விமானத்தில் பைலட் முன்பாக திடீரென தோன்றிய 'கடவுள்'... சமூக வலை தளங்களில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ

விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரையும் பைலட் ஒருவர் கண் கலங்க வைத்தார். நெகிழ்ச்சியான இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

விமானத்தில் பயணித்த அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்த பைலட்... காரணம் தெரிந்தால் நெகிழ்ந்து போவீர்கள்

பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக ஒருவரை செவ்வனே செதுக்குவது ஆசிரியர்கள்தான். எனவேதான் மாதா, பிதா, குரு, தெய்வம் என வரிசைப்படுத்தியுள்ளனர். இந்த வரிசையில், தெய்வத்தை காட்டிலும், சகல வித்தைகளையும் கற்று கொடுக்கும் குருவிற்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

விமானத்தில் பயணித்த அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்த பைலட்... காரணம் தெரிந்தால் நெகிழ்ந்து போவீர்கள்

இன்று உயர் பதவிகளை அலங்கரித்து கொண்டுள்ள பலரின் வெற்றி கதைகளுக்கு பின்னால், அவர்களுடைய ஆசிரியர்களின் பங்களிப்பு நிச்சயம் மிகப்பெரியதாக இருக்கும். ஆனால் அவர்களில் எத்தனை பேர், தங்கள் ஆசிரியர்களை நினைவில் வைத்துள்ளனர் என தெரியவில்லை.

விமானத்தில் பயணித்த அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்த பைலட்... காரணம் தெரிந்தால் நெகிழ்ந்து போவீர்கள்

ஆனால் மித்தாட் ஓகன் ஒனன் அப்படிப்பட்டவர் அல்ல. இவர் துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பைலட்டாக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் மித்தாட் ஓகன் ஒனன் வழக்கம் போல பணிக்கு சென்றிருந்தார்.

விமானத்தில் பயணித்த அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்த பைலட்... காரணம் தெரிந்தால் நெகிழ்ந்து போவீர்கள்

விமானத்தை கிளப்பி கொண்டு செல்ல தயாரானபோதுதான், தான் கடவுள் ஸ்தானத்தில் வைத்து போற்றி வரும், தன்னுடைய ஆசிரியர் ஒருவர் அதே விமானத்தில் பயணம் செய்வது அவருக்கு தெரியவந்தது. உடனடியாக மைக் மூலம், கடந்த கால நினைவுகளை மித்தாட் ஓகன் ஒனன் பகிர்ந்து கொள்கிறார்.

விமானத்தில் பயணித்த அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்த பைலட்... காரணம் தெரிந்தால் நெகிழ்ந்து போவீர்கள்

அத்துடன் தன்னை இந்த நிலைக்கு உயர்த்திய ஆசிரியருக்கு நன்றி தெரிவித்த அவர், தனது ஆசிரியரை பற்றியும் விவரிக்கிறார். பைலட் மித்தாட் ஓகன் ஒனன் பேசுவதை, அந்த ஆசிரியருடன் சேர்ந்து, இதர பயணிகளும் கேட்டு கொண்டிருக்கின்றனர். இதனால் நெகிழ்ச்சியடைந்த அந்த ஆசிரியர் உணர்ச்சி பெருக்கில் ஆனந்த கண்ணீர் வடிக்கிறார்.

விமானத்தில் பயணித்த அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்த பைலட்... காரணம் தெரிந்தால் நெகிழ்ந்து போவீர்கள்

அவர் மட்டுமல்ல. விமானத்தில் இருந்த இதர சில பயணிகளின் கண்களில் இருந்தும் கண்ணீர் வருவதை காண முடிகிறது. இன்னும் சரியாக சொல்வதென்றால், ஒட்டுமொத்த விமானமே உணர்ச்சி வயப்பட்டு காணப்பட்டது.

MOST READ: புது வித ஆசிட் தாக்குதலால் பெரும் பரபரப்பு... கார் உரிமையாளர்களின் கடும் அதிர்ச்சிக்கு காரணம் இதுதான்...

விமானத்தில் பயணித்த அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்த பைலட்... காரணம் தெரிந்தால் நெகிழ்ந்து போவீர்கள்

இதன்பின் விமான குழுவினர் திடீரென அந்த ஆசிரியரை நோக்கி வருகின்றனர். பூங்கொடுத்து கொடுத்து அவருக்கு மரியாதை செய்கின்றனர். அத்துடன் மரியாதை நிமித்தமாக அந்த ஆசிரியரின் கையில் அன்பு முத்தமிடுகின்றனர்.

விமானத்தில் பயணித்த அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்த பைலட்... காரணம் தெரிந்தால் நெகிழ்ந்து போவீர்கள்

இறுதியாக பைலட்... இல்லை... இல்லை... அந்த ஆசிரியரின் மாணவர் மித்தாட் ஓகன் ஒனனும் அங்கு வந்து, தனது ஆசிரியரிடம் ஆசி பெற்று கொள்கிறார். இதனால் நெகிழ்ச்சியடைந்த ஆசிரியர், தனது முன்னாள் மாணவனை ஆரத்தழுவி கொள்கிறார்.

MOST READ: 56 ரூபாய்க்காக டோல்கேட்டில் சாமியாடிய முக்கிய அமைச்சரின் மனைவி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...

விமானத்தில் பயணித்த அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்த பைலட்... காரணம் தெரிந்தால் நெகிழ்ந்து போவீர்கள்

நடக்கும் உணர்ச்சிகரமான சம்பவங்களை எல்லாம் பார்த்த பயணிகளும் கண் கலங்குகின்றனர். விமானத்தில் நடைபெற்ற இந்த நெகிழ்ச்சிகரமான சம்பவங்கள் அடங்கிய வீடியோவை பத்திரிக்கையாளரான இஹ்திஷாம் உல் ஹக் என்பவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

விமானத்தில் பயணித்த அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்த பைலட்... காரணம் தெரிந்தால் நெகிழ்ந்து போவீர்கள்

பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. தற்போது வரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் அந்த வீடியோவை பார்த்துள்ளனர். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

நமது வாழ்க்கையை செதுக்கியவர்கள் ஆசிரியர்கள்தான். இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் எல்லாம் இந்த சம்பவத்தை என்றும் மறக்காமல், தங்கள் வழிதோன்றல்களுக்கும் நிச்சயமாக எடுத்துரைப்பார்கள் என நம்பலாம்.

MOST READ: உஷார்... ராயல் என்பீல்டு பைக்குகளை குறிவைக்கும் போலீஸார்: எதற்கு தெரியுமா...?

விமானத்தில் பயணித்த அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்த பைலட்... காரணம் தெரிந்தால் நெகிழ்ந்து போவீர்கள்

இந்த சூழலில் தனது ஆசிரியரை கவுரவித்த பைலட் மித்தாட் ஓகன் ஒனனுக்கு சமூக வலை தளங்களில் பாராட்டு குவிந்து கொண்டிருக்கிறது. மித்தாட் ஓகன் ஓனனின் நடத்தையை நெட்டிசன்கள் வெகுவாக புகழ்ந்து கொண்டுள்ளனர்.

விமானத்தில் பயணித்த அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்த பைலட்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

இதனிடையே மித்தாட் ஓகன் ஒனன் பைலட்டாக பணியாற்றிய விமானத்தில் வந்த நபர், அவரது பள்ளிப்பருவ ஆசிரியர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவரது பெயர் உள்ளிட்ட கூடுதல் விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

விமானத்தில் பயணித்த அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்த பைலட்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

ஒரு ஆசிரியருக்கும், பைலட்டாக உருவெடுத்த அவரது முன்னாள் மாணவருக்கும் இடையேயான பாசப்பிணைப்பை இதுவரை இந்த செய்தி சுற்றி வந்தது. இனி விமானங்கள் மற்றும் பைலட்கள் குறித்து இதுவரை நீங்கள் அறிந்திராத சுவாரஸ்ய தகவல்களை உள்ளடக்கிய ஒரு ஆசிரியரின் கைடை சற்றே புரட்டி பார்க்கலாம் வாருங்கள். இந்த தகவல்கள் உங்களுக்கு வியப்பை ஏற்படுத்தலாம்.

விமானத்தில் பயணித்த அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்த பைலட்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

1903ம் ஆண்டில் ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்த விமானமானது, 120 அடி தூரம் பயணித்தது. ஆனால் தற்போது வணிக ரீதியில் பயன்படுத்தப்படும் போயிங் 777 உள்ளிட்ட விமானங்கள், ஒருமுறை முழுமையாக எரிபொருள் நிரப்பினால், அதிகபட்சமாக 15,844 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டவை.

விமானத்தில் பயணித்த அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்த பைலட்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

சர்வதேச அளவில் ஆங்கிலம்தான் விமானப் போக்குவரத்துத் துறையின் பொதுவான மொழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பைலட்கள் மற்றும் விமானங்களை கட்டுப்படுத்தும் பணியாளர்களுக்கு, ஆங்கில புலமை என்பது அடிப்படையான தகுதிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

விமானத்தில் பயணித்த அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்த பைலட்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

விமானக் கட்டுப்பாட்டு கோபுரத்தின் கண்ணாடி ஜன்னல்கள் மேலிருந்து கீழ் நோக்கி 15 டிகிரி சாய்மானத்தில் அமைக்கப்பட்டு இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சூரிய வெளிச்சம் மற்றும் விளக்கு வெளிச்சத்திலிருந்து வரும் பிரதிபலிப்புகளை குறைப்பதற்காகவே இந்த முறையில் ஜன்னல்கள் அமைக்கப்படுகிறது.

விமானத்தில் பயணித்த அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்த பைலட்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

விமானத்தில் பாதரசம் எடுத்துச் செல்ல ஒருபோதும் அனுமதி வழங்கப்படாது. ஏனெனில் விமானத்தின் பல பாகங்கள் அலுமினியத்தில் தயாரிக்கப்பட்டிருப்பதால், பாதரசத்தால் அதிக பாதிப்படையும் அபாயம் உள்ளது. எனவேதான் பாதரசம் தடை செய்யப்பட்டுள்ளது.

விமானத்தில் பயணித்த அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்த பைலட்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

விமான பயணம் ஆபத்து நிறைந்தது என்பது உண்மைதான். ஆனால், அமெரிக்காவில் விமானத்தில் இறப்பவர்களின் விகிதத்தையும், காரில் பயணிப்பவர்களில் இறப்பவர்களின் எண்ணிக்கையையும் ஒப்பீடு செய்துள்ளனர். இதில், விமானத்தில் பறப்பவர்களில் 11 மில்லியன் பேரில் ஒருவருக்கு விபத்தால் மரணமடையும் வாய்ப்பு இருக்கிறதாம். ஆனால், காரில் பயணிப்பவர்களுக்கு 5,000 பேரில் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் பயணித்த அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்த பைலட்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

இங்கிலாந்து, நார்வே மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளை சேர்ந்த பைலட்களிடம் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இதில் கருத்து தெரிவித்த பைலட்களில் பெரும்பாலானோர், விமானம் பறக்கும்போது தூங்கிவிடுவதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் கண் விழித்து பார்க்கும்போது உடன் இருக்கும் துணை விமானியும் தூக்கத்தில் இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

விமானத்தில் பயணித்த அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்த பைலட்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

இதுவரை உலகம் முழுவதும் நடந்த விமான விபத்துக்களில் 80 சதவீதம் அளவுக்கான விபத்துக்கள், விமானம் வானில் மேல் எழுந்த 3 நிமிடங்களுக்கு உள்ளாகவும், தரை இறங்குவதற்கு 8 நிமிடங்கள் முன்பாகவும் நடந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, விமானம் டேக் ஆஃப் செய்யும்போதும், தரை இறங்கும்போதும்தான் பெரும்பாலான விபத்துக்கள் நடந்துள்ளது.

விமானத்தில் பயணித்த அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்த பைலட்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

விமானத்தில் பயணிக்கும் 5 பேரில் ஒருவர் பறக்கும்போது அதிக பயத்துடன் இருக்கின்றனர். இதற்கு ஏவியோபோபியா என்று பெயர்.

விமானத்தில் பயணித்த அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்த பைலட்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

அது சரி... விமான பைலட்களுக்கு எப்படி சம்பளம் வழங்கப்படுகிறது தெரியுமா? விமானத்தில் பறக்கும் நேரத்தை கணக்கிட்டு மட்டுமே அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. விமானம் தாமதமாக வரும்போது காத்திருப்பது, விமானம் தாமதமாக புறப்படுவது, விமானம் புறப்படுவதற்கு முன்னர் இருக்கும் பணிகள் எல்லாம் கணக்கில் கொள்ளப்படுவதில்லையாம்.

விமானத்தில் பயணித்த அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்த பைலட்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

விமானத்தின் வெளியேறும் வழிக்கு 5 வரிசைக்கு அப்பால் அமர்ந்திருப்பவர்கள், அவசர சமயங்களில், விமானத்தில் இருந்து வெளியேறுவதில் சிக்கல் இருக்கிறதாம். அதாவது, குறித்த நேரத்தில் அவர்களால் வெளியேறுவது கடினம் என்று தெரிவிக்கப்படுகிறது. அதேநேரத்தில், 90 வினாடிகளுக்குள் விமானத்தில் உள்ள அனைவரையும் வெளியேற்றும் வசதியுடன் கதவுகள் அமைக்கப்பட வேண்டும் என்பது சர்வதேச விமானப் போக்குவரத்து ஆணையத்தின் விதி.

விமானத்தில் பயணித்த அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்த பைலட்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

விமான விபத்துக்களில் உயிரிழப்பவர்களை விட, விமானங்கள் வெளியிடும் நச்சு புகையால் அதிகமானோர் உயிரிழப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. விமானங்களிருந்து வெளியேறும் நச்சுப் புகையால், ஆண்டுதோறும் 10,000 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

விமானத்தில் பயணித்த அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்த பைலட்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

கார், டூ வீலர் வாங்கும் பலர் எதிர்பார்க்கும் முக்கிய விஷயம், எவ்வளவு மைலேஜ் கொடுக்கும் என்பதே. அவ்வாறு, விமானத்திற்கு கணக்கிடும்போது போயிங் 747 விமானமானது ஒரு கேலனுக்கு 0.2 மைல் மட்டுமே மைலேஜ் தரும். அதேநேரத்தில், அதிகபட்சமாக 550 பயணிகள் வரை இந்த விமானத்தில் பயணிக்க முடியும் என்பதையும் பார்க்க வேண்டும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Turkish Airlines Pilot Pays An Emotional Tribute To School Teacher Who Was a Passenger on The Flight. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more