமீன் கேட்டும் கிடைக்கவில்லை. இந்நிலையில் மக்கள் மத்தியில் இவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என பரவலாக பேசி எழுந்து வந்தது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆர்டிஓ அலுவலகம் இவரது ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி நேற்று அதாவது 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆறாம் தேதி முதல் 2033 ஆம் ஆண்டு அக்டோபர் ஐந்தாம் தேதி வரை இவர் ஓட்டுநர் உரிமம் செல்லதக்கதாக இருக்காது என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக இவர் தனக்கு ஜாமீன் கேட்டு மேல்முறையீடு செய்த வழக்கில் நீதிபதி ஆட்டமாக இவரது பைக்கை இருக்கும் படியும் இவரது யூடியூப் சேனலை மூடும் படியும் கூறியுள்ளார். தற்போது போக்குவரத்து துறை இவரது லைசென்சை ரத்து செய்தது மூலம் தனது யூடியூப் சேனலை நடத்த முடியாத நிலைக்கு டிடிஎஃப் பார்சல் தற்போது தள்ளப்பட்டுள்ளார் இது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது டிடிஎஃப் வாசன் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்தது தொடர்பாக காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன் உறுப்பு பிறப்பித்த உத்தரவு நகல் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. தற்போது டிடிஎப் வாசன் சிறையில் இருக்கும் நிலையில் அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருக்கிறது.

சென்னை பெருநகர போக்குவரத்து கழகத்தில் மட்டும் எட்டு வழக்குகளும் இதுபோக கோவை, ஊட்டி கடலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு வழக்கும் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஒரு வழக்கும் இவர் மீது நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பல வழக்குகளை நிலுவையில் வைத்துக்கொண்டு தான் அவர் தொடர்ந்து சட்ட விதிமுறை மீறலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிடிஎஃப்வாசன் பைக் ரைடிங் மீது ஆர்வம் கொண்டு வீடியோக்களை வெளியிட்டு வந்தாலும் அவர் போக்குவரத்து சட்ட விதிமுறைகளை பல இடங்களில் மீறி உள்ளார். குறிப்பாக அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட பல விதிமுறை மீறல்களை செய்து இன்றைய இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருந்துள்ள இவர் மீதான நடவடிக்கை அடுத்து இது போன்ற செயல்களை செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தும் என்பது மாற்றுக் கருத்து இல்லை.

More from DriveSpark

Article Published On: Saturday, October 7, 2023, 11:51 [IST]
English summary
Ttf vasan driving license suspended for 10 years know full details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+