கொடி கம்பத்தின் எடை 10 ஆயிரம் கிலோவா! காரை இனி எடைக்குதான் போடணும்! சல்லி சல்லியா நொறுக்கீட்டாங்க!

தமிழக வெற்றிக் கழக கட்சியின் மாநாடு மதுரையில் நாளை (ஆகஸ்ட் 21) நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 20) பிரம்மாண்டமான கொடி கம்பத்தை நடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது எதிர்பாராத விதமாக கொடி கம்பம் சரிந்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் மீது விழுந்தது.

இந்த விபத்து நிகழ்ந்த சமயத்தில், காருக்கு உள்ளே யாரும் இல்லை. எனவே நல்வாய்ப்பாக யாருக்கும் உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை. இந்த சமயத்தில் கொடி கம்பம் விழுந்த காரை பற்றிய தகவல்களை நெட்டிசன்கள் இணையத்தில் அதிகமாக தேடி வருகின்றனர். அது டொயோட்டா இன்னோவா கார் ஆகும்.

Damaged Toyota Innova MPV

TN 64 D 0005 என்ற பதிவு எண் கொண்ட அந்த டொயோட்டா இன்னோவா கார், கடந்த 2010ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முதல் தலைமுறை டொயோட்டா இன்னோவா கார் ஆகும். முதல் தலைமுறை டொயோட்டா இன்னோவா கார் கடந்த 2005ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டு வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதன்பின் அதே 2016ம் ஆண்டில் இரண்டாவது தலைமுறை டொயோட்டா இன்னோவா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா என்ற பெயரில் தற்போதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

TVK Conference Flag Pole Accident

இந்த வரிசையில் டொயோட்டா இன்னோவா காரின் 3வது தலைமுறை மாடல் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் என்ற பெயரில் கடந்த 2022ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதுவும் தற்போது விற்பனையில் உள்ளது. ஆக மொத்தத்தில் டொயோட்டா இன்னோவா கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு 20 ஆண்டுகள் கடந்து விட்டன.

டொயோட்டா இன்னோவா கார் 3 தலைமுறைகளை கண்டு விட்டாலும் கூட, அதன் முதல் தலைமுறை மாடலுக்கு இந்தியாவில் ரசிகர்கள் அதிகம். இது இந்தியாவின் எம்பிவி செக்மெண்ட்டில் புரட்சியை ஏற்படுத்திய ஒரு கார் ஆகும். இது டொயோட்டா குவாலிஸ் காருக்கு மாற்றாக இந்திய சந்தையில் களமிறக்கப்பட்டது.

டொயோட்டா நிறுவனத்தின் ஐஎம்வி என சுருக்கமாக அழைக்கப்படும் இன்னோவேட்டிவ் இன்டர்நேஷனல் மல்டி-பர்பஸ் வெய்கில் பிளாட்பார்ம் (IMV - Innovative International Multi-purpose Vehicle Platform) அடிப்படையில், டொயோட்டா இன்னோவா உருவாக்கப்பட்டிருந்தது. முதல் தலைமுறை டொயோட்டா இன்னோவா கார், நிறைய காரணங்களுக்காக பிரபலம்.

அந்த காரணங்கள் என்னென்ன? என்ற பட்டியலை தயாரித்தால், அதன் கட்டுமான தரத்தை தவிர்க்கவே முடியாது. அந்த அளவிற்கு சிறப்பான கட்டுமான தரத்தை டொயோட்டா இன்னோவா கொண்டிருந்தது. டொயோட்டா இன்னோவா காரின் நீடித்து உழைக்கும் தன்மைக்கு, அதன் பாடி-ஆன்-ஃப்ரேம் கன்ஸ்ட்ரக்ஸன்தான் (Body-on-frame Construction) மிகவும் முக்கியமான காரணமாகும்.

டொயோட்டா இன்னோவா அறிமுகம் செய்யப்பட்ட சமயத்தில், இந்தியாவில் நிறைய இடங்களில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருந்தன (தற்போதும்தான்). அப்படிப்பட்ட மோசமான சாலைகளில் பயணம் செய்தாலும் கூட, நீடித்து உழைக்க கூடிய தன்மையை டொயோட்டா இன்னோவா காருக்கு வழங்கியது, இந்த பாடி-ஆன்-ஃப்ரேம் கன்ஸ்ட்ரக்ஸன்தான்.

பாடி-ஆன்-ஃப்ரேம் கன்ஸ்ட்ரக்ஸனை கொண்ட கார்கள், ஆஃப்-ரோடு திறன்களில் தலைசிறந்து விளங்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஆனால் என்னதான் வலிமையான கட்டுமான தரத்தை கொண்டிருந்தாலும் கூட, டொயோட்டா இன்னோவா காரின் மீது விழுந்தது, சுமார் 10 ஆயிரம் கிலோ எடை கொண்ட 100 அடி கொடி கம்பம் ஆகும்.

இதன் காரணமாக டொயோட்டா இன்னோவா காரின் மேற்கூரை முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. அத்துடன் அதன் உட்பகுதியிலும் மிக கடுமையான சேதம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே ஒருவேளை இந்த டொயோட்டா இன்னோவா காரை சரி செய்வது என முடிவு செய்யப்பட்டால், அது மிகவும் சவாலான விஷயமாக இருக்கும் என கூறப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கொடி கம்பம் சரிந்து விழுந்து விபத்து நிகழ்ந்த சமயத்தில் காருக்கு உள்ளே யாரும் இல்லாத காரணத்தால், யாருக்கும் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்படவில்லை என்பது நல்ல விஷயம். இருப்பினும் இது போன்ற பணிகளை மேற்கொள்ளும்போது, முன்னெச்சரிக்கை உணர்வுடன் கவனமாக செயல்படுவது நன்மை பயக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, August 21, 2025, 0:17 [IST]
English summary
Tvk conference flag pole accident details about damaged toyota innova mpv
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+