டிடிஎஃப் வாசனின் 17 லட்ச ரூபாய் பைக் விபத்தில் சிக்கியது! அடி சின்னது தான் ஆனா சரி பண்ண இவ்வளவு லட்சம் ஆகுமா?

பிரபல யூடிபர் டிடிஎஃப் வாசனுக்கு சொந்தமான ரூ 17 லட்சம் மதிப்பிலான சுஸூகி ஹயாபுஸா பைக் டேமேஜ் ஆகி உள்ளது. இவரது நண்பர்கள் இந்த பைக்கை எடுத்துக் கொண்டு போய் விபத்தில் சிக்கியுள்ளனர். எப்படி விபத்து நடந்தது? பைக்கிற்கு என்ன டேமேஜ் ஆனது? இதை சரி செய்ய எவ்வளவு செலவாகும் என யூடியூபில் சொல்லும் விளக்கத்தை காணலாம் வாருங்கள்.

தமிழகத்தின் மோட்டோ லாகின்கில் பிரபலமான யூடியூபர் டிடிஎஃப் வாசன். இவர் பல நேரங்களில் சர்ச்சைகளில் சிக்கி தமிழக முழுவதும் பெரும் விவாத பொருளானார். முக்கியமாக அதிவேகமாக பைக்குகளை ஓட்டுவது. இளைஞர்களுக்கு மோசமான முன்னுதாரணமாக இருப்பது. சாலை விதிமுறைகளை அவ்வப்போது மீறுவது என பல பல்வேறு சிக்கல்களை சந்தித்து வந்துள்ளார்.

ttf vasan hayabusa damage

இப்படியாக இவர் சிக்கல்களை சந்திக்கும் போதெல்லாம் அது சர்ச்சையாகி விவாத பொருளாக மாறி செய்திகளில் வந்து விடுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் சுஸூகி நிறுவனத்தின் பைக் ஒன்றை சொந்தமாக வாங்கினார். இந்த பைக்கின் விலை ரூபாய் 17 லட்சம் என மதிப்பிடப்படுகிறது.

இந்த பைக்கை வாங்கி அதில் சில மாடிஃபிகேஷன்களையும் செய்துள்ளார். முக்கியமாக இந்த பைக்கின் எக்ஸாஸ்ட் சிஸ்டத்தை மாடிஃபிகேஷன் செய்து பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர் இல்லாத நேரத்தில் இவரது நண்பர்கள் சிலர் இந்த பைக்கை ஓட்டி பார்ப்பதற்காக வெளியே எடுத்துச் சென்றுள்ளனர்.

ttf vasan hayabusa damage

அங்கு எதிர்பாராத விதமாக இவரது நண்பர்கள் விபத்தில் சிக்கி விட்டனர். விபத்தில் சிக்கிய நபருக்கு கைமுட்டி உடைந்து விட்டதாக தெரிகிறது. அதேநேரம் டிடிஎஃப் வாசனுக்கு சொந்தமான ஹயாபுஸா பைக்கில் எக்ஸாஸ்ட் பகுதி சேதம் அடைந்துள்ளது. டிடிஎஃப் வாசன் பைக் வாங்கியதும் அதன் எக்ஸாஸ்ட் பகுதியை மாற்றி அமைத்திருந்தார்.

வெளிமார்க்கெட்டில் இருந்து அக்ராபோவிக் என்ற நிறுவனத்தின் எக்ஸாஸ்ட் சிஸ்டத்தை வாங்கி பொருத்தியிருந்தார். இந்த சிஸ்டம் மற்றும் அந்த சிஸ்டம் பொருத்தப்பட்டிருந்த ஃபூட் ரெஸ்ட் பகுதியும் சேதமாகியுள்ளது. வெளி மார்க்கெட்டில் இவர் இந்த எக்ஸாஸ்ட் சிஸ்டத்தை ரூபாய் 2.5 லட்சம் என்ற விலையில் வாங்கியதாக தெரிகிறது.

இது போக ஃபூட் ரெஸ்ட் பகுதியும் உடைந்து விட்டதால் அதையும் மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து வீடியோ வெளியிட்ட டிடிஎப் வாசன் இந்த விபரங்களை விளக்கமாக சொல்லி இருந்தார். இந்த விபத்தால் அவருக்கு சுமார் மூன்று லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

அவரது பைக்கில் இந்த விஷயங்களை எல்லாம் சரி செய்தால்தான் பைக்கை மீண்டும் இயல்பாக இயக்க முடியும் எனவும் தெரிவித்து இருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஒரு பைக்கின் எக்ஸாஸ்ட் சிஸ்டத்தை மாற்ற மாற்ற செலவாகும் தொகைக் இன்னொரு நல்ல பைக்கையே வாங்கிவிடலாம் என பலர் இது குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

விலை உயர்ந்த பைக்குகளை வாங்கும் பலர் அதன் எக்ஸாஸ்ட் சிஸ்டத்தை மாடிஃபிகேஷன் செய்கின்றனர். இப்படியாக மாடிஃபிகேஷன் செய்தால் அந்த பைக்கை பதிவு செய்வதற்கு முன் ஆர்டிஓவில் காண்பித்து அதற்கான அனுமதியை பெற வேண்டும். அனுமதி பெறாமல் எக்ஸாஸ்ட் சிஸ்டத்தை மாற்றுவது சட்டப்படி குற்றமாகும். இந்த ஹயாபுஸா பைக்கில் எக்ஸாஸ்ட் சிஸ்டத்தை மாற்ற டிடிஎஃப் வாசன் அனுமதி பெற்றாரா இல்லையா என்பது தெரியவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிக விலை உயர்ந்த பைக்குகளை வாங்கும் போது அதை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சாலைகளில் வாகனங்களை எடுத்துச் செல்லும்போது விபத்து என்பதை சந்திக்க வேண்டிய சூழ்நிலை எல்லோருக்கும் ஏற்படும். ஆனால் அதை முடிந்த அளவிற்கு தவிர்க்க வேண்டும். சாலை விதிகளை மதித்து வாகனத்தை ஓட்ட வேண்டும். புகைப்படம் வீடியோ எடுக்க வேண்டும் என்பதற்காக கவனக்குறைவாக இருந்தால் இப்படி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 27, 2023, 11:30 [IST]
English summary
Ttf vasan hayabusa bike damaged repair cost in lakhs
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+