ஒரு பைசா கூட இன்சூரன்ஸ் கிடைக்காது! விஜய் மாநாட்டு கொடி கம்பம் விழுந்த காரில் இப்படி ஒரு பிரச்சனையா?

மதுரையில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது கட்சியின் இரண்டாவது மாநில மாநாட்டை நாளை (21ம் தேதி ) நடத்த திட்டமிட்டிருந்தார். இதற்கான ஏற்பாடுகளின் போது 100 அடி உயர கொடி கம்பம் அறுந்து விழுந்ததுந. இதில் கட்சி நிர்வாகியின் கார் சேதமானது. இந்த காருக்கு இன்சூரன்ஸ் கிடைக்குமா? இன்சூரன்ஸ் விதிகள் என்ன? விரிவாக காணலாம் வாருங்கள்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நடத்தி வருகிறார். இ்நத கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. நாளை அதாவத ஆகஸ்ட் 21ம் தேதி இந்த மாநாடு வழங்க அனுமதிவழங்கப்பட்டிந்த நிலையில் அதற்கான பணிகள் நடந்து வந்தது. இந்த மாநாட்டில் நடிகர் விஜய் சுமார் 100 அடி உயர கொடி கம்பத்தில் கட்சி கொடியை ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

TVK Maanadu

இந்நிலையில் இன்று காலை கிரேன் மூலம் 100 அடி உயர கொடி கம்பத்தை நட்டும் பணி நடந்தது. அப்பொழது கிரேன் பெல்ட் அறுந்து விழுந்ததில் 100 அடி உயர கொடி கம்பம் சாய்ந்தது. இந்த கொடி கம்பம் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கட்சி நிர்வாகி ஒருவரின் இன்னோவா கார் மீது விழுந்தது. இதனால் அந்த கார் பலத்த சேதமடைந்தது. இதன் டிரோன் காட்சிகள் கூட வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இப்பொழது பலருக்க இந்த காருக்கான நஷ்டத்தை யாரு ஈடு செய்வது என பேசி வருகின்றனர்.

இதற்காக கட்சியிலிருந்து இழப்பீடு தரப்படுமா என்பது தெரியவில்லை என்றாலும் இந்த காரின் உரிமையாளர் சரியான இன்சூரன்ஸ் திட்டத்தை தேர்வு செய்து காருக்கு இன்சூரன்ஸ் வாங்கியிருந்தால், இதனால் ஏற்பட்ட நஷ்டத்தை அதன் மூலம் ஈடு செய்ய முடியும். இந்த விபத்தில் காரின் ரூஃப் பகுதி முழுவதும் சேதமானது. ஒட்டு மொத்த காரின் வடிவமைப்பே மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

TVK Maanadu

இதனால் இந்த காரை ரிப்பேர் செய்ய வேண்டும் என்றால் சொந்தமாக கார் வாங்கும் அளவிற்கு செலவாகும். இதனால் இந்த காரை சரி செய்ய பெறும்பாலும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பணம் தராது மாறாக கார் எவ்வளவு தொகைக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதோ அந்த பணத்தை காரின் உரிமையாளருக்கு வழங்க முடிவு செய்யும்.

இந்திய மோட்டார் வாகன சட்டப்படி 3ம் நபருக்கான வாகன இன்சூரன்ஸ் மட்டுமே கட்டாயம். இந்நிலையில் இந்த காரின் பதிவெண் TN64D0005
என்ற எண்ணை வைத்து வாகன் தளத்தில் நாம் தேடி பார்த்த போது அந்த வாகனம் 2010ம் ஆண்ஐ மதுரை உசிலம்பட்டி ஆர்டிஓவில் பதிவு செய்யப்பட்ட டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா கார் என்பது தெரியவந்தது. இந்த கார் 2.5 லிட்டர் இன்ஜின் கொண்ட ஜி2 வேரியன்ட் கார் ஆகும்.

TVK Maanadu

முக்கியமாக இந்த வாகனத்திற்கு ஃபிட்னஸ் சான்று கடந்த மார்ச் மாதம் 29ம் தேதியே முடிந்துவிட்டது தற்போது வரை அதுபுதுப்பிக்கப்படவில்லை. இ்நத வாகனத்திற்காக வாங்கப்பட்ட இன்சூரன்ஸ் வரும் செப்டம்பர் மாதம் 25ம் தேதியுடன் முடிவடைகிறது. இதன்படி இந்த வாகனத்திற்கு இன்சூரன்ஸ் இருக்கிறது. இதை கிளைம் செய்யலாம் என யோசித்தாலும், ஃபிட்னஸ் இல்லாத வாகனத்தை பயன்படுத்தியதால் இந்த வாகனத்திற்கு இன்சூரன்ஸ் கிளைம் கிடைக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பழைய கார்களை பயன்படுத்தும் போது அதற்கான ஃபிட்னஸ் சான்று சரியாக இருக்கிறதா என சோதனை செய்து கொள்ள வேண்டும். ஃபிட்னஸ் சான்ற இல்லாத வாகனத்தை சாலைகளில் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். இது காலாவதியாகும் காலத்திற்கு முன்பு ஆர்டிஓவிடம் காரை எடுத்து சென்று அதை புதுப்பிக்க வேண்டும். விஜய் மாநாட்டில் கொடி கம்பம் விழுந்து சேதமான காருக்கு இன்சூரன்ஸ் பணம் கிடைக்கவாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 20, 2025, 19:00 [IST]
English summary
Tvk maanadu flag post crash car insurance claim will be rejected
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X