கிரிக்கெட்டை விட்டு சினிமாவுக்கு வந்த நடிகர்! 23 வயதில் கோடி ரூபா காரை வாங்கி குடும்பத்தை பெருமை படுத்திட்டார்

ரேஞ்ச் ரோவர் எவோக் (Range Rover Evoque), உலகளவில் பிரபலமான லக்சரி எஸ்யூவி கார். கட்டுக்கோப்பான உடலமைப்பினால், ரேஞ்ச் ரோவர் கார்களுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. நமது இந்தியாவும் உள்பட. நம் நாட்டில் ரேஞ்ச் ரோவர் கார்களை குறிப்பாக சினிமா பிரபலங்கள் அதிகளவில் வாங்கி பயன்படுத்துகின்றனர். அந்த வகையில், டிவி சீரியல் நடிகர் (TV Serial Actor) ஒருவர் புதியதாக ரேஞ்ச் ரோவர் காரை வாங்கி உள்ளார். யார் அந்த நடிகர் என்பதையும், அவர் வாங்கியுள்ள ரேஞ்ச் ரோவர் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

லேண்ட் ரோவர் (Land Rover) நிறுவனம் உருவாக்கும் ரேஞ்ச் ரோவர் மற்றும் டிஃபெண்டர் (Defender) கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஏனெனில் மற்ற விலையுயர்ந்த கார்களுடன் ஒப்பிடுகையில், ரேஞ்ச் ரோவர் மற்றும் டிஃபெண்டர் கார்கள் சற்று வித்தியாசமானவை மற்றும் கூடுதல் கம்பீரமானவை ஆக உருவாக்கப்படுகின்றன.

samarth jurel buys range rover

இதனாலேயே, எப்போதும் மக்கள் மத்தியில் கவனத்தை பெற நினைக்கும் சினிமா பிரபலங்களுள் பெரும்பாலானவர்கள் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் அல்லது டிஃபெண்டர் காரை வாங்குகின்றனர். சிலரிடம் இந்த இரு லக்சரி எஸ்யூவி கார்களும் உள்ளன. அந்த வரிசையில், தற்போது ரேஞ்ச் ரோவர் எவோக் காரை வாங்கியிருக்கும் டிவி சீரியல் நடிகரின் பெயர், சமர்த் ஜூரெல் (Samarth Jurel) ஆகும்.

இந்த பெயரில் எந்த சீரியல் நடிகரையும் கேள்விப்பட்டது இல்லையே என நீங்கள் கேட்பது புரிகிறது. சமர்த் ஜூரெல், இந்தி டிவி சீரியல் நடிகர் ஆவார். மத்திய பிரதேசம் மாநிலத்தின் இந்தூரில் பிறந்தவரான சமர்த் ஜூரெல், ஆரம்பத்தில் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமிக்கவராக இருந்துள்ளார். ஏனெனில், சமர்த் ஜூரெலின் தந்தை கிரிக்கெட் வீரர் ஆவார்.

samarth jurel buys range rover

அவ்வப்போது உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துக் கொண்ட சமர்த் ஜூரெலை பின்னர் காலத்தில் மாடலிங் துறை ஈர்க்க ஆரம்பித்துள்ளது. அதன்படி, மாடலிங்கில் ஈடுப்பட்டு வந்தவர், அதன் மூலமாக சிறு, சிறு விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர், சின்னத்திரை சமர்த் ஜூரெலை வரவேற்க ஆரம்பித்தது.

23 வயது மட்டுமே ஆன சமர்த் ஜூரெல் ஏற்கனவே 5 இந்தி டிவி சீரியல் தொடர்களில் நடித்துவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்தி பிக்பாஸ் போட்டியின் 17வது சீசனில் வைல்ட்-கார்டு போட்டியாளராக கலந்த கொண்ட நடிகர் சமர்த் ஜூரெல், இந்த நிலையில் புதியதாக ரேஞ்ச் ரோவர் எவோக் கார் ஒன்றை வாங்கி உள்ளார்.

samarth jurel buys range rover

தாய், தந்தை என குடும்பத்துடன் லேண்ட் ரோவர் ஷோரூமுக்கு சென்று, பிராண்ட்-நியூ ரேஞ்ச் ரோவர் எவோக் காரை டெலிவிரி பெறும் வீடியோவை நடிகர் சமர்த் ஜூரெல் தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஷோரூமில் இந்து முறைப்படி பூஜைகள் முடிந்த பின் காரை அங்கிருந்து சமர்த் ஜூரெல் வெளியே ஓட்டிவரும் காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரேஞ்ச் ரோவர் எவோக் காரின் எந்த வேரியண்ட்டை, எந்த என்ஜின் உடன் டிவி சீரியல் நடிகர் சமர்த் ஜூரெல் வாங்கியுள்ளார் என்பதை அறிய முடியவில்லை. ஏனெனில், அதுகுறித்த எந்த விபரத்தையும் சமர்த் ஜூரெல் தனது இன்ஸ்டா பதிவில் வெளியிடவில்லை; அதேபோல் காரின் பின்பக்க தோற்றத்தையும் வீடியோவில் காட்டவில்லை. ரேஞ்ச் ரோவர் எவோக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.67.90 லட்சமாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 25, 2025, 23:13 [IST]
English summary
Tv serial actor samarth jurel buys range rover evoque luxury car
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X