ஷோரூமுக்கு சாதாரணமா வந்தது இவ்வளவு பெரிய டிவி சீரியல் நடிகரா? கூட வந்தது யாரென்று பார்த்தீர்களா?
சினிமா நடிகர், நடிகையர் என்றாலே அடிக்கடி புது, புது சொகுசு கார்களை வாங்குவர் என்பதை பலமுறை பார்த்துள்ளோம். அதேநேரம் மறுப்பக்கம் தொலைக்காட்சி சீரியல் நட்சத்திரங்கள் தங்களது பொருளாதாரத்திற்கு ஏற்ப சொகுசு கார்களை வாங்குகின்றனர். டிவி சீரியல் நடிகர், நடிகைகள் பெரும்பாலும் வாங்குவது பட்ஜெட் விலையிலான கார்கள் ஆகும். அந்த வகையில் இங்கு ஒரு சீரியல் நடிகர் மஹிந்திராவின் லேட்டஸ்ட் அறிமுகமான தார் ரியர்-வீல்-டிரைவ் (Mahindra Thar RWD) காரை வாங்கியுள்ளார். யார் அந்த சீரியல் நடிகர் என்பதையும், அவர் வாங்கியுள்ள காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
மஹிந்திராவின் வாகனங்களுக்கு இந்தியா முழுவதுமே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக, மஹிந்திரா தார் ஆனது இந்தியாவின் நம்பர் ஒன் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனமாக அதிக பேரால் வாங்கப்பட்டு வருகிறது. இதற்கு போட்டியாக மாருதி சுஸுகி நிறுவனம் ஜிம்னியை அறிமுகம் செய்த போதிலும், தாரின் ஆதிக்கத்தை நிறுத்த முடியவில்லை.

போக, போக மஹிந்திரா தாரின் விற்பனை அதிகரித்து கொண்டே போகிறது. இதற்கேற்ப மஹிந்திரா நிறுவனமும் புது, புது தார் வாகனங்களை தொடர்ச்சியாக அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் கூட தார் ராக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். 3 கதவுகளுடன் விற்பனை செய்யப்பட்டு வந்த மஹிந்திரா தார் 5 கதவுகளுடன் தார் ராக்ஸ் என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் அறிமுகத்திற்கு முன்னதாகவே, 3-கதவு தாரில் ரியர்-வீல்-டிரைவ் வெர்சன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வாகனத்தைதான் இங்கு ஒரு சீரியல் நடிகர் வாங்கியுள்ளார். அவர் வேறு யாருமில்லை, பிரபல மலையாள டிவி சீரியல் நடிகர் ஜிஷின் மோகன் (Jishin Mohan) ஆவார். மலையாள டிவி சீரியல்களில் நகைச்சுவையான கதாபாத்திரங்களில் நடிப்பதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக ஜிஷின் மோகன் விளங்குகிறார்.

வரதா என அழைக்கப்படும் நடிகை எமிமோல் மோகனை 2014இல் திருமணம் செய்துக் கொண்ட பிறகு பலருக்கு பரீட்சையமான நடிகராக பிரபலமாகினார் ஜிஷின் மோகன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த நட்சத்திர தம்பதியர் கடந்த 2022ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்று தனித்தனியாக பிரிந்து விட்டனர். தற்போது புதிய மஹிந்திரா தார் வாகனத்தை டெலிவிரி பெறுவதற்கு நடிகை அமேயா நாயர் உடன் ஜிஷின் மோகன் ஷோரூமுக்கு சென்றுள்ளார்.
இருவரும் ஒரு விதமான உடைகளில் புதிய தார் வாகனத்துடன் ஸ்டைலாக புகைப்படங்களை எடுத்துக் கொண்டுள்ளனர். இதற்கு இணையாக, நடிகர் ஜிஷின் மோகன் வாங்கியிருக்கும் மஹிந்திரா தார் ரியர்-வீல்-டிரைவ் காரும் வெள்ளை நிறத்தில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், தார் ரியர்-வீல்-டிரைவ் வாகனம் ஆனது மஹிந்திரா தாரின் லேட்டஸ்ட் இணைப்பாக கடந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

மஹிந்திரா தாரின் சிறப்பம்சமே எந்தவொரு கரடு முரடான சாலையிலும் இயங்கக்கூடிய அதன் திறன் ஆகும். ஆனால், தார் ரியர்-வீல்-டிரைவ் ஆனது அந்த அளவிற்கு ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்றது கிடையாது. சாதாரணமான கார்களை போலவே இதனை தினசரி போக்குவரத்துக்கு பயன்படுத்தலாம். ஏனெனில், என்ஜின் ஆற்றல்கள் இந்த வாகனத்தில் பின் சக்கரங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
இதற்கேற்ப குறைவான விலையில் தார் ரியர்-வீல்-டிரைவ் வாகனம் கிடைக்கிறது. இந்த வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.11.35 லட்சத்தில் இருந்து ரூ.14.10 லட்சம் வரையில் உள்ளன. இந்த வாகனம் ஹார்ட்-டாப் தோற்றத்தில் மட்டுமே கிடைக்கிறது. அதாவது, வாகனத்தின் மேற்கூரையை திறக்க முடியாது. பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் தார் ரியர்-வீல்-டிரைவ் விற்பனை செய்யப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிகமாக ஆஃப்-ரோடுகளுக்கு கொண்டு செல்ல போவதில்லை; நகரத்திற்குள் மட்டுமே பயன்படுத்த போகிறீர்கள் எனில், மஹிந்திரா தார் ரியர்-வீல்-டிரைவ் சிறந்த வாகனம் ஆகும். இதனை எந்த என்ஜின் ஆப்ஷன் உடன் டிவி சீரியல் நடிகர் ஜிஷின் மோகன் வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. அதேபோல், ஏ.எக்ஸ் (ஆப்ஷ்னல்) மற்றும் எல்.எக்ஸ் என 2 விதமான வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த மஹிந்திரா வாகனத்தின் எந்த வேரியண்ட்டை இவர் தேர்வு செய்துள்ளார் என்பதும் உறுதியாக தெரியவில்லை.


Click it and Unblock the Notifications









