டிடிஎஃப் வாசன் ஜெயிலுக்கு போகிறாரா? போலீசார் என்ன வழக்கு போட்டிருக்கிறார்கள்?

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் நேற்று காஞ்சிபுரத்தில் பைக் ஓட்டி செல்லும் போது பைக்கில் சாகசம் செய்ய முயற்சிக்கையில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு படுகாயத்துடன் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இவர் மீது தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் அவர் சிறைக்கு செல்லவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் தற்போதைய இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் யூடியூப் டிடிஎஃப் வாசன் தான் இவர் இந்தியா முழுவதும் தனது பைக்குகளில் டூர் சென்று அதை வீடியோ எடுத்து யூடியூபில் வெளியிட்டு வருகிறார். இவரது வீடியோவை ஏராளமான ஒரு இளைஞர்கள் பார்த்து வருகின்றனர். இவருக்கென்று தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகர் படையே இருக்கிறது.

ttf vasan accident

இந்நிலையில் இவர் கடந்த ஏப்ரல் மாசம் சுஸூகி நிறுவனத்தின் ஹயபுஸா என்ற புதிய பைக் ஒன்றை வாங்கினார். இந்த பைக்கின் விலை ரூபாய் 17 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த பைக்கை வாங்கியது முதல் அதை இவர் ஓட்டிச் செல்வது என பல்வேறு இடங்களில் இந்த பைக்கை பயன்படுத்தி அவர் வீடியோ வெளியிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காஞ்சிபுரத்தை எடுத்த பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இவர் இந்த பைக்கில் பயணித்துக் கொண்டிருந்தார். பைக் சரியாக பாலுசெட்டி சத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வந்து கொண்டிருந்தபோது இவர் ரோட்டில் வீலிங் செய்ய முயற்சி செய்து உள்ளார்.

ttf vasan accident

அப்பொழுதே இவருக்கு பின்னால் ஒரு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதை கவனிக்காமல் இவர் வேகமாக சென்று கொண்டிருந்த தனது பைக்கை மெதுவாக்கி வீலிங் செய்ய முயற்சி செய்துள்ளார். இதை கவனிக்காமல் கார் ஓட்டுனரும் வந்து இவர் பின்னால் மோதியதில் இவர் சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது இவர் கை எலும்பு முறிந்தது.

இந்நிலையில் அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது இவர் பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் அவரது சுசுகி ஹயபுஸா பைக் அப்பளமாக நொறுங்கியது.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ttf vasan accident

இந்த விபத்துக்கு குறித்து தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரம் பகுதி போலீசார் டிடிஎஃப் வாசன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்தியாவில் இப்படியாக கவனக்குறை உடன் வாகனம் ஓட்டி விபத்து மற்றும் மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் வாகனங்கள் ஓட்டினால் அவர் மீது செக்க்ஷன் 279 கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.

இந்த விபத்தில் மற்றவர்களுக்கு காயம் ஏற்படாமல் டிடிஎஃப் வாசனுக்கு மட்டுமே காயம் ஏற்பட்டதால் அவர் மீது 279 ன் கீழ் மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.சாலை விபத்தில் வாகனம் ஓட்டிய வரை தவிர மற்றவருக்கு காயம் ஏற்பட்டால் அந்த விபத்தில் வானத்தை உணர்த்தி வந்த ஓட்டுனருக்கு 337 338 மற்றும் 340ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.

இந்த வழக்கு தற்போது வாசன் மீது பதிவு செய்யப்படவில்லை என தெரிகிறது. இந்த வழக்கிற்கான தண்டனையாக ரூபாய் 1000 அபராதம் அல்லது 6 மாதம் சிறை அல்லது இரண்டும் சேர்த்து வழங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.இந்த வழக்கு கோர்ட் விசாரணைக்கு வரும்போது டிடிஎஃப் வாசன் இந்த வழக்கை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை வரும்.

ஆனால் தற்போது இவரை கைது செய்யப்பட வேண்டிய அவசியம் இல்லை. இந்த வழக்கு கோர்ட் விசாரணைக்கு வரும்போது நீதிபதி இந்த வழக்கை விசாரித்து இவருக்கான தண்டனையை வழங்குவார்.டிடிஎஃப் வாசன் மீண்டும் மீண்டும் சாலை விதிமுறை மீறல்களில் ஈடுபடுவதால் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை மற்றும் அபராதம் ஆகிய இரண்டையும் சேர்த்து வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாலையில் வாகனம் ஓட்டும்போது எப்பொழுதும் கவனமாக ஓட்ட வேண்டும் சாலை என்பது சாகசம் செய்வதற்கான இடம் அல்ல. இது பயணிப்பதற்கான இடம் மட்டுமே வாகனப்பயணம் என்பது ஆபத்து நிறைந்தது தான். அதேநேரம் இதை பாதுகாப்பாக செய்வதன் மூலம் நாம் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியும். இது போல இனி சாலைகளில் சாகசம் செய்ய நீங்கள் முயற்சி செய்யாதீர்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, September 18, 2023, 11:16 [IST]
English summary
Ttf vasan met with accident police filed case what will happen
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X