நடிச்சது மொத்தமே 2 படம்தான்... கோடி ரூபாய் பென்ஸ் காரில் உலா வர போகும் டிவி சீரியல் நடிகை!!

தாழ்வான உடலமைப்பை கொண்ட செடான் (Sedan) ரக கார்களுக்கு எப்போதுமே நம் நாட்டில் குறிப்பிட்ட ரசிகர் கூட்டம் உள்ளது. நிமிர்ந்த தோற்றம் கொண்ட எஸ்யூவி (SUV) ரக கார்களுக்கு தான் கடந்த சில வருடங்களாக மற்ற நாடுகளை போல் இந்தியாவிலும் மார்க்கெட் விரிவடைந்து வருகிறது என்றாலும், செடான் கார்களை வாங்குவோரும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். குறிப்பாக, விலையுயர்ந்த சொகுசு கார்களில் இந்த செடான்-எஸ்யூவி போட்டி எல்லாம் பெரியதாக இல்லை. கோடி ரூபாய்களில் இந்த இரு விதமான கார்களையும் மக்கள் வாங்குகின்றனர்.

குறிப்பாக, சினிமாக்காரர்கள் தங்களது அந்தஸ்தை உயர்த்தி காட்டுவதற்காக அதிக விலையில் தாழ்வான செடான் கார்களை வாங்குகின்றனர். அந்த வரிசையில், செடான் உடலமைப்பை கொண்ட பென்ஸ் காரை தற்போது ஒரு நடிகை வாங்கியுள்ளார். அவரை பற்றியும், அவர் வாங்கியுள்ள பென்ஸ் காரை பற்றியும் தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

tv actress buys mercedes-benz e-class

குளிக்கும் சோப்பு டிவி விளம்பரத்தின் மூலமாக வட இந்தியாவில் மக்கள் மத்தியில் பிரபலமாகியவர், கிரித்திகா கம்ரா (Kritika Kamra). உத்தர பிரதேசம் மாநிலம் பரேயிலியில் பிறந்தவரான கிரித்திகா கம்ரா, சோப்பு விளம்பரத்தின் மூலமாக 2011இல் டிவி சீரியல் தொடர் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

2019 வரையில் டிவி சீரியல்களில் நடித்துவந்த 36 வயதாகும் நடிகை கிரித்திகா கம்ரா, இடையிடையே குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்து, 2018இல் திரைக்கு வந்த 'மித்ரான்' என்கிற இந்தி ரீ-மேக் படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமாகினார். ஆனால், அதன்பின் பெரியதாக திரைப்பட வாய்ப்பு கிடைக்கவில்லை. நடிகை கிரித்திகா கம்ராவின் நடிப்பில் இதுவரையில் திரைக்குவந்த மற்றொரு திரைப்படமான 'பீட்' (Bheed) 2020ஆம் ஆண்டில் கொரோனா காலத்தில் இந்தியா இருந்த நிலைமையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது ஆகும்.

tv actress buys mercedes-benz e-class

அதன்பின் சில வெப் சீரிஸ்களில் நடித்த கிரித்திகா கம்ராவை சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் போட்டோக்களிலும், வீடியோக்களிலும் மட்டுமே பார்க்க முடிகிறது. அந்த வகையில், நடிகை கிரித்திகா கம்ராவின் புதிய படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. ஆனால், இந்த படங்கள் கொஞ்சம் ஸ்பெஷலானவை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், கோடி ரூபாய் விலை கொண்ட பென்ஸ் காரை ஷோரூமில் இருந்து கிரித்திகா கம்ரா டெலிவிரி பெறும்போது இந்த படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

காருக்கு மேட்சிங்காக கருப்பு நிற உடையில் மும்பை, கண்டிவாலி பகுதியில் உள்ள மெர்சிடிஸ் டீலர்ஷிப் ஷோரூமுக்கு சென்று பிராண்ட்-நியூ பென்ஸ் காரை நடிகை கிரித்திகா கம்ரா டெலிவிரி பெற்றுள்ளார். இந்த டிவி சீரியல் நடிகை வாங்கியிருப்பது மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனத்தின் தாழ்வான செடான் ரக காரான இ-கிளாஸ் லாங்-வீல்பேஸ் (E-Class LWB) ஆகும்.

லாங்-வீல்பேஸ் என்பது காரின் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையே அதிக தூரம் உள்ளதை குறிக்கிறது. இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் லாங்-வீல்பேஸ் கார் மொத்தம் மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மூன்று வேரியண்ட்களிலும் மூன்று விதமான என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அதேபோல், வேரியண்ட்கள் ஒவ்வொன்றின் விலைகளும் வெவ்வேறானவை ஆகும்.

இந்த பென்ஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.78.50 லட்சத்தில் இருந்து ரூ.92.50 லட்சம் வரையில் உள்ளன. இந்த காரினுள் டேஸ்போர்டில் மூன்று திரைகள் வழங்கப்படுகின்றன. இவற்றுடன், 4-ஸோண் ஆட்டோ ஏசி, 17-ஸ்பீக்கர் பர்ம்ஸ்டர் சவுண்ட் சிஸ்டம், 64-வண்ண கேபின் விளக்குகள், பனோராமிக் சன்ரூஃப் மற்றும் மெமரி ஃபங்க்சன் உடன் முன் இருக்கைகள் உள்ளிட்டவையும் இந்த பென்ஸ் காரில் வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பில் குறிப்பிடப்பட்டு இருப்பவை காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். ஆன்-ரோடு விலை பல இலட்ச ரூபாய்கள் அதிகமாக வரும். இருப்பினும், சில வருடங்களுக்கு முன்பு வரையில் டிவி சீரியல் தொடர்களில் கலக்கிக் கொண்டிருந்த நடிகைக்கு 1 கோடி ரூபாயில் கார் வாங்குவது பெரிய கஷ்டமாக இருந்திருக்காது என்றே நினைக்கிறோம்.

Article Published On: Saturday, May 31, 2025, 5:00 [IST]
English summary
Tv actress kritika kamra buys mercedes benz e class lwb in mumbai
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+