டிடிஎஃப் வாசன் அமர்ந்திருக்கும் பைக்குக்கு பின்னால் இவ்வளவு மேட்டர் இருக்கா!! ட்ரோல் செய்யவே மனசு வரலயே...

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் நடிப்பில் திரைக்கு வரும் முதல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கில் வாசன் அமர்ந்திருக்கும் படத்துடன் வெளியாகியுள்ளது. இதுகுறித்தும், கிளாசிக் 350 பைக் குறித்தும் இனி காணலாம்.

"போட்டுக்க தங்கம்" என்ற டைலாக்கை கேட்டவுடன் நினைவிற்கு வருவது டிடிஎஃப் வாசன் தான். கோயம்புத்தூரை சேர்ந்தவரான இவர் பைக்கில் லடாக் வரையில் ட்ரிப் சென்றதால் யூடியூப்பில் பிரபலமானார். இதன் மூலமாக ரசிகர்களை பெற்ற டிடிஎஃப் வாசன் சில வருடங்களுக்கு முன்பு பிறந்த நாளை நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் கொண்டாடியது பலரது கவனத்தை பெற்றது.

ttf vasan movie first look poster

இன்னும் சொல்லப்போனால், வாசனின் பிறந்தநாளின்போது நடந்த அந்த ரசிகர்கள் மீட்-அப் தான் இவரை தமிழகம் முழுவதும் பிரபலமாக்கியது என சொல்ல வேண்டும். அதன்பின், துப்பினால் கூட இசை என்பதுபோல் டிடிஎஃப் வாசன் எது செய்தாலும் இணையத்தில் வைரலாகியது. இதற்கிடையில், பைக்கில் அதிவேகமாக சென்றது, பொது இடத்தில் கூட்டத்தை கூட்டியது உள்ளிட்ட காரணங்களாக சிலமுறை போலீசாரின் தண்டனைக்கு உள்ளான வாசன் சமீபத்தில் விலையுயர்ந்த சுஸுகி ஹயபுஸா பைக்கை வாங்கியதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

இந்த நிலையில், டிடிஎஃப் வாசன் சினிமா துறையில் களமிறங்க உள்ளதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், இன்று (ஜூன் 29) அவரது பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. 'மஞ்சள் வீரன்' என இந்த திரைப்படத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் வேஷ்டி & சட்டையில் கையில் சூலாயுதத்துடன் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கில் டிடிஎஃப் வாசன் அமர்ந்துள்ளார்.

ttf vasan movie first look poster

அதாவது, பைக்கில் வேகமாக வந்து கொண்டிருந்தவர் இடையில் இருந்த சூலாயுயத்தை பிடிங்கி ஆக்ரோஷமாக எதிரிகள் மீது எறிவதுபோல் போல் இந்த போஸ்டரில் காட்டப்பட்டுள்ளது. டிடிஎஃப் வாசனின் மஞ்சள் வீரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவிவரும் நிலையில், அவர் அமர்ந்திருக்கும் கிளாசிக் 350 பைக்கை பற்றிய சில விபரங்கள்...

இந்தியாவின் முன்னணி மோட்டார்சைக்கிள் நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் ராயல் என்பீல்டில் இருந்து தற்சமயம் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் பைக்காக கிளாசிக் 350 விளங்குகிறது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்படும் முதல் 10 பைக்குகளை எடுத்து பார்த்தால் அதில் நிச்சயம் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 ஒன்றாக இருக்கும்.

ttf vasan movie first look poster

கிளாசிக் 350 பைக்கை கடைசியாக கடந்த 2021ஆம் ஆண்டின் இறுதியில் ராயல் என்பீல்டு நிறுவனம் அப்டேட் செய்தது. அப்போது, கிளாசிக் 350 பைக்கின் சேசிஸ், என்ஜினில் என சில முக்கியமான அப்டேட்கள் வழங்கப்பட்டன. இதன் காரணமாக அதற்கு முன்பு வரையில் விற்பனையில் இருந்த கிளாசிக் 350 பைக்கை காட்டிலும் புதிய கிளாசிக் 350 முற்றிலும் வேறுப்பட்டதாக விற்பனைக்கு வந்தது. விரைவில் கிளாசிக் 350 பைக்கை சிங்கிள்-சீட் வெர்சனில் அறிமுகப்படுத்த ராயல் என்பீல்டு தயாராகி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: டிடிஎஃப் வாசன் பொதுவாகவே விலையுயர்ந்த பைக்குகளையே விரும்பக்கூடியவர். சமீப காலமாக சுஸுகி ஹயபுஸா பைக்கில்தான் அதிகம் காட்சி தருகிறார். ஆனால் சினிமா என்று வந்தவுடன் அனைத்து நிலை ரசிகர்களையும் கவர்வதற்காக விலை குறைவான கிளாசிக் 350 பைக்கில் அமர்ந்திருப்பது போன்றதான ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார். சினிமாவிற்காக எப்படியெல்லாம் மாற வேண்டியிருக்கு!!

More from DriveSpark

Article Published On: Thursday, June 29, 2023, 15:45 [IST]
English summary
Ttf vasan movie poster feature royal enfield classic 350 bike
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X