25 வருஷத்துக்கு முன்னாடி விஜய் கூட குத்தாட்டம் போட்ட நடிகையா இது! மூனே கால் கோடி ரூபா கார்ல தேவத மாரி போறாங்க!

கேரளாவை சேர்ந்த நடிகைகள் பலரும் தமிழ் திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ளனர். அதேபோல் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நடிகைகள் பலரும், பாலிவுட் திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இது உண்மையில் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் ஆகும். இதற்கு ஐஸ்வர்யா ராய் பச்சன் (Aishwarya Rai Bachchan) ஒரு சிறந்த உதாரணம். இவர் கர்நாடக மாநிலம் மங்களூரில் பிறந்தவர் ஆவார். அதேபோல் ஷில்பா ஷெட்டியும் (Shilpa Shetty) கூட, கர்நாடக மாநிலத்தில் பிறந்து, பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறியவர்தான்.

ஐஸ்வர்யா ராய் பச்சனை போலவே, ஷில்பா ஷெட்டியும் கூட கர்நாடக மாநிலம் மங்களூர் நகரில் பிறந்தவர்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்த மங்களூர் அழகிகள், பாலிவுட் திரையுலகை கடந்து தமிழ் உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகின்றனர்.

Shilpa Shetty Spotted In Range Rover Autobiography

இதில், ஷில்பா ஷெட்டியை எடுத்து கொண்டால், தமிழில் கடந்த 1996ம் ஆண்டு வெளியான மிஸ்டர் ரோமியா (Mr.Romeo) திரைப்படத்தில் பிரபு தேவா (Prabhu Deva) உடன் நடித்துள்ளார். அத்துடன் கடந்த 2000ம் ஆண்டு வெளியான குஷி (Kushi) திரைப்படத்தில், தமிழக வெற்றிக் கழக (TVK - Tamilaga Vettri Kazhagam) கட்சியின் தலைவர் விஜய் (Vijay) உடனும் ஷில்பா ஷெட்டி நடித்துள்ளார்.

குஷி திரைப்படத்தில் வரும் மேக்கரீனா மேக்கரீனா (Macarena Macarena) பாடலுக்கு, விஜய் உடன் இணைந்து, துள்ளலான நடனத்தை ஷில்பா ஷெட்டி வெளிப்படுத்தியிருந்தார். இந்த சூழலில், ஷில்பா ஷெட்டியின் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

Shilpa Shetty

இந்த வைரல் வீடியோவில், ஷில்பா ஷெட்டி கார் ஒன்றில் ஏறி புறப்படுவதை நம்மால் காண முடிகிறது. நிகழ்ச்சி ஒன்றில் இரவு விருந்து முடிந்த பின்னர் ஷில்பா ஷெட்டி புறப்பட்டபோது இந்த வைரல் வீடியோ எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வைரல் வீடியோவை உன்னிப்பாக கவனித்தால், ஷில்பா ஷெட்டி பயணம் செய்தது ரேஞ்ச் ரோவர் (Range Rover) கார் என்பது தெரிய வருகிறது.

ஆனால் இது மிகவும் சிறிய வீடியோ என்பதால், கார் முழுமையாக தெரியவில்லை. எனவே ஷில்பா ஷெட்டி பயணம் செய்தது ரேஞ்ச் ரோவர் காரின் எந்த வேரியண்ட்? என்பதை உறுதியாக கூற முடியவில்லை. ஆனால் ஷில்பா ஷெட்டியிடம் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி (Range Rover Autobiography) கார் ஒன்று உள்ளது.

அந்த ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரில் ஷில்பா ஷெட்டி பல நிகழ்ச்சிகளுக்கு வந்து சென்றுள்ளார். அந்த வீடியோக்களை எல்லாம் ஆராய்ந்து பார்த்ததில், அதன் இன்டீரியரும், தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவில் உள்ள காரின் இன்டீரியரும் ஒன்று போலவே உள்ளன. எனவே ஷில்பா ஷெட்டி பயணம் செய்தது, ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காராக இருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம்.

ஷில்பா ஷெட்டி வைத்துள்ள ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரின் ஆன்-ரோடு விலை சுமார் 3.25 கோடி ரூபாய் வரும். இதுதவிர லம்போர்கினி அவென்டெடார் (Lamborghini Aventador), பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி (Bentley Continental GT), பிஎம்டபிள்யூ ஐ8 (BMW i8), பிஎம்டபிள்யூ எக்ஸ்5 (BMW X5) மற்றும் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக் (Land Rover Range Rover Vogue) ஆகிய கார்களையும் கூட ஷில்பா ஷெட்டி வைத்துள்ளார்.

அத்துடன் ஃபெராரி போர்ட்டோஃபினோ (Ferrari Portofino) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல் க்ளாஸ் (Mercedes Benz GL Class) ஆகிய கார்களும் கூட ஷில்பா ஷெட்டியிடம் இருக்கின்றன. ஷில்பா ஷெட்டியின் இந்த விலை உயர்ந்த கார் கலெக்ஸனை (Car Collection) பார்த்தாலே, அவர் சொகுசு கார்களில் பயணம் செய்வதை எவ்வளவு விரும்புகிறார்? என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஷில்பா ஷெட்டி பயன்படுத்திய ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி கார், திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். சல்மான் கான் (Salman Khan) மற்றும் ரன்பீர் கபூர் (Ranbir Kapoor) போன்ற திரையுலக நட்சத்திரங்கள் பலரிடமும், ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி கார் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 6, 2025, 12:52 [IST]
English summary
Tvk president vijay movie actress shilpa shetty spotted in range rover autobiography viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+