நடிச்சது 2 படம் தான்... டிவி சீரியல்களில் நடித்தே மஹிந்திரா கார் வாங்கிய நடிகை!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து சமீப காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட தரமான கார்களுள் ஒன்றாக எக்ஸ்யூவி700 (XUV700)-ஐ சொல்லலாம். இந்த மஹிந்திரா காரை பலரும் போட்டி போட்டு வாங்கிவரும் நிலையில், டிவி சீரியல் நடிகை (TV Serial Actress) ஒருவர் எக்ஸ்யூவி700 காரை வாங்கி உள்ளார். கணவருடன் ஷோரூமுக்கு சென்று புதிய காரை டெலிவிரி பெறும் படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிட்டுள்ளார். யார் அந்த நடிகை என்பதையும், அவர் வாங்கியுள்ள எக்ஸ்யூவி700 காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து சமீப காலத்தில் வெளிவந்த பல எஸ்யூவி ரக கார்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில், கடந்த 2021ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்யூவி700 காருக்கும் கஸ்டமர்கள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளனர். ஏற்கனவே விற்பனையில் இருந்த எக்ஸ்யூவி500 காருக்கு மாற்றாக, எக்ஸ்யூவி700 அறிமுகம் செய்யப்பட்டது.

rashmi prabhakar buys mahindra xuv700

பழைய எக்ஸ்யூவி500 காரில் இருந்து முற்றிலும் மேம்பட்டதாக புதிய எக்ஸ்யூவி700 கார் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், எக்ஸ்யூவி700 கார் அறிமுகம் செய்யப்பட்டே 3 வருடங்கள் நிறைவடைந்துவிட்டது. இந்த காரை புதியதாக வாங்கி இருக்கும் நடிகை, ராஷ்மி பிரபாகர் (Rashmi Prabhakar) ஆவார்.

தொலைக்காட்சி சீரியல் நடிகையான ராஷ்மி பிரபாகர் கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்து தமிழ், கன்னடம், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் டிவி சீரியல்களில் நடித்துள்ளார். தமிழில் பொறுத்தவரையில், 2022-23 காலக்கட்டத்தில் ஒளிப்பரப்பப்பட்ட 'கண்ணே கலைமானே' சீரியலில் மாதுரி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து கவனத்தை ஈர்த்தார்.

rashmi prabhakar buys mahindra xuv700

கர்நாடகா மாநிலம், மங்களூரில் பிறந்தவரான ராஷ்மி பிரபாகர், கர்நாடக மக்கள் மத்தியில் 'லக்‌ஷ்மி பாரம்மா' என்கிற பெயரில் அறியப்படுகிறார். இதற்கு காரணம், கன்னட மொழியில் இவரது நடிப்பில் ஒளிப்பரப்பப்பட்ட லக்‌ஷ்மி பாரம்மா டிவி சீரியல் மக்கள் மத்தியில் மிகுந்த கவனத்தை பெற்றது ஆகும்.

டிவி சீரியல்கள் மட்டுமின்றி, கன்னட மொழியில் இரு திரைப்படங்களிலும் நடித்துள்ள ராஷ்மி பிரபாகர் புதியதாக மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை அடர் மெரூன் நிறத்தில் வாங்கியுள்ளார். கணவருடன் ஷோரூமுக்கு சென்றவர் அங்கு காரை டெலிவிரி பெறும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

rashmi prabhakar buys mahindra xuv700

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.13.99 லட்சத்தில் இருந்து ரூ.25.89 லட்சம் வரையில் உள்ளன. 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என 2 விதமான என்ஜின் ஆப்ஷன்களில் எக்ஸ்யூவி700 விற்பனை செய்யப்படுகிறது. இதில் எந்த என்ஜின் ஆப்ஷன் உடன் இந்த காரை நடிகை ராஷ்மி பிரபாகர் வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர், நடிகைகள் அவ்வப்போது புது, புது கார்களை வாங்குவதை தொடர்ச்சியாக பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது கன்னட நடிகை ராஷ்மி பிரபாகர் புதியதாக மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரை வாங்கி உள்ளார். மேலே குறிப்பிடப்பட்டு இருப்பவை காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே; ஆன்-ரோடு விலைகள் இன்னும் அதிகமாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, February 3, 2025, 12:14 [IST]
English summary
Tv serial actress rashmi prabhakar buys mahindra xuv700 car
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X