22 வயது நடிகை உடன் பைக்கில் சுற்றும் டிடிஎஃப் வாசன்! என்ன மொத்தமா டிராக் மாறிட்டாரு!!
டிடிஎஃப் வாசன் (TTF Vasan), யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாக குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாகியவர். அதன்பின் சினிமாவில் நடிக்க சென்றார், ஆனால் அது பாதியிலேயே இல்லை என ஆன விஷயம் எல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். இருப்பினும், மனம் தளராத டிடிஎஃப் வாசன் தொடர்ந்து சினிமாவில் தனது முயற்சிகளை தொடர்ந்துக் கொண்டே இருந்தார். அதன் விளைவாக, டிடிஎஃப் வாசனின் நடிப்பில் ஐபிஎல் (IPL) என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த நிலையில், ஐபிஎல் படத்தின் கதாநாயகியை வீடியோ ஒன்றின் மூலமாக டிடிஎஃப் வாசன் அறிமுகப்படுத்தி உள்ளார்.
இது தொடர்பான அவரது இன்ஸ்டாகிராம் வீடியோவில், அந்த கதாநாயகியை பார்க்க முடிகிறது. டிடிஎஃப் வாசன் பைக் ஓட்ட, அவருக்கு பின்னால் அந்த நடிகை அமர்ந்துள்ளார். இவர் வேறு யாருமில்லை, தெலுங்கு டோலிவுட்டில் வளர்ந்துவரும் நடிகையான குஷிதா கல்லாபு (Kushita Kallapu) ஆவார்.

ஹைதரபாத் (Hyderabad)-இல் பிறந்தவரான நடிகை குஷிதா கல்லாபுவுக்கு 22 வயது மட்டுமே ஆகிறது. இருப்பினும், அதற்குள் 5 தெலுங்கு படங்களில் நடித்துவிட்டார். 2023ஆம் ஆண்டில் நீதோனே நேனு, ராமபானம், சாங்குரே பங்காரு ராஜா என்கிற திரைப்படங்களில் நடித்திருந்த குஷிதா கல்லாபுவின் நடிப்பில் இந்த 2024ஆம் ஆண்டில் மனோஹரம் மற்றும் பாபு என்கிற திரைப்படங்கள் திரைக்கு வந்தன.
தற்போது குஷிதா கல்லாபுவின் கவனம் தமிழ் சினிமாவின் பக்கம் திரும்பியுள்ளது. டிடிஎஃப் வாசன் கதாநாயகனாக நடிக்கும் 'ஐபிஎல்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இயக்குனர் கருணாகரன் இயக்கும் முதல் திரைப்படமான ஐபிஎல் இந்த 2024ஆம் வருடத்திற்குள் திரைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதுவரையில் இன்னும் இந்த படம் திரைக்குவரவில்லை.

சொல்லப்போனால், ஐபிஎல் திரைப்பட ஷூட்டிங் (Shooting) இன்னும் நிறைவு பெறவில்லை என்றே தெரிகிறது. ஏனெனில், தற்போது டிடிஎஃப் வாசன் வெளியிட்டு இருக்கும் வீடியோ கூட ஐபிஎல் திரைப்பட ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்தது போலவே இருக்கிறது. இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் கிஷோர் (Kishore) நடிக்கிறார்.
தற்போது இன்ஸ்டாகிராமில் டிடிஎஃப் வாசன் வெளியிட்டுள்ள வீடியோவில், நடிகை குஷிதா கல்லாபு பின்னால் அமர்ந்திருக்க வாசன் ஓட்டியிருப்பது ஹீரோ ஹோண்டா சி.பி.இசட் (Hero Honda CBZ) பைக் ஆகும். ஹீரோ மோட்டோகார்பும், ஹோண்டாவும் தனித்தனியாக பிரிந்தே பல வருடங்களாகிவிட்டன. அப்படியென்றால், டிடிஎஃப் வாசன் ஓட்டியிருப்பது எந்த அளவிற்கு பழமையான சிபிஇசட் பைக் என்பதை நான் கூற வேண்டியது இல்லை.
2017ஆம் ஆண்டில் விற்பனை நிறுத்தப்படுவதற்கு முன்னர் வரையில், ஹீரோ ஹோண்டா சிபிஇசட் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.72.40 ஆயிரமாக இருந்தது. இது ஒரு 150சிசி பைக் ஆகும். இதில், 149.2சிசி ஏர்-கூல்டு, 4-ஸ்ட்ரோக், சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டது. என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டது. சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஹைட்ராலிக் டைப் சஸ்பென்ஷனும், பின்பக்கத்தில் செவ்வக வடிவிலான ஸ்விங்கார்மும் கொடுக்கப்பட்டன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிரபலமான ஹீரோ ஹோண்டா பைக்குகளுள் சிபிஇசட் பைக்குகளும் ஒன்றாகும். மார்க்கெட்டில் பல்வேறு விதமான சிபிஇசட் பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டன. இருப்பினும், அவற்றுள் ஒன்றை இப்போதுவரையிலும் வைத்திருப்பது அரிதான ஒன்றே ஆகும். இதற்கு முன் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களினால், படப்பிடிப்பிற்காக பைக்கை ஓட்டும்போது கூட ஹெல்மெட்டை மறக்காமல் டிடிஎஃப் வாசன் வைத்திருப்பதை பார்க்க முடிகிறது.


Click it and Unblock the Notifications








