மேலாடையே இல்லாமல் நடுரோட்டில் நின்ற டிடிஎஃப் வாசன்! இவர் பண்ண தப்ப நீங்களும் பண்ணிடாதீங்க!
யூடியூப் பிரபலம் டிடிஎஃப் வாசன் சமீபத்தில் மகாராஷ்டிராவிற்கு காரில் சுற்றுப்பயணம் சென்றபோது காருக்குள் சாவியை வைத்து காரை லாக் செய்த சம்பவம் நடந்துள்ளது. இதன் பிறகு அவர் எப்படி காரை திறந்தார் என்ற முழுமையான விஷயங்களை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது பலருக்கும் எச்சரிக்கை விடும் பதிவாக இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தமிழ் யூடியூப் சேனல்களில் மிகப் பிரபலமானவர் டிடிஎஃப் வாசன் இவர் பைக்குகளில் பல்வேறு இடங்களுக்கு டூர் சென்று பைக்குகளில் விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டி அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்தி வந்தவர். அடிக்கடி செய்திகளில் இவர் பெயர் இடம் பெறுவதால் இவர் தமிழக முழுவதும் பிரபலமான நபராக இருக்கிறார். இந்நிலையில் இவர் பைக்கில் சென்று விபத்தில் சிக்கிய சம்பவத்திற்கு பிறகு இவரது பைக் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து இவர் தற்போது வெளி மாநிலத்தில் கார் ஓட்டுவதற்காக லைசென்ஸ் விண்ணப்பித்து அந்த லைசென்ஸையும் பெற்றுள்ளார். தற்போது இவர் காரில் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து வீடியோவாக அந்த பயணத்தை பதிவு செய்து தனது யூடிப்களில் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார். தற்போது இவர் அவரது நண்பர்களுடன் மகாராஷ்டிரா மாநிலத்தில் கார் ரைட் செய்து வருகிறார்.
இப்படியாக இவர் ரைடு சென்ற இடத்தில் ஆடை மாற்றுவதற்காக காருக்குள் இருந்து ஆடைகளை எடுத்து காருக்கு வெளியே வைத்து மாற்றிக் கொண்டு இருக்கும் போது தெரியாமல் காருக்குள் சாவியை வைத்து லாக் செய்து விட்டார். இதனால் காரை திறக்க முடியாமல் போய்விட்டது. காரை திறக்க வேண்டிய சாவி காருக்குள் மாட்டிக் கொண்டது.
இதையடுத்து அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த காரை திறப்பதற்காக முயற்சி செய்தார். அவர் எவ்வளவு முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை. உடனடியாக அவரது நண்பர்கள் அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்டு அருகில் உள்ள மெக்கானிக்கை அழைத்து வந்தார்கள். அவர்கள் அழைத்து வந்த மெக்கானிக் கையில் ஒரு பெரிய கம்பி மற்றம் ஒரு ஸ்க்ரூ டிரைவருடனும் வந்தார்.
அவர் கார் கதவின் மேல் பகுதியில் ஸ்க்ரூ டிரைவரை வைத்து ஒரு கேப்பை ஏற்படுத்தினார். அந்த கேப் வழியாக கம்பியை உள்ளே விட்டு காரின் கதவை திறக்க முயற்சி செய்தார். இவரது முயற்சி வெற்றிகரமாக அமைந்து காரின் கதவும் திறக்கப்பட்டது. இந்த கார் கதவு திறக்கும் வரை மேலாடை இன்றி தான் பகுதியில் மெக்கானிக்கிற்காக டிடிஎஃப் வாசன் காத்துக் கொண்டிருந்தார்.
இந்த காட்சிகளை அவர் வீடியோவாக பதிவு செய்து தனது யூடியூப் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை பலர் பகிர்ந்து தாங்களுக்கும் இப்படியான சம்பவம் நிகழ்ந்துள்ளது குறித்து பதிவு செய்து வருகிறார்கள். இப்படியான சம்பவம் பலருக்கு அவர்களது வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளது.
கார்களில் பயணிக்கும் போது நாம் நிச்சயம் கவனமாக இருக்க வேண்டும். காருக்குள் இருந்து இறங்கும்போது கட்டாயம் சாவியுடன் தான் இறங்க வேண்டும். சாவி இல்லாமல் காரில் இருந்து காலை வெளியே எடுத்து வைக்கவே கூடாது. இந்த பழக்கத்தை பின்பற்றினாலே இப்படியான பிரச்சனைகள் வருவதை தவிர்க்க முடியும்.
காருக்குள் சாவியை வைத்து லாக் செய்து விட்டால் நீங்கள் உடனடியாக அருகில் உள்ள அதிகாரப்பூர்வமாக சர்வீஸ் சென்டரில் சென்று தான் காரை சரி செய்ய வேண்டும். இப்படியான முயற்சிகளில் ஈடுபடக்கூடாது இது உங்கள் காரின் கதவுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. பின்னர் இது அதிகமான செலவை இழுத்து விடவும் வாய்ப்பு உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வாகனங்களின் பாதுகாப்பிற்காக வாகனம் ஆஃப் செய்யப்பட்டு சாவி வெளியே எடுக்கப்பட்டவுடன் அடுத்த சில வினாடிகளில் காரை லாக் செய்து விடும். காருக்குள் யாராவது நபர்கள் இருந்தால் அவர்கள் காருக்குள் இருந்து இந்த லாக்கை திறந்து கொள்ள முடியும். கார் வெளியே இருந்து திறக்க வேண்டும் என்றால் காரின் சாவி தேவைப்படும் என்பதை மனதில் வைத்து நீங்கள் இனி காரை பயன்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications








