மதுரையெல்லாம் வேஸ்ட் தூத்துக்குடி விமான நிலையம் சென்னைக்கு நிகராக மாறப்போகிறது! என்னலாம் வருது தெரியுமா?
சென்னைக்கு அடுத்தபடியாக தூத்துக்குடியில் உள்ள விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றி அதை மேம்படுத்த தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்து வருகின்றன. இதன்படி இந்த விமான நிலையத்தில் என்னென்ன புதிய அம்சங்கள் வரப்போகிறது? எதற்காக இந்த அப்டேட் நடக்கிறது? என்ற விரிவான விபரங்களை தான் நாம் இங்கே காணப் போகிறோம்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களின் பிரதான விமான நிலையமாக தூத்துக்குடி விமான நிலையம் தான் இருக்கிறது. தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, மாவட்டம் மக்கள் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்றால் அவர்கள் தூத்துக்குடி விமான நிலையத்தைதான் அணுக வேண்டிய தேவை இருக்கிறது. இந்த விமான நிலையத்தில் தற்போது உள்நாட்டு விமான சேவைகள் மட்டுமே நடந்து வருகின்றன.

தூத்துக்குடி விமான நிலையத்தை பொருத்தவரை தற்போது நான்கு விமானங்கள் சென்னைக்கும் இரண்டு விமானங்கள் பெங்களூருக்கும் தினசரியாக பயணம் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த விமான நிலையத்தை தற்போது அப்டேட் செய்து சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதன் மூலம் சர்வதேச விமானங்களும் இனி தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்து செல்ல முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்குவதற்காக இந்த அப்டேட் செய்யப்படுகிறது.
கடந்த 2021ம் ஆண்டு இந்த விமான நிலைய பயன்படுத்துதலுக்காக ரூபாய் 381 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் அப்பொழுது கொரோனா பரவியதன் காரணமாக இந்த திட்டம் தள்ளி போடப்பட்டது. 2023 தூத்துக்குடியில் பெரு வெள்ளம் வந்ததன் காரணமாகவும் இந்த திட்டம் தள்ளி போய் ஒரு வழியாக தற்போது இதை செயல்பாட்டிற்கு கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் தற்போது நடந்து வருகிறது.

தூத்துக்குடி விமான நிலையத்தில் தற்போது 1350 மீட்டர் நீளமும் 30 மீட்டர் அகலமும் கொண்ட ரன்வே இருக்கிறது. இந்த ரன்வையை 3115 மீட்டர் நீளமும் 45 மீட்டர் அகலமும் கொண்ட ரன்வேயாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதைவிட பெரிய ரன்வேயாக சென்னையில் சுமார் 3611 மீட்டர் நீளம் கொண்ட ரயில்வே செயல்பாட்டில் இருக்கிறது. சென்னைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய ரயில்வே கொண்ட விமான நிலையமாக விரைவில் தூத்துக்குடி விமான நிலையம் மாறப்போகிறது.
தூத்துக்குடி விமான நிலையத்தில் இந்த ரன்வே அமைக்கும் பணிகளை மும்பையைச் சேர்ந்த ஆர்பிஜி குழுமத்தின் கேவிசி இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் தான் செய்கிறது. இது மட்டுமல்லாமல் தூத்துக்குடியில் புதிதாக 17,341 சதுர மீட்டர் அளவிற்கு புதிய விமான நிலையம் கட்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே இருக்கும் விமான நிலையம் வெறும் ஆயிரம் சதுர மீட்டர் அளவில் தான் இருக்கிறது.

புதிதாக அமைக்கப்படும் விமான நிலையத்தில் மொத்தம் நான்கு என்ட்ரி கேட்டுகள் கொண்டு வரப்பட உள்ளன. இதில் 21செக்கிங் கவுண்டர்களும் 7எக்ஸ்ரே பேக்கேஜ் ஸ்கேனர்களும் அமைக்கப்பட உள்ளன. இதன் பிறகு பயணிகள் விமானத்தில் ஏறுவதற்காக மூன்று நடை பாலங்கள் அமைக்கப்படுகிறது. இந்த பாலங்கள் நேரடியாக விமானங்களின் கேட்பகுதியை சென்றடையும் வகையில் அமைக்கப்படும். இதன் மூலம் ஒரே நேரத்தில் 1440 பயணிகளை கையாளும் வகையில் இந்த விமான நிலையத்தின் வசதிகள் அமைக்கப்படுகின்றன.
இதுபோக விமானங்களை கையாளுவதற்காக சுமார் 45மீட்டர் உயரத்தில் ஏர் டிராபிக் கண்ட்ரோல் டவர் அமைக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதன் மூலம் சர்வதேச விமானங்களை கையாளும் வகையில் இந்த ஏர் டிராபிக் கண்ட்ரோல் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோக புதிதாக அமைக்கப்படும் விமான நிலையத்திற்கு வருவதற்காக ஏற்கனவே இருக்கும் பாதையை 4வழி பாதையாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகமான வாகனங்கள் வந்து செல்ல வசதியாக இருக்கும்.
தற்போது சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு மட்டுமே தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து விமான சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில் புதிய விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில் டெல்லி, மும்பை ஆகிய பகுதிகளில் இருந்தும் விமான சேவை வழங்க ஏற்பாடுகள் நடக்கும். இதுபோக சர்வதேச விமான பயணமாக இலங்கை,சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கும் தூத்துக்குடியில் இருந்து விமான சேவை வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.
புதிதாக விமானமுனையும் கட்டமைக்கப்பட்டு ரன்வேயும் விரிவாக்கம் செய்யப்பட்டால் மிகப்பெரிய விமானமான ஏர் பஸ் 321 என்ற விமானமும் தூத்துக்குடி விமான நிலையத்தில் தரையிறங்கும் வகையில் இது அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. தற்போது தூத்துக்குடி பகுதியில் ஏகப்பட்ட தொழில் முதலீடுகள் வருவதால் இந்த விமான நிலைய விரிவாக்கத்தை அரசு திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் என்ற நிறுவனம் தூத்துக்குடி பகுதியில் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் தொழிற்சாலைக்காக ரூபாய் 16,000 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதுபோக மற்ற பல தனியார் நிறுவனங்களும் மத்திய, மாநில அரசுகளுடன் தூத்துக்குடி பகுதியில் முதலீடுகளை செய்ய திட்டமிட்டுள்ளன.
இதுபோக இந்தியாவில் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதலத்தை குலசேகரப்பட்டினம் பகுதியில் அமைக்க ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதற்கான கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த ராக்கெட் ஏவுதல் மையம் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து வெறும் 50 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் பலர் வந்து செல்லவும் இது வசதியாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தூத்துக்குடியில் உள்ள விமான நிலையத்தை மேம்படுத்துவதன் மூலம் நாட்டின் வளர்ச்சி மிகப்பெரிய அளவிற்கு வளரும். தூத்துக்குடியில் இருந்து ஏற்றுமதி அதிக அளவில் நடக்கிறது. இதன் காரணமாக விமான நிலையத்தை மேம்படுத்துவதன் மூலம் தூத்துக்குடி பகுதியில் இன்னும் ஏற்றுமதி தொழில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டிப் பிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









