வால மீனு இருக்குதாம் விளாங்கு மீனு இருக்குதாம் ஆனா டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் மட்டும் இல்லயாம்!

பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசனுக்கு இரண்டாவது முறையாக ஜாமீன் வழங்க கோர்ட் மறுத்துள்ளது. இவர் விபத்தில் சிக்கிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இவர் மீது ஜாமனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் இவர் செய்த ஜாமீன் மனுவை இரண்டாவது முறையாக நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தமிழகத்தில் பிரபல யூட்யூபாக இருப்பவர் டிடிஎஃப் வாசன் இவர் சமீப ஆண்டுகளாக இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் குறிப்பாக தனது வாகனங்களை எடுத்து டூர் செல்வதன் மூலம் அதை வீடியோ எடுத்து யூட்யூபில் வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு விருந்து அளித்து வருகிறார். இவர் அதிக விலை கொண்ட வாகனங்களை ஓட்டுவதன் மூலம் இன்றைய இளைஞர்கள் பலரை கவர்ந்து உள்ளார்.

ttf vasan bail rejected

அது மட்டுமல்ல இவர் சாலைகளில் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவதாக இவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. இவர் அதிக வேகத்தில் வாகனம் ஓட்டியதற்காக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இவர் கடந்த ஏப்ரல் மாதம் சுஸூகி நிறுவனத்தின் ஹயபுஸா என்ற புதிய சூப்பர் பைக் ஒன்றை சொந்தமாக வாங்கினார்.

இந்த பைக்கில் தான் இவர் ஊர்சுற்றி வீடியோ எடுத்து வெளியிட்டு வந்த நிலையில். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது நண்பர்களுடன் பைக்கில் மகாராஷ்டிரா டூர் செல்ல திட்டமிட்டு இருந்தால் அதன்படி இவர் சென்னையில் இருந்து கிளம்பி சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக மகாராஷ்டிரா டூர் பயணத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது காஞ்சிபுரம் மாவட்டம் பாலு செட்டி சமுத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது இவர் வாகனத்தில் வீலிங் செய்ய முயன்ற போது எதிர்பாராத விதமாக அந்த பைக் விபத்தில் சிக்கியது. இதில் டிடிஎஃப் வாசன் தூக்கி வீசப்பட்டார். நல்ல வேலையாக அவர் ஹெல்மெட் மற்றும் இதர கியர்களை அணிந்திருந்ததால் இவர் உயிர் காப்பாற்றப்பட்டது இருந்தாலும் இவர் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில் டிடிஎஃப் வாசன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் பலமாக இருந்து வந்தது. இன்னிலையில் பாலு செட்டி சத்திரம் போலீசார் டிடிஎஃப் வாசன் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர் தொடர்ந்து சாலை விதிமுறை மீறல்களில் ஈடுபட்டு வந்ததால் அவர் மீது ஜாமினில் வெளிவராத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் அடிப்படையில் டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் தனக்கு ஜாமின் வேண்டுமென ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அவர் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்கு இருந்ததால் அந்த ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

மீண்டும் டிடிஎஃப் வாசன தரப்பிலிருந்து நேற்று மற்றொரு ஜாமின் மனு போடப்பட்டிருந்தது. அதில் டிடிஎஃப் வாசன் விபத்தில் படுகாயம் அடைந்து இருப்பதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அவர் சாலையில் இனி பைக் ஓட்டும் போது பைக்குக்கு டிரைவர் வைத்து செல்வதாகவும், அவர்களே லைசென்ஸ் வேண்டாம் என முடிவு செய்திருப்பதாகவும் அந்த ஜாமின் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது அரசு தரப்பில் உள்ள வழக்கறிஞர் டிடிஎஃப் வாசன் வெளியில் வந்தால் மோசமான முன் உதாரணமாக மாறிவிடும், பின்னர் யார் வேண்டுமானாலும் பைக்கில் ஸ்டென்ட் செய்துவிட்டு சட்டத்தின்படியிலிருந்து தப்பிவிடலாம் என்ற எண்ணம் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுவிடும். இதனால் இவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டார். அதைக் கேட்ட நீதிபதி ஜாமின் மனுவை ரத்து செய்து அவருக்கு அக்டோபர் 3ம் தேதி வரை சிறைகாவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாலையில் விபத்துக்கள் நடப்பதற்கு முக்கியமான காரணம் சாலைகளில் விதிமுறைகளை மீறுவது தான் தொடர்ந்து விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது இப்படியாக கடும் நடவடிக்கையை எடுத்தால் தான் அடுத்து சாலை விதிமுறை மீறல்கள் குறையும். இந்த சட்டத்தின் மீது மக்களுக்கு பயமும் வரும் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்றை பெற்றுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 27, 2023, 17:30 [IST]
English summary
Ttf vasans bail denied again jail sentence extended
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+