ஆசை ஆசையாய் வாங்கியது கடைசியில் இப்படி முடியும்னு நினைச்சு பார்த்திருக்க மாட்டார்! டிவி சீரியல் நடிகரின் பைக்!

ஐரோப்பியர்கள் இந்தியாவை கண்டுப்பிடிக்க போய் தான் அமெரிக்காவை கண்டுப்பிடித்தனர். இதனாலேயே அமெரிக்காவுக்கும் 'இந்தியா' என்கிற பெயருக்கும் எப்போதுமே ஒரு தொடர்பு உள்ளது. இப்போதும் கூட, அமெரிக்காவில் இந்தியன் மோட்டார்சைக்கிள் (Indian Motorcycle) என்கிற பெயரில் ஒரு மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனம் செயல்படுகிறது. பெயரை தவிர்த்து இந்த நிறுவனத்திற்கும் இந்தியாவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. விற்பனையிலும் கூட. ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் விற்பனையாகும் இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் பைக்குகளை விரல்விட்டு எண்ணி விடலாம்.

1901ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சுமார் 124 ஆண்டு கால பழமையான நிறுவனம், இந்தியன் மோட்டார்சைக்கிள் ஆகும். அமெரிக்காவில் இந்த நிறுவனத்தின் பைக்குகளுக்கு தனி ஈர்ப்பு உள்ளது. அமெரிக்கர்களுக்கு பொதுவாகவே தாழ்வான உடலமைப்பு கொண்ட பைக் என்றாலே மிகவும் பிடிக்கும். இதனாலேயே அவ்வாறான தோற்றம் கொண்ட க்ரூஸர் (Cruiser) ரக பைக்குகள் இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தில் இருந்து அதிகம் விற்கப்படுகின்றன.

rohit roy selling his bike

அவ்வாறான இந்தியன் க்ரூஸர் ரக பைக்குகளுள் ஒன்றுதான், இந்தியன் ஸ்காட் பாப்பர் (Scout Bobber) ஆகும். சற்று விலையுயர்ந்த பைக் என்பதால், இதனை இந்தியாவில் வைத்திருப்பவர்கள் மிகவும் குறைவே. அரிதான அந்த இந்திய ஸ்காட் பாப்பர் பைக் கஸ்டமர்களுள் ஒருவர், டிவி சீரியல் நடிகரான ரோகித் ராய் (TV Serial Actor Rohit Roy) ஆவார்.

1990களில் பாலிவுட்டில் (Bollywood) நடிகராக வலம் வந்த ரோகித் ராய், தற்போது 56 வயதில் இந்தி திரைப்படங்களில் முக்கிய குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்தி டிவி சீரியல்களிலும் 2007ஆம் ஆண்டு வரையில் நடித்து வந்தார். திரைப்படங்களை காட்டிலும், டிவி சீரியல்கள் தான் ரோகித் ராய்க்கு அதிக ரசிகர்களை பெற்றுத்தந்து பெரிதும் பிரபலப்படுத்தின.

rohit roy selling his bike

இப்போதும் இந்தி, பெங்காலி மொழி திரைப்படங்களில் நடித்து நன்றாக சம்பாதித்து வந்தாலும், தனது பழைய இந்தியன் ஸ்காட் பாப்பர் பைக்கை விற்க நடிகர் ரோகித் ராய் முன்வந்துள்ளார். இவரிடம் 6 விலையுயர்ந்த பைக்குகள் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான், இந்த இந்தியன் பைக் ஆகும். இதனை விற்க விரும்புவதாக தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் ரோகித் ராய் பைக்கின் படங்கள் உடன் பதிவிட்டுள்ளார்.

அத்துடன், இந்த இந்தியன் பைக் உடனான தனது பிணைப்பையும் குறிப்பிட்டுள்ளார். தன்னிடம் இன்னும் சில சூப்பர் பைக்குகள் உள்ளன என்றும், ஆனால் அதில் எதுவும் இந்த ஸ்காட் பாப்பர் பைக் அளவிற்கு பயணத்தின்போது சவுகரியத்தை தரவில்லை எனவும் பைக்கை ரோகித் ராய் புகழ்ந்து தள்ளியுள்ளார். தனது இந்தியன் ஸ்காட் பாப்பர் பைக்கிற்கு நிர்ணயித்துள்ள விலை எதையும் இந்த நடிகர் குறிப்பிடவில்லை.

இவர் வாங்கிய சமயத்தில் பைக்கின் ஆன்-ரோடு விலை சுமார் ரூ.14 லட்சம் என்கிற அளவில் இருந்ததாக கூறப்படுகிறது. இவ்வளவு விலையுயர்ந்த இந்த மோட்டார்சைக்கிளை மேட் ஃபினிஷிங்கில் (Matte Finishing) கருப்பு நிறத்தில் வைத்திருக்கும் நடிகர் ரோகித் ராய், கடந்த காலங்களில் இந்த பைக்கை சில நிகழ்ச்சிகளுக்கு கொண்டுச்செல்ல வெளியே கொண்டுவந்து இருக்கிறார்.

அவ்வாறு ஒருமுறை இந்த இந்தியன் பைக்கில் நடிகர் ரோகித் ராய் ஹெல்மெட் அணியாமல் சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியது. இந்தியன் ஸ்கார்ட் பாப்பர் பைக்கை பொறுத்தவரையில், இதில் பொருத்தப்படும் 1,131சிசி வி-ட்வின் என்ஜின் அதிகப்பட்சமாக 99 பிஎச்பி மற்றும் 98 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2019ஆம் ஆண்டில் நடிகர் ரோகித் ராய் அவர்களால் வாங்கப்பட்ட இந்த இந்தியன் ஸ்காட் பாப்பர் பைக் இதுவரையில் எத்தனை கிமீ தொலைவிற்கு ஓடியுள்ளது என்கிற விபரம் கிடைக்க பெறவில்லை. படங்களில் பைக்கின் தோற்றத்தை வைத்து பார்க்கும்போது, ரூ.9 லட்சம் வரையில் பைக்கிற்கு ரோகித் ராய் விலை சொல்லலாம். அதாவது, ஒரு எஸ்யூவி (SUV) காரை வாங்கக்கூடிய விலையில்!

More from DriveSpark

Article Published On: Thursday, May 8, 2025, 5:00 [IST]
English summary
Tv serial actor rohit roy selling his indian scout bobber superbike
மேலும்... #celebrity bikes #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+