பெயர்தான் ஆமை... கொரோனாவை அழிப்பதில் முயல்... இது இருந்தா உங்களை கொரோனா துளியளவும் நெருங்காது!

வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கின்ற வகையிலான வாக்ஸ்களை பிரபல டர்டில் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

பெயர்தான் ஆமை... கொரோனாவை அழிப்பதில் முயல்... இது இருந்தா உங்களை கொரோனா துளியளவும் நெருங்காது!

ஒட்டு உயிரினத்திற்குமே அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் பரவிக் கொண்டிருக்கின்றது ஒற்றை உயிர் கொல்லி வைரஸ் கொரோனா. இந்த வைரசை அழிப்பதற்கான முயற்சிகள் பல உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெயர்தான் ஆமை... கொரோனாவை அழிப்பதில் முயல்... இது இருந்தா உங்களை கொரோனா துளியளவும் நெருங்காது!

அந்தவகையில், விமான நிலையங்களில் வைரஸ் மற்றும் கிருமிகளை அழிக்கின்ற வகையில், ரோபோ மற்றும் கிருமி நாசினி கருவிகள் ஆகியவை பயன்பாட்டுக் கொண்டு வரப்பட்டுள்ளன.

பெயர்தான் ஆமை... கொரோனாவை அழிப்பதில் முயல்... இது இருந்தா உங்களை கொரோனா துளியளவும் நெருங்காது!

இதேபோன்று, விமானங்களிலும் வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக பாதுகாப்பு பெட்டக அமைப்பு மற்றும் சமூக இடைவெளி இருக்கை போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு, கொரோனா வைரசுக்கு எதிரான போர் நாளுக்கு நாள் தீவிரப்படுத்தப்பட்டே வருகின்றது.

பெயர்தான் ஆமை... கொரோனாவை அழிப்பதில் முயல்... இது இருந்தா உங்களை கொரோனா துளியளவும் நெருங்காது!

இந்நிலையில், சிகாகோவை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல டர்டில் நிறுவனம், வாகனங்கள் மீது படர்ந்திருக்கும் பாக்டீரியா மற்றும் வரைஸ்களை அழிக்கும் வாக்ஸ் (Wax) வகை கிருமி நாசினிகளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. என்னடா இது தலைப்பும் உள்ள இருக்கும் தகவலுக்கும் சம்பந்தமே இல்லையே என நினைக்கிறீர்களா?, அப்படி நினைக்காதீர்கள்.

பெயர்தான் ஆமை... கொரோனாவை அழிப்பதில் முயல்... இது இருந்தா உங்களை கொரோனா துளியளவும் நெருங்காது!

'டர்டில்' (Turtle) என்பதற்கான தமிழ் பொருள் 'ஆமை' என்பதை நம்மில் பலர் அறிவீர்கள் என நம்புகின்றோம். இதைவைத்துதான் தலைப்பை தேர்ந்தெடுத்துள்ளோம்.

தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் வாக்ஸ் கிருமி நாசினிகளின் பெயர் ஆமையாக (டர்டில்) இருந்தாலும், அது கிருமிகளை அழிப்பதில் மிக தீவிரமாக செயல்படும்.

பெயர்தான் ஆமை... கொரோனாவை அழிப்பதில் முயல்... இது இருந்தா உங்களை கொரோனா துளியளவும் நெருங்காது!

அதாவது, முயலின் வேகத்தையும் மிஞ்சுமளவிற்கு அதி வேகமாக செயல்படும். ஆம், ஒரு சில விநாடிகளிலேயே உங்கள் வாகனத்தின் படர்ந்திருக்கும் அனைத்து விதமான வைரஸ் மற்றும் பாக்டீரியா என எதுவாக இருந்தாலும் அது அடியோடு கொன்று குவித்துவிடும்.

பெயர்தான் ஆமை... கொரோனாவை அழிப்பதில் முயல்... இது இருந்தா உங்களை கொரோனா துளியளவும் நெருங்காது!

இதுமட்டுமின்றி, குறிப்பிட்ட நாட்களுக்கு உங்கள் வாகனத்தின்மீது கிருமிகள் அண்டவும் இந்த டர்டில் வாக்ஸ் (Turtle Wax) கிருமி நாசினி அனுமதிக்காது.

அந்தவகையில் ஒன்றல்ல, இரண்டல்ல ஒட்டுமொத்தமாக ஐந்துக்கும் மேற்பட்ட தயாரிப்புகளை அது அறிமுகம் செய்துள்ளது. அவை, நான்கு சக்கர வாகனம் மட்டுமின்றி இருசக்கர வாகனங்களின்மீதும் பயன்படுத்தப்படலாம்.

பெயர்தான் ஆமை... கொரோனாவை அழிப்பதில் முயல்... இது இருந்தா உங்களை கொரோனா துளியளவும் நெருங்காது!

மேலும், வாகனத்தின் மேற்பரப்பு மட்டுமின்றி வீல், டயர், அப்ஹோல்டரி, பிளாஸ்டிக் மற்றும் வாகனத்தின் உட்புறம் என அனைத்து பகுதிகளிலும் இந்த வாக்ஸ்களைப் பயன்படுத்தலாம் கூறப்படுகின்றது. குறிப்பாக, இந்த வாக்ஸ்களைப் பயன்படுத்துவதன்மூலம் வாகனத்தின் பொலிவு மங்கிவிடும் என்று அச்சமடையவும் தேவையில்லை டர்ட்டில் தெரிவித்துள்ளது.

பெயர்தான் ஆமை... கொரோனாவை அழிப்பதில் முயல்... இது இருந்தா உங்களை கொரோனா துளியளவும் நெருங்காது!

அதேசமயம், இந்த வாக்ஸ்களைப் பயன்படுத்துவதன் மூலம் பழைய வாகனங்கள்கூட புது வாகனத்தைப் போல் மினுமினுக்குமாம். எனவே, கிழவி போன்றிருக்கும் வாகனத்தைக் கூட டர்ட்டில் வாக்ஸ்மூலம் குமரியாக மாற்ற முடியும். மேலும், அதனை பாதுகாப்பானதாகவும் மாற்ற இயலும்.

பெயர்தான் ஆமை... கொரோனாவை அழிப்பதில் முயல்... இது இருந்தா உங்களை கொரோனா துளியளவும் நெருங்காது!

இந்தியாவில் கால் தடம் பதிப்பது குறித்து டர்ட்டில் வாக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக தலைவர் டெனிஸ் ஜான் ஹீலி கூறியதாவது, "இந்திய சந்தையில் நாங்கள் நுழைந்தது எங்கள் வரலாற்றில் ஒரு அருமையான அத்தியாயம். இங்குஉலகத் தரம் வாய்ந்த தயாரிப்பை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியா உலகின் மிக துடிப்பான மற்றும் மாறுபட்ட ஆட்டோமொபைல் சந்தையாகும். இந்த நாடு வணிகத்திற்கான பெரிய வாக்குறுதியைக் கொண்டிருக்கிறது. எனவேதான் நாங்கள் இந்தியாவைத் தேர்வு செய்துள்ளோம்" என்றார்.

பெயர்தான் ஆமை... கொரோனாவை அழிப்பதில் முயல்... இது இருந்தா உங்களை கொரோனா துளியளவும் நெருங்காது!

இதைத்தொடர்ந்து பேசிய அந்நிறுவனத்தின் இந்தியாவிற்கான மேலாளர் மற்றும் இயக்குனர் சஜன் முரளி, "டர்டில் வாக்ஸ் உலகெங்கிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் ஓர் தயாரிப்பாகும். இந்தியாவில் பல விதமான வாக்ஸ்கள் களமிறக்கப்பட இருக்கின்றன. அவை அனைவராலும் நுகர கூடிய வகையில் இருக்கும்" என தெரிவித்தார்.

குறிப்பு: 1 மற்றும் 2 ஆகியவற்றை தவிர மற்ற அனைத்து படங்களும் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Turtle Wax Vehicle Care Products Introduced In Indian Market: Here Are All The Details. Read In Tamil.
Story first published: Saturday, June 20, 2020, 18:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X