இந்த நாளுக்காக எத்தனை வருஷம் காத்துக்கிட்டு இருந்தாரு!! பிக்பாஸ் போனவருக்கு ரேஞ்ச் ரோவர் காராக வந்த அதிர்ஷ்டம்
பிக்பாஸ் (Bigg Boss), இந்தியா முழுவதும் பிரபலமான டிவி ரியாலிட்டி (TV Reality) நிகழ்ச்சியான இது பல்வேறு மொழிகளில் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் கலந்துக் கொண்டதற்கு பிறகு பலரது வாழ்க்கை சினிமாவில் மாறியுள்ளது.
அவ்வாறு சினிமாவில் முன்னணி நடிகர், நடிகையராக வளர்ந்தவர்கள் அதன்பின் விலையுயர்ந்த சொகுசு கார்களை வாங்குவதை பலமுறை நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். அந்த வரிசையில் தற்போது ஒரு பிக்பாஸ் பிரபலம் விலையுயர்ந்த ரேஞ்ச் ரோவர் (Range Rover) காரை வாங்கி உள்ளார். இந்த பிக்பாஸ் பிரபலத்தின் பெயர், அன்கிட் குப்தா (Ankit Gupta).

பெயரை பார்த்தவுடனே தெரிந்திருக்கும் இவர் இந்தி பிக்பாக்ஸில் கலந்துக் கொண்டவர் என்பது. கடந்த 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தி பிக்பாஸின் 16வது சீசனில் கலந்துக் கொண்ட அன்கிட் குப்தா, 84 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்தார். பிக்பாஸ் போட்டியில் கலந்துக் கொள்வதற்கு முன்பே 'உடாரியான்' (Udaariyaan) என்கிற டிவி சீரியலில் நடித்து இந்தி ரசிகர்கள் மத்தியில் அன்கிட் குப்தா பிரபலமானவராக இருந்தார்.
இன்னும் சொல்லப்போனால், அந்த இந்தி சீரியலின் மூலமாகவே பிக்பாஸ் போட்டியில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பை அன்கிட் குப்தா பெற்றார். 3 வருடங்கள் ஓடிய உடாரியான் சீரியலில் நடித்துக் கொண்டே பிக்பாஸ் போட்டியில் அன்கிட் குப்தா கலந்துக் கொண்டார். உடாரியான் சீரியலில் நடிப்பதற்கு முன்பு 2012ஆம் ஆண்டில் இருந்து பல டிவி சீரியல்களில் அன்கிட் குப்தா நடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, சில வெப் சீரிஸ்களிலும் (Web Series) நடித்துள்ள 36 வயதான நடிகர் அன்கிட் குப்தா, புதியதாக ரேஞ்ச் ரோவர் கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதனை அவரே தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்த இன்ஸ்டாகிராம் பதிவில், தன்னை இவ்வளவு உயரத்திற்கு கொண்டு வந்த ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அன்கிட் குப்தா நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் அன்கிட் குப்தா வாங்கி இருப்பது, ரேஞ்ச் ரோவர் வேலர் (Velar) கார் ஆகும். மற்ற ரேஞ்ச் ரோவர் கார்களை போலவே ரேஞ்ச் ரோவர் வேலர் காரையும் லேண்ட் ரோவர் (Land Rover) நிறுவனம் உற்பத்தி செய்கிறது. பெட்ரோல் என்ஜின் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் ரேஞ்ச் ரோவர் வேலர் காரின் விலை ஆனது இரண்டில் எந்த என்ஜின் உடன் வாங்கினாலும் ஒரே மாதிரியாக ரூ.87.90 லட்சமாக உள்ளது.
ரேஞ்ச் ரோவர் வேலர் காரில் 2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 2 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 250 பிஎஸ் வரையிலான இயக்க ஆற்றலையும், டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 204 பிஎஸ் மற்றும் 430 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலையும் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளன.
இதில் எந்த என்ஜின் உடன் ரேஞ்ச் ரோவர் வேலர் காரை நடிகர் அன்கிட் குப்தா வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. சாடார் கிரே, வரேசைன் நீலம், ஃபுஜி வெள்ளை மற்றும் சாண்டோரினி கருப்பு என 4 விதமான கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் ரேஞ்ச் ரோவர் வேலர் காரை பளபளப்பான ஃபுஜி வெள்ளை நிறத்தில் நடிகர் அன்கிட் குப்தா வாங்கி உள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரேஞ்ச் ரோவர் கார்களிலேயே விலை குறைவானது வேலர் ஆகும். விலை குறைவான ரேஞ்ச் ரோவர் கார் என சொன்னாலும் மேலே குறிப்பிடப்பட்டு இருப்பது காரின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் பல இலட்ச ரூபாய்கள் அதிகமாக ரூ.1 கோடி வரையில் வரும். இருப்பினும், ரூ.1 கோடி என்பது கூட பிக்பாஸிலும், டிவி சீரியல்களிலும் நடித்துவரும் அன்கிட் குப்தா போன்றோருக்கு பெரிய விஷயமாகவே இருக்காது.


Click it and Unblock the Notifications








