மும்பைக்கு போய் தமிழ்நாட்டு மானத்தையே வாங்கிய டிடிஎஃப் வாசன் ! என்ன பண்ணாரு தெரியுமா?
யூடியூப் பிரபலம் டிடிஎஃப் வாசன் தற்போது மும்பையில் காரில் ஸ்டிக்கர் ஒட்டி மீண்டும் போலீஸ் சிக்கி கொண்ட சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. இந்த சம்பவத்தை அவர் வீடியோவாக பதிவு செய்து தனது யூடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்தியாவில் கார்களில் ஜன்னல் கண்ணாடியில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டுவது சட்டப்படி குற்றமாகும். இதற்கு அபராதம் விதிக்கப்படுகிறது இதற்காக தான் இவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தமிழகத்தில் பிரபல யூடியூபராக இருப்பவர் டிடிஎஃப் வாசன் இவர் பல்வேறு விதமான சர்ச்சைகளில் சிக்கி தமிழக முழுவதும் பிரபலமான யூடியூப்பராக வலம் வருகிறார். இவர் டூவீலரில் அதிவேகமாக பயணித்து சர்ச்சைகளில் சிக்கினார். இவர் டூவீலரில் பயணிக்கும் போது விபத்தில் சிக்கியதால் இவரது டூவீலர் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது.

இதன் பின்னர் இவர் கார் ஓட்டுவதற்காக லைசென்ஸ் பெற விண்ணப்பித்தார். கார் ஓட்டும் லைசன்ஸ் பெற்று தற்போது கார் ஒன்றை வாங்கி இந்தியா முழுவதும் அதில் பயணம் செய்து வீடியோ வெளியிட்டு வருகிறார். இப்படியாக இவர் தனது நண்பர்களுடன் மும்பை பகுதிக்கு காரில் பயணித்தார். அதை அவர் வீடியோவாக எடுத்து தனது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இந்நிலையில் அந்த வீடியோவில் இவர் மீண்டும் போலீசில் மோட்டார் வாகன விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டியது தெரியவந்துள்ளது. இதனால் மும்பை போலீசார் இவருக்கு அபராதம் விதித்துள்ளார்கள். போலீசாரின் அறிவுறுத்தலுக்கு பிறகு இவர் அந்த சட்ட விதிமுறை மீறலை சரி செய்துள்ளார்.

இந்தியாவில் உள்ள மோட்டார் வாகன சட்டப்படி காரில் பயணிப்பவர்கள் கார் ஜன்னல் கண்ணாடிகளில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளியில் இருந்து பார்த்தால் காருக்குள் இருக்கும் விஷயம் தெரிய வேண்டும் என இந்த சட்டம் சொல்கிறது.ஆனால் விதிமுறைகளை மீறி இவர் கார் ஜன்னல் கண்ணாடிகளில் ஸ்டிக்கர் ஒட்டி இருந்தார்.
இந்நிலையில் இவர் மும்பை பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்தபோது முதலில் சுங்கச்சாவடியில் இவரை போலீசார் ஒருவர் வழிமறித்து ஜன்னல் கண்ணாடியில் ஸ்டிக்கர் ஒட்டியதற்காக இவருக்கு அபராதம் விதித்ததாக தெரிகிறது. இருந்தாலும் இவர் தொடர்ந்து ஜன்னல் கண்ணாடியில் உள்ள ஸ்டிக்கரை அகற்றாமல் பயணம் செய்துள்ளார். மும்பை பகுதிக்குள் சென்று பயணம் செய்யும்போது அங்கு மற்றொரு போக்குவரத்து போலீசார் இவரை மடக்கி பிடித்துள்ளார்.

அவரும் ஜன்னல் கண்ணாடியில் உள்ள கருப்பு நிற சிக்கலுக்காக அபராதம் இருப்பதாக சொன்ன நிலையில், இது தவறு என உணர்ந்த டிடிஎஃப் வாசன் உடனடியாக ஜன்னல் கண்ணாடியில் ஒட்டியிருந்த ஸ்டிக்கரை அகற்ற ஒப்புக் கொண்டுள்ளார். அதன் பிறகு ஜன்னல் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்த கருப்பு ஸ்டிக்கரை அவரே அகற்றியுள்ளார்.
இதை அவர் வீடியோவாக பதிவு செய்து தனது யூடியூப் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. டிடிஎஃப் வாசன் மீண்டும் மீண்டும் மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டி வருவதாக அவர் மீது பலர் குற்றம் சாட்டி வருகிறார்கள். மோட்டார் வாகன சட்டத்தில் இது மிக முக்கியமான சட்டமாக பார்க்கப்படுகிறது.
இதனால் நீங்களும் கார் வைத்திருந்தால் காரில் கருப்பு நிற ஸ்டிக்கரை ஒட்டாதீர்கள் ஜன்னல் கண்ணாடியில் வழியாக பார்த்தால் காருக்குள் இருக்கும் விஷயம் வெளியில் தெரிய வேண்டும். அதை மறைப்பதற்காக கருப்பு நிற ஸ்டிக்கரை ஒட்டுவது சட்ட விதிமுறைப்படி தவறான விஷயமாகும். இதனால் நீங்கள் அதை எக்காரணத்தை கொண்டும் செய்யாதீர்கள். இல்லை என்றால் அபராதம் செலுத்த வேண்டிய சூழ்நிலை நேரிடும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மோட்டார் வாகன சட்டத்தை பின்பற்றுவது மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது. வாகன ஓட்டிகள் கட்டாயம் அதை பின்பற்றியாக வேண்டும். டிடிஎஃப் வாசன் போன்ற பிரபலமான நபர்கள் இப்படியாக தொடர்ந்து மோட்டார் வாகன சட்டங்களை மீறுவது இளைஞர்களுக்கு தவறான முன் உதாரணமாக அமைந்து விடுகிறது. இதனால் அரசு உடனடியாக இப்படியாக பிரபலங்கள் மோட்டார் வாகன விதிமுறைகளை மீறினால் அவர்களுக்கு கடும் நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சியை செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.


Click it and Unblock the Notifications









