ஸ்ருதி நாராயணன் வீடியோபோல இந்த நாடக நடிகையின் வீடியோவும் வைரலாகுது! பாய் பிரண்டோட கார் ஷோரூமுக்கே வந்துட்டாங்க
'சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகை ஸ்ருதி நாராயணனின் அந்தரங்க வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை சமீபத்தில் ஏற்படுத்தியது. இது ஓர் ஏஐ (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ என நடிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த வீடியோவைத் தொடர்ந்து தற்போது மற்றுமொரு சீரியல் நடிகையின் வீடியோ இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. அது வேறு ஒன்றும் அல்ல, புதிய காரை அந்த சீரியல் நடிகை டெலிவரி எடுக்கும் வீடியோவே அது ஆகும். அவர் வாங்கி இருப்பது மிகவும் காஸ்ட்லியான சொகுசு கார் மாடல் ஆகும்.
இதனால்தான் அந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, சீரியலில் நடித்தே இந்த ஆடம்பர காரை அவர் வாங்கிவிட்டாரா என்றே பலரையும் ஆச்சரியப்பட செய்திருக்கின்றது. சொகுசு வசதிகளுக்கு பெயர்போன மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் (Mercedes Benz C Class) காரையே அந்த சீரியல் நடிகை வாங்கி இருக்கின்றார்.

சோனியா சிங், இவரே அந்த காஸ்ட்லியான காரை வாங்கிய டிவி நாடக நடிகை ஆவார். தெலுங்கு சீரியல்களிலேயே அவர் நடித்துக் கொண்டிருக்கின்றார். அதுமட்டுல்ல இவர் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார். ஆனால், அதுவும் சின்ன சின்ன ரோல்களில் மட்டுமே அவர் நடித்துள்ளார். உதாரணமாக, 'விருபக்சா' தெலுங்கு திரைப்படத்தைச் சொல்லலாம்.
இந்த படத்தில் ஓர் கிராமத்து பெண்ணாக சிறிய ரோலில் அவர் நடித்திருப்பார். இத்தகைய நடிகையே ஓர் அட்டகாசமான ஆடம்பர காரை வாங்கி மொத்த கார் காதலர்களின் கவனத்தையும் தன் பக்கம் அவர் திருப்பி இருக்கின்றார். அவர் வாங்கி இருக்கும் சி கிளாஸ் கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டே ரூ. 61.85 லட்சம் என்கிற விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இது வெறும் ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதன் உயர் நிலை வேரியண்டின் விலை ரூ. 69 லட்சத்திற்கும் அதிகமாக விற்கப்படுகின்றது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இத்தகைய காஸ்ட்லியான காரையே சோனியா சிங் தற்போது வாங்கி இருக்கின்றார்.
இந்த காரை அவர் டெலிவரி பெறும் வீடியோவே இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. தன்னுடைய ஆண் நண்பரான சித்து பவன் உடன் சென்றே இந்த காரை அவர் டெலிவரி பெற்றிருக்கின்றார். சொகுசான டிராவல் அனுபவத்தை வழங்குவதில் மிக சிறப்பான காரே இந்த சி கிளாஸ்.

குறிப்பாக இட வசதியை இது மிக தாராளமாக வழங்கும். இதன் நீளம் மட்டும் 4.75 மீட்டர் ஆகும். இதுவே இந்த காரில் பயணிக்கும் பயணிகள் அதிக இட வசதியைப் பெற்றுக் கொள்ள ஏதுவாக இருக்கின்றது. ஒரே நேரத்தில் இந்த காரில் ஐந்து பேர் வரை பயணிக்க முடியும்.
ஐவருக்கும் சொகுசான டிராவல் அனுபவம் கொஞ்சமும் குறைச்சலின்றி கிடைக்கும். நவீன மற்றும் ஆடம்பர அம்சங்களாக இந்த காரில் ஏகப்பட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், 11.9 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்டவை சி கிளாஸ் காரில் வழங்கப்பட்டு உள்ளன.
இதுமட்டுமல்ல 710W திறன் கொண்ட 15 ஸ்பீக்கர்களை உள்ளடக்கிய பர்மாஸ்டர் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், காற்றோட்டத்தை உறுதிப்படுத்தும் வசதிக் கொண்ட இருக்கைகள் மற்றும் 100W வேகமாக சார்ஜ் செய்யும் வசதிக் கொண்ட யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் உள்ளிட்டவற்றையும் இந்த கார் கொண்டுள்ளது.
இத்துடன் பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்துவதற்காக பன்முக ஏர்பேக்குகள், 360-டிகிரி பார்வை திறன் கொண்ட கேமரா, பிளைண்ட் ஸ்பாட் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் ஹை பீம் அசிஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதேபோல், மோட்டார் ஆப்ஷனிலும் தாராள மயமானதாக இந்த கார் மாடல் உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டு ஆப்ஷன்களும் இதில் வழங்கப்படுகின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் முன்னணி திரைப்பட நடிகைகள் மட்டுமல்ல சீரியல்களில் ஃபேமஸாக வலம் வந்துக் கொண்டிருக்கும் நடிகைகளும் ஆடம்பர கார்களை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு சான்றாகவே தெலுங்கு டிவி சீரியல் நடிகை சோனியா சிங்-இன் இந்த ஆடம்பர கார் கொள்முதல் சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








