அழுக்கான காரை சாலையில் ஓட்டி சென்றால் கடும் தண்டனை! வடகொரியாவை விட மோசமான நாடு இது!

வடகொரியா தான் உலகிலேயே சர்வாதிக்க மிக்க நாடாக பார்க்கப்படுகிறது. இந்த நாட்டில் உள்ள மக்களுக்கு வெளி உலகில் என்ன நடக்கிறது என்பதே தெரியாத அளவிற்கு இந்த நாட்டின் அரசாங்கம் அவர்களை வழிநடத்தி வருகிறது. இந்த நாட்டில் இன்டர்நெட் வசதியோ அல்லது மற்ற தொலைதொடர்பு வசதிகளோ பெரிய அளவில் இல்லை. உலகிலேயே இந்த ஒரு நாடு மட்டும்தான் இப்படி இருக்கிறது என நினைத்தால் நீங்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்ன அர்த்தம்.

வடகொரியாவை விட மிக மோசமான சட்ட திட்டங்களை கொண்ட நாடாக மற்றொரு நாடு இருக்கிறது. இந்த நாட்டில் இன்டர்நெட் வசதி கிடையாது, இதனால் நீங்கள் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது. வைஃபை என்றால் இந்த நாட்டு மக்கள் என்னவென்று கேட்பார்கள். இது மட்டுமல்ல இந்த நாட்டில் வாகனங்களை ஓட்டுவதற்கு மிகப்பெரிய அளவுக்கு விசித்திரமான கட்டுப்பாடுகள் எல்லாம் உள்ளன. கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா.

turkmenistan white cars

வடகொரியாவை விட மிக மோசமான சட்ட திட்டங்களை கொண்ட நாடாக இருப்பது தான் துருக்மேனிஸ்தான் என்ற நாடு. இந்த நாடு கஜகஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள ஆசிய கண்டத்தின் ஒரு நாடாகும். கடந்த 1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் பிரிந்தபோது இந்த நாடு தனி நாடாக அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த நாட்டில் 65 லட்சம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த நாட்டை சுற்றியுள்ள மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்த நாடு தனித்து விடப்பட்ட ஒரு நாடாகவே பார்க்கப்படுகிறது. ஒரு காலத்தில் சீனாவையும் மத்திய கிழக்கு நாடுகளையும் இணைக்கும் முக்கிய நாடாக இந்த நாடு இருந்தது. தற்போது இந்த நாடு உலகின் கவனத்தில் இருந்து விலகி தனித்துவமான விசித்திரமான சட்டங்களை கொண்ட ஒரு நாடாக செயல்பட்டு வருகிறது. இந்த நாட்டின் தலைநகராக அஸ்காபாத் என்ற நகர் இருக்கிறது.

turkmenistan white cars

நீங்கள் இந்த நாட்டிற்கு சென்றால் இந்த நாட்டில் உள்ள சாலையில் வெள்ளை மற்றும் சில்வர் நிறத்தில் மட்டுமே வாகனங்களை காண முடியும். குறிப்பாக இந்த அஸ்காபாத் நகரில் மற்ற எந்த நிற வாகனமும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த நாட்டில் வெள்ளை நிற கார்கள் மட்டுமே விற்பனையாகின்றன. மற்ற நிற கார்களை பயன்படுத்தினால் மிகப்பெரிய தண்டனை வழங்கப்படும்.

கடந்த 2018-ம் ஆண்டு தான் இந்த வெள்ளை நிற கார் சட்டத்தை அந்நாட்டின் முன்னாள் அதிபர் பெர்டிமுஹாமிடோ என்பவர் கொண்டு வந்தார். அப்பொழுது வேறு வேறு நிறங்களில் வாகனங்களை வைத்திருப்பவர்கள் எல்லாம் இந்த சட்டத்திற்கு பயந்து தங்கள் வாகனங்களின் நிறத்தை வெள்ளை நிறமாக மாற்றி பெயிண்ட் செய்து பயன்படுத்தி வருகிறார்கள். இது மட்டுமல்ல இந்த நாட்டில் வாகனங்களை பயன்படுத்த மற்ற நூதனமான சட்டமும் இருக்கிறது.

இந்த நாட்டில் உள்ள கார்கள் எல்லாம் வெள்ளையாக இருப்பது மட்டுமல்லாமல், அழுக்கு இல்லாமல் சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும். அழுக்கு நிறைந்த காரை சாலையில் ஓட்டி வரக்கூடாது. அதையும் மீறி அழுக்கான காரை இந்த நகரில் உள்ள சாலையில் ஒட்டி வந்தால் அந்த காரின் உரிமையாளருக்கு கடும் தண்டனை வழங்கப்படும். சுத்தமான வெள்ளை மற்றும் சில்வர் நிற கார்களை மட்டுமே இந்த நகரின் சாலையில் பயன்படுத்த வேண்டும்.

அந்நாட்டில் உள்ள தலைநகரான அஸ்காபாத் என்ற நகரம் சிட்டி ஆப் வைட் மார்பிள் என்ற பெயர் பெற்ற நகரமாகும். கின்னஸ் புத்தகத்தில் இந்த நகரம் அதிக அடர்த்தியான வெள்ளை நிற மார்பிள் கொண்ட கட்டிடங்களைக் கொண்ட நகரமாக இடம் பெற்றுள்ளது. வெள்ளை நிறத்தின் நகரமாக இந்த நகரத்தை அந்த நாட்டு அரசு பார்ப்பதால் அந்த நகரத்தில் உள்ள அனைத்தும் வெள்ளையாக மட்டுமே இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இந்த சட்டத்தை எல்லாம் கேட்கவே விசித்திரமாக இருக்கிறது அல்லவா? இது போக அந்த நாட்டில் இன்டர்நெட் வசதி கிடையாது, சமூக வலைதளங்களை அந்த நாட்டில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்த முடியாது. வாட்சப், டெலிகிராம் போன்ற ஆப் சேவைகளையும் பயன்படுத்த முடியாது. வெளியுலகில் என்ன நடக்கிறது என அந்த நாட்டு மக்களுக்கு எந்தவித புரிதலும் இல்லாமல் இருப்பார்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: துருக்மேனிஸ்தான் நாட்டில் இப்படியான கட்டுப்பாடுகள் இருப்பது பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. அதுவும் சுற்றி பல வளர்ந்த நாடுகள் அல்லது வளரும் நாடுகள் இருக்கும் நிலையில் அதற்கு மத்தியில் இருக்கும் ஒரு நாடு எந்த விதமான தொழில்நுட்ப வசதிகளும் இல்லாமல் விசித்திரமான சட்டங்களை கொண்ட நாடாக இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 10, 2024, 12:55 [IST]
English summary
Turkmenistan white cars illegal driving dirty car laws
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+