பாக்க பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி சாதாரணமா இருக்காங்க! ஆனா இவ்ளோ பெரிய ஆளா! றெக்க மட்டும் இருந்தா தேவத சார்!
திரைப்பட துறையை சேர்ந்த நடிகர், நடிகைகள் எல்லாம் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களை (Luxury Cars) வாங்குவதைதான் வழக்கமாக வைத்துள்ளனர். நடிகர், நடிகைகள் எல்லாம் ஆஃப்-ரோடு சாகச பயணங்களுக்கு ஏற்ற கார்களை வாங்குவது என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. இருப்பினும் ஒரு சில நடிகர், நடிகைகள் ஆஃப்-ரோடு எஸ்யூவி (Off-Road SUV) ரக கார்களை வாங்கி கொண்டுதான் உள்ளனர். குறிப்பாக இந்தியாவை சேர்ந்த திரையுலக பிரபலங்கள் மத்தியில், மஹிந்திரா தார் (Mahindra Thar) ஆஃப்-ரோடு எஸ்யூவி கார், தற்போது வேகமாக பிரபலமடைந்து வருகிறது.
பிரகாஷ் ராஜ் (Prakash Raj) மற்றும் கியாரா அத்வானி (Kiara Advani) உள்ளிட்ட பிரபலங்கள் பலரிடமும், மஹிந்திரா தார் கார் உள்ளது. இந்த வரிசையில் திரைத்துறையை சேர்ந்த மேலும் ஒரு பிரபலம் தற்போது மஹிந்திரா தார் காரை வாங்கியுள்ளார். அவர் நடிகை லாவண்யா (Lavanya) ஆவார்.

இவர் கன்னட சீரியல் நடிகை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். அத்துடன் இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்திலும், இவர் மிகவும் பிரபலமாக உள்ளார். நடிகை, இன்ஸ்டாகிராம் பிரபலம் என்பதை எல்லாம் கடந்து, லாவண்யாவிற்கு மற்றொரு முகமும் உள்ளது. அது மருத்துவர் (Doctor) என்ற முகம் ஆகும்.
ஆம், இவர் பல் மருத்துவர் (Dentist) ஆவார். இருப்பினும் நடிப்பு மீது கொண்ட காதலால், சீரியல் துறையில் தற்போது இவர் வேகமாக வளர்ந்து வருகிறார். இந்த சூழலில், மஹிந்திரா தார் காரை லாவண்யா தற்போது வாங்கியுள்ளார். புத்தம் புதிய மஹிந்திரா தார் காரை டெலிவரி எடுத்த வைரல் வீடியோவை (Viral Video), லாவண்யா வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ, சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. லாவண்யா வாங்கியிருப்பது, மஹிந்திரா தார் காரின் 3 டோர் (3 Door) வெர்ஷன் ஆகும். இந்த காரின் 5 டோர் (5 Door) வெர்ஷன், மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar ROXX) என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.
சரி, விஷயத்திற்கு வருவோம். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மஹிந்திரா தார் கார் (3 டோர்), 11.35 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 17.60 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
மஹிந்திரா தார் காரில், மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. அவை 2.0 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் ஆகியவை ஆகும். இந்த காரில், 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே உள்பட பல்வேறு வசதிகளும் (Features) வழங்கப்படுகின்றன.
இதுதவிர ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் ஹோல்டு கண்ட்ரோல் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட அம்சங்கள் எல்லாம் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. எனவே இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சவால் நிறைந்த ஆஃப்-ரோடு சாகச பயணங்களை அடிக்கடி மேற்கொள்பவர்களுக்கு ஏற்ற காராக மஹிந்திரா தார் உள்ளது. மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny) மற்றும் ஃபோர்ஸ் கூர்கா (Force Gurkha) உள்ளிட்ட கார்களுடன், மஹிந்திரா தார் போட்டியிட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








