Just In
- just now
இந்தியாவின் கடைசி போலோ கார் டெலிவரி வழங்கப்பட்டது... சோகத்தில் மூழ்கிய ஃபோக்ஸ்வேகன் நிர்வாகம்!
- 1 hr ago
காலி பால்பாக்கெட்டிற்கு தள்ளுபடி விலையில் பெட்ரோல் / டீசல்... அசத்தும் தொழிலதிபர்...
- 2 hrs ago
விபத்தில் சிக்கிய பாடகியின் டாடா பஞ்ச் கார்... ஹைலைட் என்னனா அவங்களுக்கு சின்னத ஒரு கீரல்கூட ஏற்படல!
- 13 hrs ago
விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!
Don't Miss!
- Technology
5.8-இன்ச் டிஸ்பிளேவுடன் விரைவில் அறிமுகமாகும் சூப்பரான Samsung போன்.!
- News
'எனக்கே விபூதி அடிக்க பார்த்தல்ல'.. தேஜஸ்விக்கு பாஜக செய்த ரகசிய கால் - போட்டு உடைத்த நிதீஷ் கட்சி
- Finance
தங்கம் விலை இன்று எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா.. இது வாங்க சரியான நேரம் தான்!
- Movies
முதல் ரவுண்டில் ப்ளாக் பஸ்டர் கொடுத்த டாப் ஹீரோஸ்: இரண்டாவது ரவுண்ட்ல சக்சஸ் பண்ண முடிஞ்சுதா?
- Sports
காமன்வெல்த்-ல் அனல்பறந்த குத்தாட்டம்.. அரங்கையே ஆட வைத்த தமிழர்கள்.. சர்வதேச அளவில் பெருமை - வீடியோ!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய ஒப்பந்தம் எதையும் செய்திடாமல் இருப்பது நல்லது...
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
தங்கம் அண்ணாவோட ஹெல்மெட் பத்திரமா இருக்கு! ஆனந்த கண்ணீரில் TTF ரசிகர்கள்! உண்மையில் என்ன நடந்துச்சு தெரியுமா?
தொலைந்து போன டிடிஎஃப் வாசன் அண்ணாவின் ஹெல்மெட், அவர் சொன்ன மாதிரியே திரும்ப கிடைத்திருப்பதால், அவரது ரசிகர்கள் ஆனந்த கண்ணீரில் மூழ்கியுள்ளனர். தங்களின் பிரார்த்தனை வீண் போகவில்லை எனவும், அண்ணாவின் மனதிற்கு எந்த கெட்டதும் நடக்காது எனவும் அவர்கள் கண் கலங்கி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் உள்பட சமூக வலை தளங்கள் முழுக்க தற்போது டிடிஎஃப் வாசன் (TTF Vasan) பற்றிய பேச்சுகளைதான் அதிகமாக காண முடிகிறது. இவரை தெரியாது என்று மட்டும் சொல்லி விடாதீர்கள். நிறைய பேர் சண்டைக்கு வந்து விடுவார்கள். பைக் தொடர்பான வீடியோக்களை இவர் சமூக வலை தளங்களில் வெளியிட்டு வருகிறார். இதில், பைக் சாகசங்கள் மற்றும் தொலை தூர பயணங்கள் போன்றவை அடங்கும்.

இதுபோன்ற வீடியோக்கள் மூலமாக அவர் ஏற்கனவே கொஞ்சம் பிரபலமாகதான் இருந்தார். ஆனால் சமீபத்தில் அவருக்காக கூடிய கூட்டம் அவரை தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கு எல்லாம் கொண்டு சென்று சேர்த்து விட்டது. தனது பிறந்த நாளை (Birthday) முன்னிட்டு, சமீபத்தில் ரசிகர்கள் மீட் அப் (Meet Up) ஒன்றை, அதாவது ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை, டிடிஎஃப் வாசன் நடத்தினார்.

இந்த சந்திப்பில், கடவுளை நேரில் பார்ப்பது போன்ற சந்தோஷத்தில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து விட்டனர். அவர்களை கட்டுப்படுத்தவே முடியவில்லை. அது மட்டுமா? டிடிஎஃப் வாசன் இந்த நிகழ்ச்சிக்கு வந்த வழியில் கூட, ஏராளமான ரசிகர்கள் குழுமி வாழ்த்துக்களை கூறினர். பிரபல நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகளுக்கு கிடைப்பதை போன்ற பிரம்மாண்ட வரவேற்பு டிடிஎஃப் வாசனுக்கு கிடைத்தது.

இதையடுத்து டிடிஎஃப் வாசனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்களை பரிமாற தொடங்கினர். டிடிஎஃப் வாசனுக்கு 2k கிட்ஸ்கள் மத்தியில்தான் அதிக ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இது 2k கிட்ஸ் மற்றும் 90s கிட்ஸ்களுக்கு இடையேயான கருத்து மோதலாகவும் மாறியது.

எது எப்படியோ முன்பு ஓரளவிற்கு பிரபலமாக இருந்த டிடிஎஃப் வாசன், தற்போது தமிழகம் முழுக்க அறியப்படும் நபராக மாறி விட்டார். இதற்கு சமீபத்தில் நடைபெற்ற ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சிதான் காரணம். ஆனால் இந்த ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் டிடிஎஃப் வாசனை வருத்தமடைய செய்த நிகழ்வு ஒன்றும் நடைபெற்றது. ஆம், அவரது ஹெல்மெட் (Helmet) காணாமல் போய் விட்டது.

இதை கேட்டதும் அவரது ரசிகர்கள் இதயம் நொறுங்கியது. இது மிகவும் விலை உயர்ந்த ஹெல்மெட் என கூறப்படுகிறது. இது தொடர்பாக டிடிஎஃப் வாசனே வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் மிகவும் உருக்கமாக பேசியிருந்தார். ஒரு சில பரிசு பொருட்களுடன், தனது ஹெல்மெட்டும் காணாமல் போய் விட்டதாக அவர் இந்த வீடியோவில் தெரிவித்திருந்தார்.

ஆனால் தனது ஹெல்மெட்டை யாரும் திருடி சென்றிருக்க மாட்டார்கள் எனவும், தனது நினைவாக எடுத்து சென்றிருக்கலாம் எனவும் அவர் கூறியிருந்தார். ஹெல்மெட் காணாமல் போனதற்காக அவர் யாரையும் குற்றம் சாட்டவில்லை. கூட்டத்தில் ஹெல்மெட்டை நான்தான் கவனமாக வைத்திருந்திருக்க வேண்டும். எனவே இந்த தவறுக்கு நானே பொறுப்பு என அவரது ரசிகர்களின் மனதை டிடிஎஃப் வாசன் கலங்க செய்தார்.

இதையடுத்து இந்த வீடியோ டிடிஎஃப் வாசனின் பெருந்தன்மையை காட்டுவதாக சமூக வலை தளங்களில் அவரது ரசிகர்கள் கண்ணீர் விட்டனர். தங்களது அண்ணாவின் ஹெல்மெட் மீண்டும் கிடைத்து விட வேண்டும் என ஒரு சில ரசிகர்கள் பிரார்த்தனை நடத்தியதாகவும் தகவல்! மனம் உருகி அவர்கள் நடத்திய பிரார்த்தனை வீண் போகவில்லை. அவர்களின் மனதை குளிர செய்யும் செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

டிடிஎஃப் வாசனின் தம்பிகளுக்கு மட்டுமல்லாது, இது டிடிஎஃப் வாசனுக்கும் மகிழ்ச்சியான செய்திதான். ஆம், டிடிஎஃப் வாசனின் தொலைந்து போன ஹெல்மெட் ஒரு வழியாக தற்போது கிடைத்துள்ளது. ரசிகர்கள் சந்திப்பிற்கு வந்த ஒருவர்தான் டிடிஎஃப் வாசனின் ஹெல்மெட்டை கொண்டு சென்றுள்ளார். இந்த நிகழ்ச்சி நடைபெற்றபோது, டிடிஎஃப் வாசன்தான் அவரிடம் ஹெல்மெட்டை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதன்பின்னர் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்த காரணத்தால், அவரால் டிடிஎஃப் வாசனை நெருங்க முடியவில்லை. எனவே ஹெல்மெட்டை திரும்ப ஒப்படைக்காமல் அவரே கொண்டு சென்று விட்டதாக தெரிகிறது. இதன்பின் ரசிகர்கள் சந்திப்பு முடிந்த உடனேயே அவர், டிடிஎஃப் வானுக்கு மெசேஜ் செய்து ஹெல்மெட் தன்னிடம் இருக்கும் தகவலை தெரிவித்துள்ளார்.

ஆனால் டிடிஎஃப் வாசனின் வட்டாரம் பெரிது என்பதால் அவரால் மெசேஜை பார்க்க முடியவில்லை. இதற்கிடையேதான் டிடிஎஃப் வாசன் ஹெல்மெட் தொலைந்து விட்டதாக வீடியோ வெளியிட, அவரது ரசிகர்கள் கண்ணீர் கடலில் ஆழ்ந்தனர். இந்த வீடியோ வைரல் ஆகவே, எப்படியாவது டிடிஎஃப் வாசனை தொடர்பு கொண்டு விட வேண்டும் என ஹெல்மெட்டை கொண்டு சென்றவர் முடிவு செய்தார்.

அப்போதுதான் அவருக்கு ஒரு ஐடியா தோன்றியது. டிடிஎஃப் வாசனால் மெசேஜை பார்க்க முடியவில்லை என்பதை உணர்வுபூர்வமாக புரிந்து கொண்ட அவர், சமூக வலை தளங்களில் டிடிஎஃப் வாசனை டேக் செய்து, ஹெல்மெட் தன்னிடம் இருக்கும் தகவலை ஒரு வழியாக அவரது கவனத்திற்கு கொண்டு சென்று விட்டார். ஹெல்மெட் அவரிடம் இருக்கும் தகவல் தெரிந்ததும், டிடிஎஃப் வாசன் முகத்தில் அவ்வளவு பூரிப்பு.

அவரது ரசிகர்கள் முகத்திலோ தாங்க முடியாத மகிழ்ச்சி. அண்ணாவின் ஹெல்மெட் கிடைத்து விட்ட தகவலை உடனடியாக ஒருவருக்கு ஒருவர் பரிமாற தொடங்கினர். சமூக வலை தளங்களில் பிரேக்கிங் நியூஸ் போன்று முக்கிய அப்டேட் என தலைப்பிட்டு கலாட்டா செய்யவும் ஆரம்பித்தனர். ஹெல்மெட் கிடைத்து விட்ட தகவலை டிடிஎஃப் வாசனே தற்போது மற்றொரு வீடியோவில் தெரிவித்துள்ளார்.

அந்த தெய்வத்திடம் இருந்து ஹெல்மெட்டை திரும்ப வாங்குவதை டிடிஎஃப் வாசன் வீடியோவாக வெளியிட்டாலும் கூட வெளியிடலாம். யாருக்கு தெரியும்? ஹெல்மெட்டை கொண்டு சென்றவரும் கூட இனி சமூக வலை தளங்களில் வைரல் ஆவதற்கான வாய்ப்புகள் உள்ளன! இந்த கலாட்டாக்களை எல்லாம் பார்த்து ஒரு சிலர் தலையில் அடித்து கொள்கின்றனர். அவர்கள் எல்லாம் 90s கிட்ஸாக இருக்கலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிகின்றன.
-
போட்டியாளர்களை வேட்டையாட வந்த ஹண்டர் 350... மிகவும் குறைவான விலையில் ராயல் என்பீல்டு பைக் அறிமுகம்!
-
இந்த செக்மெண்ட்ல இப்போ டாடாதான் கிங்... 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கி இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த கார் முதலிடம்!
-
விபத்து நடந்தா காசு மட்டும் கொடுத்து ஏமாறாதீங்க... என்ன செய்யனும்னு இங்க பாருங்க...