டிவி சீரியல்களில் நடித்தே இவ்வளவு பணம் சேர்த்துட்டாரா? பெற்றோரை இழந்த மனைவிக்கு நடிகர் வாங்கி கொடுத்த கார்!

பி.எம்.டபிள்யூ (BMW) கார்களை பிடிக்காதவர்கள் யார் தான் இருப்பார்கள். இந்தியாவில் விலையுயர்ந்த சொகுசு கார்களை விற்பனை செய்வதில் மெர்சிடிஸ் (Mercedes) நிறுவனத்துக்கு அடுத்து 2வது இடத்தில் பிஎம்டபிள்யூ உள்ளது. ஜெர்மனியை சேர்ந்த இந்த நிறுவனத்தில் இருந்து பல்வேறு மாடல்களில் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. அதாவது, தாழ்வான உடலமைப்பை கொண்ட செடான் (Sedan) ரக கார்களில் இருந்து நிமிர்ந்த தோற்றம் கொண்ட எஸ்யூவி (SUV) ரக கார்கள் வரையிலானவை பல்வேறு விதமான விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுள் பெரும்பாலான பிஎம்டபிள்யூ கார்களுக்கு இந்தியாவில் சிறப்பான வரவேற்பு கிடைப்பதுதான் இதில் ஹைலைட்டான விஷயமே.

அவ்வாறு இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் பிஎம்டபிள்யூ கார்களுள் ஒன்று, பிஎம்டபிள்யூ எக்ஸ்5 (X5) என்கிற எஸ்யூவி கார் ஆகும். இத்தகைய தரமான பிஎம்டபிள்யூ காரை இங்கு ஒரு நடிகர் தனது மனைவிக்கு பரிசாக வாங்கி கொடுத்துள்ளார். இந்த நடிகரின் பெயர், அவினாஷ் தூபே (Avinash Dubey) ஆகும்.

avinash dwivedi buys bmw x5

அவினாஷ் திவேதி (Avinash Dwivedi) என சொன்னால் தான் நிறைய பேருக்கு தெரிகிறது. இருப்பினும், இத்தகைய பெயரில் ஒரு நடிகரை நம் தமிழ் மக்கள் நிறைய பேர் கேள்விப்பட்டு இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், இவர் உத்தர பிரதேசத்தின் கோரக்பூரில் பிறந்த இந்தி நடிகர் ஆவார்.

சினிமா வாழ்க்கையை நடன கலைஞராக துவக்கிய அவினாஷ் திவேதி, 2009-10ஆம் காலக்கட்டத்தில் மும்பை (Mumbai)-க்கு வந்து பாலிவுட் (Bollywood)-இல் வாய்ப்பு தேடினார். அதன்படி, தன்னுடைய 21ஆம் வயதில் நடன ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றவர், அந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டு பாலிவுட்டில் கவனத்தை பெற ஆரம்பித்தார்.

avinash dwivedi buys bmw x5

அதன்பின், 2010இல் பங்கேற்ற மற்றொரு டேன்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் அவினாஷ் திவேதி தான் டைட்டில் வின்னர் ஆவார். அதன் மூலம், பாலிவுட் திரைப்பட வாய்ப்புகள் அவினாஷை தேடி வர ஆரம்பித்தன. திரைப்படங்களில் நடித்ததை காட்டிலும், விளம்பர காட்சிகளில் நடித்ததன் மூலமாகவே அவினாஷ் திவேதி நாடு முழுவதும் கவனத்தை பெற ஆரம்பித்தார்.

ஒன்றல்ல, இரண்டல்ல... சுமார் 15க்கும் மேற்பட்ட கமர்ஷியல் விளம்பர காட்சிகளில் நடித்துள்ளதன் காரணமாகவே அவினாஷ் திவேதியை நம்மில் நிறைய பேருக்கு எங்கேயோ பார்த்தது போன்று உணர்வு ஏற்படுகிறது. இவரது நடிப்பில் ஒளிப்பரப்பப்பட்டு வரும் 'துபாஹியா' (Dupahiya) என்கிற டிவி சீரியல் (TV Serial) மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருக்கும் நிலையில், மனைவிக்காக புதியதாக பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார் ஒன்றை நடிகர் அவினாஷ் திவேதி வாங்கி உள்ளார்.

avinash dwivedi buys bmw x5

காரை டெலிவிரி (Delivery) பெறும்போது மனைவி உடன் ஷோரூமுக்குள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவினாஷ் திவேதி தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மனைவிக்கு பரிசளிப்பதற்காக அவினாஷ் திவேதி பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காரை வெள்ளை நிறத்தில் வாங்கியுள்ளார். இந்த வெள்ளை நிறத்தை 'மினரல் வெள்ளை மெட்டாலிக்' (Mineral White Metallic) என பிஎம்டபிள்யூ நிறுவனம் அழைக்கிறது.

இது இல்லாமல், கார்பன் பிளாக் மெட்டாலிக், பிளாக் சாப்பையர் மெட்டாலிக், டான்சானைட் ப்ளூ மெட்டாலிக், ஸ்கைஸ்க்ராபர் கிரே மெட்டாலிக், பிரூக்ளீன் கிரே மெட்டாலிக் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களிலும் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார் விற்பனை செய்யப்படுகிறது. ஆக மொத்தத்தில் இந்த பிஎம்டபிள்யூ கார் மெட்டாலிக் ஷேடில் பளபளப்பானதாக மட்டுமே கிடைக்கிறது. மேட் (Matte) ஃபினிஷிங்கில் சொரசொரப்பாக கிடைப்பது இல்லை.

avinash dwivedi buys bmw x5

எக்ஸ் லைன் (xLine) மற்றும் எம் ஸ்போர்ட் (M Sport) என 2 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.97.80 லட்சத்தில் இருந்து ரூ.12.50 கோடி வரையில் உள்ளன. பெட்ரோல் என்ஜின் மற்றும் டீசல் என்ஜின் என 2 விதமான என்ஜின் ஆப்ஷன்களிலும் இந்த விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ கார் விற்பனைக்கு கிடைக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே குறிப்பிடப்பட்டு இருப்பது காரின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் பல இலட்சங்கள் அதிகமாக வரும். மனைவிக்கு கணவன்மார்கள் பலர் அவ்வப்போது புது புது வாகனங்களை வாங்கிக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால், இவ்வாறு விலையுயர்ந்த காரை வாங்கிக் கொடுக்கும்போதுதான் அது செய்திகளில் கவனத்தை பெறுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 8, 2025, 22:16 [IST]
English summary
Tv serial actor avinash dwivedi buys bmw x5 luxury car to gifted to wife
மேலும்... #celebrity cars #car delivery #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X