லைசென்ஸே இல்லாமல் கார் ஓட்டி மீண்டும் சர்ச்சையில் சிக்கும் டிடிஎஃப் வாசன்

யூடியூபர் டிடிஎஃப் வாசன் லைசென்ஸே இல்லாமல் கார் ஓட்டி வெளியிட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பைக் ஓட்டி பல சர்ச்சைகளில் சிக்கிய இவர் கார் ஓட்டி மீண்டும் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

சமீபகாலமாக யூடியூபர் பிரபலமான மோட்டோலாக்கிங் செய்பவர் டிடிஎஃப் வாசன். இவர் தமிழ்நாட்டில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்துவிட்டார். 20 வயது இளைஞர்கள் பலர் இவருக்கு ரசிகர்களாக மாறியுள்ளனர். இவர் அதிக வேகத்தில் பைக் ஓட்டி அடிக்கடி சர்ச்சையில் சிக்கினார். இவரது பெயர் அடிக்கடி செய்திகளில் வேறு அடிப்பட்டு வந்தது.

TTF Vasan Riding without license

இவர் அதிக வேகத்தில் பைக் ஓட்டி இளைஞர்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறார் என்ற புகார் வந்த பின்பு இவர் மீது பல்வேறு நடவடிக்கைகள் பாய்ந்தன. இவர் மீது போலீசார் வழக்குகளைத் தொடர்ந்தனர். அதிக வேகமாக வாகனம் ஓட்டி பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக இவர் மீது புகார்கள் குவிந்தன.

இருந்தாலும் இவர் தொடர்ந்து பைக் ரைடிங் செய்து அதை வீடியோ எடுத்து யூடியூபில் வெளியிட்டு வருகிறார். இந்த வீடியோக்கள் எல்லாம் ஏகப்பட்ட வியூஸ்களை அள்ளி வருகிறது. இந்நிலையில் டிரைவிங் லைசென்ஸ்சே இல்லாமல் இவர் காரை ஓட்டி மீண்டும் மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

TTF Vasan Riding without license

இவர் இவரது நண்பர்களுடன் மஹிந்தரா கார் ஒன்றை ஓட்டிச் சென்று அதை வீடியோ எடுத்து மோட்டா விலாக் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் தன்னிடம் கார் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் இல்லை எனக் கூறுகிறார். ஆனால் தன்னிடம் பயிற்சி லைசென்ஸ் (Learner License)இருப்பதாகக் கூறியுள்ளார்.

பயிற்சி லைசென்ஸ் வைத்திருக்கும் ஒரு பயிற்சியாளரின் மேற்பார்வையிலேயே வாகனத்தை ஓட்ட வேண்டும், அவரது வாகனத்தில் அது பயிற்சி பெறுபவரின் வாகனம் என்பதை குறிக்கும் வகையில் வாகனத்தில் L போர்டு மாட்டியிருக்க வேண்டும். ஆனால் இது எதுவுமே இல்லாமல் இவர் தனியாகக் காரை தனது நண்பர்களுடன் ஓட்டி சென்று வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

TTF Vasan Riding without license

இந்த வீடியோவில் அவர் விதிமுறைகளை மீறி வாகனத்தை ஓட்டியுள்ளது தெளிவாகத் தெரிகிறது. அவர் அந்த வீடியோவில் லைசென்ஸ் உடன் இருக்கும் நபர் உடன் இருந்தால் போதும் எனக் குறிப்பிடுகிறார். ஆனால் சட்டப்படி அவரின் உடன் லைசென்ஸ் உடன் இருப்பவரின் மேற்பார்வையில் தான் இவர் கார் ஓட்ட வேண்டும். ஆனால் இவர் வெளியிட்ட வீடியோவில் அப்படியான எந்த விஷயமும் நடந்ததாகத் தெரியவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிடிஎஃப் வாசன் போன்ற யூடியூபர்களை இளைஞர்கள் பலர் தீவிரமாகப் பின்தொடர்கின்றனர். அவரது ஒவ்வொரு செயலையும் கவனிக்கின்றனர். இவர் இந்த இளைஞர்களுக்குத் தவறான முன்னுதாரணமாக இருந்தால் பல இளைஞர்கள் இவரைப் போல கார் ஓட்ட முயல்வார்கள். இது பெரும் ஆபத்தில் கொண்டு போய் முடியும். இது போன்ற விஷயங்களில் யூடியூபர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Monday, May 22, 2023, 21:00 [IST]
English summary
Ttf vasan riding car without license another vlog video gets into controversy
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X