வாங்க வந்த காரை விட ஷோரூமுக்கு ஓட்டி வந்த கார் விலை அதிகம்! கிண்டல்களுக்கு ஆளான நடிகரின் வாழ்க்கை மாறிடுச்சு

ஒருவரது வாழ்க்கை எப்போது எவ்வாறு மாறும் என்றே யூகிக்க முடியாது என்பதால், எவரையும் தர குறைவாக நினைப்பது தவறு. நேற்று வரை கேலி செய்யப்பட்டு வந்தவர்கள் இன்று புகழின் உச்சிக்கு சென்று சம்பவங்களை எல்லாம் தினசரி வாழ்க்கையில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அவ்வாறு ஒரு சமயத்தில் இணையத்தில் மக்களின் கேலி, கிண்டலுக்கு ஆளாகிக் கொண்டிருந்தவர், ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான விலையில் புதியதாக பிராண்ட்-நியூ காரை வாங்கும் அளவிற்கு சென்றுள்ளார். அவரை பற்றியும், அவர் வாங்கியுள்ள காரை பற்றியும் தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

சினிமா ஸ்டார் ஆகிவிட்டாலே அதற்கேற்ப செலவு செய்து தனது வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதனாலேயே, பெரிய திரை நடிகர், நடிகையர் மட்டுமில்லாமல், சின்ன திரை நடிகர், நடிகைகளும் அவ்வப்போது புதியதாக கார் & பைக்குகளை வாங்குவதை நமது செய்தித்தளத்தில் தொடர்ச்சியாக பார்த்து வருகிறோம்.

serial actor buys hyundai creta

அந்த வரிசையில், தற்போது இந்தி டிவி சீரியல் நடிகர் கரண் வீர் மெஹ்ரா (Hindi TV Serial Actor Karan Veer Mehra) பிராண்ட்-நியூ ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) காரை வாங்கி உள்ளார். சில இந்தி டிவி சீரியல் தொடர்களில் நடித்துள்ள கரண் வீர் மெஹ்ரா, பிரபல டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளான பிக்பாஸ் மற்றும் கட்ரான் கே கில்லாடி உள்ளிட்டவற்றிலும் பங்கேற்றுள்ளார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 18வது சீசனில் நடிகர் கரண் வீர் மெஹ்ரா பங்கேற்றார்.

இந்த நிலையில்தான் தற்போது புத்தம் புதிய ஹூண்டாய் கிரெட்டா காரை இவர் வாங்கியுள்ளார். புதிய கிரெட்டா காரை டெலிவிரி எடுக்க விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ எக்ஸ்5 (BMW X5) லக்சரி காரில் நடிகர் கரண் வீர் மெஹ்ரா ஷோரூமுக்கு வந்தது அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது. பொதுவாகவே, இவ்வாறு விலையுயர்ந்த காரை வைத்திருப்பவர்கள், அதனை காட்டிலும் குறைந்த விலையிலான காரை டெலிவிரி பெற அவர்களாக நேரில் வர மாட்டார்கள்.

serial actor buys hyundai creta

வேறு யாரையாவது அனுப்பி காரை டெலிவிரி பெறுவர். ஆனால், நடிகர் கரண் வீர் மெஹ்ரா அப்படியெல்லாம் இல்லாமல், தனது பிஎம்டபிள்யூ காரில் வந்து கிரெட்டாவை டெலிவிரி பெற்றுள்ளார். ஆனால், இதுதொடர்பான வீடியோவை இன்ஸ்டாகிராம் (Instagram)-இல் பதிவிட்டுள்ளவர்கள் விலைமிக்க காரில் வந்து, விலை குறைவான காரை டெலிவிரி பெற்றிருப்பதை மரியாதை குறைவாக கருதுவதை அவர்களது பதிவின் மூலம் அறிய முடிகிறது.

ஆனால் உண்மையில் மரியாதை குறைவாக நினைக்கும் அளவிற்கு கிரெட்டா கார் ஒன்றும் தரம் தாழ்ந்த கார் கிடையாது. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் மக்கள் பலரால் அதிக எண்ணிக்கையில் விரும்பி வாங்கப்படும் கார்களுள் ஒன்று, ஹூண்டாய் கிரெட்டா ஆகும். இதனாலேயே கிரெட்டாவின் எலக்ட்ரிக் வெர்சனை கிரெட்டா எலக்ட்ரிக் என்கிற பெயரில் ஹூண்டாய் சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது.

serial actor buys hyundai creta

இந்த கிரெட்டா காரை நடிகர் கரண் வீர் மெஹ்ரா பணம் கொடுத்து வாங்கவில்லை; இது அவருக்கு டிவி ரியால்ட்டி நிகழ்ச்சியின் மூலமாக பரிசாக கிடைத்த கார் என்றும் சிலர் கூறுகின்றனர். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. தற்சமயம் விற்பனையில் இருக்கும் கிரெட்டா காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காரில் கிடைக்காத லெவல்-2 அடாஸ் (ADAS) வசதிகள் கூட கிரெட்டாவில் வழங்கப்படுகின்றன.

அதுமட்டுமின்றி, எக்ஸ்5 காரை காட்டிலும் அளவில் பெரியதான டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆனது கிரெட்டாவில் வழங்கப்படுகிறது. இந்த ஹூண்டாய் எஸ்யூவி காரின் ஆன்-ரோடு விலைகள் ரூ.21 லட்சம் வரையில் உள்ளன. கிரெட்டா காரின் விலைகள் சமீபத்தில்தான் ரூ.13,000 வரையில் குறைக்கப்பட்டன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சின்னத்திரை நடிகராக இருப்பினும், புதிய கிரெட்டா காரை வாங்குவதற்கு கரண் வீர் மெஹ்ரா நேரில் வந்திருப்பது, அவரது மனதை காட்டுகிறது. இப்படிப்பட்டவரை எவ்வாறு கேலி, கிண்டல் செய்ய சிலருக்கு தோன்றுகிறதோ என தெரியவில்லை. அவரது மனதை போலவே, அவர் புதியதாக பெற்றிருக்கும் ஹூண்டாய் கிரெட்டாவும் சிறப்பான கார் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Monday, March 10, 2025, 16:35 [IST]
English summary
Tv serial actor arrived in bmw x5 luxury car to take delivery of hyundai creta
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X