யாருக்கும் தெரிஞ்சர கூடாது! 6 லட்ச ரூபாய் காரில் விஜய் வந்ததற்கு காரணம் இதுதானா! ஆளும்கட்சி எதிர்பாக்காத மூவ்!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை (Tamil Nadu Governor R.N. Ravi), நடிகரும், தமிழக வெற்றிக் கழக (Tamilaga Vettri Kazhagam - TVK) தலைவருமான விஜய் (Vijay) சந்தித்திருப்பதுதான் தற்போது 'ஹாட் டாபிக்' ஆக இருக்கிறது. இந்த சந்திப்பின்போது, மகளிர் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆளுநரிடம், விஜய் மனு அளித்துள்ளார். ஆளும்கட்சிக்கு எதிரான விஜய்யின் இந்த 'மூவ்', பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளுநர் உடனான சந்திப்பின்போது, மற்றொரு விஷயத்திலும் விஜய் 'ஸ்கோர்' செய்துள்ளார்.

பொதுவாக ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) போன்ற மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களில் பயணம் செய்வதை விஜய் விரும்ப கூடியவர். கடந்த காலங்களில் அவர் ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணம் செய்ததை எல்லாம் நாம் பார்த்துள்ளோம். ஆனால் ஆளுநரை சந்திக்க அவர் மிகவும் எளிமையான முறையில் வருகை தந்தார்.

Maruti Suzuki Swift-Vijay

இதற்காக அவர் பயன்படுத்தியது மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) கார் ஆகும். இது ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த எளிமையான கார்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் ஆரம்ப விலை வெறும் 6.49 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 9.60 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். எனவே இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்க கூடிய நடிகர்களில் ஒருவராக உள்ள விஜயை பொறுத்தவரையில், இது மிகவும் சாதாரணமான ஒரு கார்தான்.

Vijay Spotted In Humble Maruti Suzuki Swift

பொதுவாக அரசியல்வாதிகள் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களை பயன்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் மிகவும் எளிமையான மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் வந்ததன் மூலமாக, விஜய் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் செய்தியாக மாறும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.

இதை பயன்படுத்தி கொண்டு, கார் மூலமாக அவர் தனது எளிமையை மக்களுக்கு எடுத்து காட்டியிருப்பதாகவே இதை கருத வேண்டியுள்ளது. அத்துடன் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் போன்ற எளிமையான கார்களை பயன்படுத்துவதன் மூலமாக, சாமானிய மக்களில் ஒருவர் என்ற பிம்பத்தை கட்டமைக்க முடியும் என விஜய் தரப்பு கருதுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: விஜய் வெள்ள நிவாரணம் வழங்குவதற்கு களத்திற்கு வராதது சமீபத்தில் பெரும் சர்ச்சையாக மாறியது. இதற்கு விஜய் தரப்பு கூறிய காரணம் என்னவென்று, அனைவருக்கும் தெரியும். விஜய் களத்திற்கு வந்தால் கூட்டம் கூடி விடும் என்ற காரணத்தைதான் அவர்கள் முன் வைத்தனர்.

நிலைமை இப்படி இருக்கும்போது, மிகவும் விலை உயர்ந்த சொகுசு காரில் விஜய் வந்தால், பொதுமக்கள் அடையாளம் கண்டு கொண்டு தேவையில்லாமல் கூட்டம் கூடி விடும் என கருதியும், மிகவும் எளிமையான மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை பயன்படுத்தியிருக்கலாம். நீங்கள் 10 நிமிடம் சாலையில் நின்றாலே, ஏராளமான மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார்களை காண முடியும்.

எனவே மக்களுடன் மக்களாக ஒன்றி போய் வருவதற்காக விஜய் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை பயன்படுத்தியிருக்கலாம். ஆளுநர் மாளிகைக்குள் விஜய் நுழையும் வீடியோவை உன்னிப்பாக கவனித்தால் உங்களுக்கு ஒரு விஷயம் புரியும். அவர் வந்த காரில் தவெக கட்சி கொடி போன்ற அரசியல்வாதிகளுக்கான எந்தவொரு அடையாளமும் இல்லை.

ஏதோ சாமானிய மக்களின் கார் போலதான் அது இருந்தது. எனவே கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவும் கூட, விஜய் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை பயன்படுத்தியிருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம். ஒரு வகையில் இது அரவிந்த் கெஜ்ரிவாலின் (Arvind Kejriwal) பாணி ஆகும். அவர் மிகவும் எளிமையான மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) காரை பயன்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Monday, December 30, 2024, 23:58 [IST]
English summary
Tvk president vijay spotted in humble maruti suzuki swift viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+