டிவி சீரியல் நடிகையா இவங்க.. இவ்ளோ அழகா இருக்காங்க! அதவிட அவங்க வாங்கின காரு ரொம்ப ரொம்ப அழகா இருக்கு!
உச்ச நட்சத்திர நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு டிவி சீரியல் நடிகைகள் சிலர் சொகுசு கார்களில் வலம் வர தொடங்கி இருக்கின்றனர். இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீப சில காலமாக சீரியல் நடிகைகள் சிலர் மிக மிக விலை உயர்ந்த கார்களை வாங்கும் சம்பவம் நாட்டில் அதிகளவில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், இப்போதும் ஓர் டிவி சீரியல் நடிகை விலை உயர்ந்த காரை வாங்கி இருக்கின்றார். இதனால் அவர் தற்போது வாகன உலகின் ஹாட் டாபிக்காக மாறி இருக்கின்றார்.
யார் அந்த நடிகை? அவர் வாங்கி இருப்பது என்ன சொகுசு கார் மாடல்? அதன் விலை எவ்வளவு? மற்றும் சிறப்புகள் என்ன என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். இதுதவிர இந்த சொகுசு காரில் கிடைக்கும் எஞ்சின் விபரங்களையும் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

குந்தாலி பாக்யா எனும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அத்ரிஜா ராய். இவரே அந்த விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய சீரியல் நடிகை ஆவார். பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் லக்சூரி கார் மாடலையே அவர் வாங்கி இருக்கின்றார். புத்தம் புது பிஎம்டபிள்யூ எக்ஸ்1 கார் மாடலையே அவர் வாங்கி இருக்கின்றார்.
இதன் விலை ரூ. 65 லட்சத்திற்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த அளவு அதிக விலைக் கொண்ட காரையே அத்ரிஜா ராய் வாங்கி இருக்கின்றார். இது அவரின் அதீத வளர்ச்சியை குறிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. சமீப சில காலமாகவே அத்ரிஜா ராய்-இன் வளர்ச்சி என்பது அபரீதமானதாக உள்ளது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக அவரின் இந்த சொகுசு கார் கொள்முதல் சம்பவம் அமைந்திருக்கின்றது. இப்போது இந்தியாவில் விற்பனையில் இருப்பது 3 ஆம் தலைமுறை எக்ஸ்1 ஆகும். இதனை சென்ற ஆண்டின் தொடக்கத்திலேயே பெங்களூருவில் நடைபெற்ற பிஎம்டபிள்யூ ஜாய் - டவுண் நிகழ்ச்சியின் வாயிலாக பிஎம்டபிள்யூ அறிமுகப்படுத்தியது.
பழைய தலைமுறையைப் போலவே இந்த புதிய தலைமுறையிலும் பிஎம்டபிள்யூ நிறுவனம் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய ஆப்ஷன்களை வழங்குகின்றது. வேரியண்டைப் பொருத்த வரை இரண்டு விதமான வேரியண்டுகளிலேயே இது விற்பனைக்குக் கிடைக்கும். எக்ஸ்-லைன் மற்றும் எம்-ஸ்போர்ட் ஆகியவையே அவை ஆகும். மிக தாராளமான இட வசதிக் கொண்ட சொகுசு காராக எக்ஸ்1 காட்சியளிக்கின்றது.

இதன் நீளம் 53 மிமீ, அகலம் 24 மிமீ மற்றும் உயரம் 44 மிமீ ஆகும். இதேபோல், இதன் வீல் பேஸும் 22 மிமீட்டராக உள்ளது. 1.5 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் மோட்டாரே இந்த காரில் வழங்கப்படுகின்றது. இது அதிகபட்சமாக 136 எச்பி மற்றும் 230 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.
இதற்கு அடுத்தபடியாக டீசல் ஆப்ஷனில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 150 எச்பி பவர் மற்றும் 360 என்எம் டார்க்கை வெளியேற்றும். இரு மோட்டார்களிலும் 7 ஸ்பீடு டூயல் கிளட் ஆட்டோமேட்டிக் தேர்வே வழங்கப்படுகின்றது.
சொகுசு மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளைத் தாங்கி இருப்பதிலும் இந்த கார் மிக சிறந்த வாகனமாகக் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 10.70 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் திரை, அடாஸ் (ADAS) மற்றும் கார் இணைப்பு ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தகைய சிறப்புகளைத் தாங்கிய எக்ஸ்1 கார் மாடலையே சீரியல் நடிகை தற்போது வாங்கி இருக்கின்றார். இதுதவிர இன்னும் சில கார்களும் அவரிடத்தில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால், அவை பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், இப்போது அவர் வாங்கி இருப்பது மிகவும் சூப்பரான ஓர் சொகுசு கார் என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








