ஆடிய ஆட்டத்துக்கு எல்லாம் சேத்து வச்சு செஞ்ச கோர்ட்! டிடிஎஃப் வாசனை மீண்டும் கம்பி எண்ண சொன்ன நீதிபதி!

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனின் சிறை தண்டனை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது மூன்றாவது முறையாக இந்த நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அவர் பைக் சாகசம் செய்து விபத்தில் சிக்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தமிழ்நாட்டில் பிரபல யூட்யூபராக இருப்பவர் டிடிஎஃப் வாசன். இவர் தற்போது சென்னை புழல் சிறையில் அபாயகரமாக பைக் ஓட்டிய வழக்கில் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கடைசியாக பைக் ஓட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது. இந்த வீடியோவில் இவர் பைக்கில் வீலிங் செய்யும் போது தவறி விழுந்துள்ளார்.

ttf vasan jail extended

இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டம் பாலு செட்டி சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து டிடிஎஃப் வாசனை கைது செய்தனர். இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் இவருக்கு ஜெயில் தண்டனை வழங்கியது. அதன்படி இவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் 15 நாட்கள் மட்டுமே இவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் இவர் இரண்டு முறை ஜாமின் கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.

இவரது மனுவை விசாரித்து நீதிபதிகள் இவர் ஜாமீன் நிராகரித்தனர். மேலும் இவரது பைக்கை எரிக்க வேண்டும் என்றும் யூடியூப் சேனலை மூட வேண்டும் என்றும் கூறியிருந்தனர். இந்நிலையில் இவரது நீதிமன்ற காவல் குறித்து மீண்டும் வழக்கு விசாரணை நடந்தது. இந்த வழக்கு விசாரணையில் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் இவரது நீதிமன்ற காவல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

ttf vasan jail extended

இதை எடுத்து டிடிஎஃப் வாசன் இனி அடுத்த 15 நாட்களும் தொடர்ந்து ஜெயிலில் தான் இருப்பார் என தெரியவந்துள்ளது. இவர் அபாயகரமாக பைக் ஓட்டியதற்காக இவர் மீது ஜாமீன் வெளிவர முடியாத பிரிவு உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை இவர் நீதிமன்ற காவலில் தான் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மோட்டார் வாகன சட்டப்படி பொதுசாலைகளில் அபாயகரமாக வாகனம் ஓட்டுவது என்பது சட்டவிரோதமாகும். டிடிஎஃப் வாசன் இந்த முறை மட்டுமல்ல இதற்கு முன்னர் பலமுறை மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டியுள்ளார். அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் வாகனம் ஓட்டியுள்ளார். இதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களிலும் வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்ட வீடியோவை பார்த்து இன்றைய இளைஞர்கள் பலர் தவறான பாதையில் சென்று வருகின்றனர் என்றும், இளைஞர்களை தவறான பாதைக்கு டிடிஎஃப் வாசன் இழுத்து செல்வதாகவும் இவர் மீது ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இவர் விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டியதற்காக இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் போடப்பட்டுள்ளன.

கொரோனா காலத்தில் இவர் இந்தியாவின் பல்வேறு இடங்களில் பைக்கில் சென்று பயணித்தார். அந்த வீடியோக்களை எல்லாம் இவர் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு இருந்தார். அதில் ஒரு பைக்கில் இவர் சுமார் 249 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பலர் இதற்கு எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மோட்டார் வாகன சட்டங்களை பின்பற்ற வேண்டியது மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது. மோட்டார் வாகன சட்டங்களை பின்பற்றினால் தான் சாலையில் விபத்துக்களை குறைக்க முடியும். டிடிஎஃப் வாசன் போன்ற நபர்கள் தொடர்ந்து வாகனத்தின் வீரர்களின் ஈடுபடுவது இளைஞர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்லும். இவர்களுக்கு உரிய பாடத்தை அரசு புகட்டினால் தான் இனி இது போன்ற செயல்களை ஈடுபடாமல் இருப்பார்கள்.

Article Published On: Monday, October 16, 2023, 19:43 [IST]
English summary
Ttf vasans jail sentence extended by 15 more days
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+