சொகுசு பங்களா போன்ற கேராவேன்! விஜய் இந்த வண்டில தான் மாநாட்டுக்கு வரப்போறாரா?
நடிகர் விஜய் தனது அரசியல் கட்சிக்காக தமிழக சுற்று பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள நிலையில் அதற்காக பிரத்தியேகமாக பிரச்சார வேன் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த வேன் தற்போது மிகப்பெரிய அளவில் சமூகவலைத்தளங்களில் டிரெண்டிாகி வருகிறது. இந்த வேன் குறித்த விரிவான விபரங்களை காலம் வாருங்கள்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். இந்நிலையில் தமிழகத்தில் மற்ற அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சார சுற்று பயணத்தை துவங்கிவிட்டனர். அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிச்சாமியும், திமுக தரப்பில் ஸ்டாலினும் கட்சிகளுக்கான பிரச்சாரத்திற்காக தமிழகம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜயயும் வரும் 21ம் தேதி மதுரையில் மாநாடு நடத்துகிறார். இதற்காக அவருக்கு பிரத்தியேகமான வாகனத்தை கோவையை சேர்ந்த நிறுவனம் ஒன்று தயார் செய்திருந்தது. இந்த வீடியோ கடந்த மே மாதமே வெளியாகியிருந்தது. இதற்கு முன்னர் நடிகர்விஜய் இந்த வாகனத்தில் தான் பல இடங்களுக்கு சென்ற வந்த நிலையில் மதுரை மாநாட்டிற்கும் அவர் இந்த வாகனத்தில் தான் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வாகனம் ஃபோர்ஸ் நிறுவனத்தின் டெம்போ டிராவலர் வாகனமாக இருக்கிறது. இந்த வாகனத்தின் ஹெட்லைட்டில் கூட TVK என் வாசத்துடன் நடிகர் விஜயின் புகைப்படம் இருக்கிறது. இந்த வாகனம் இவரின் பயன்பாட்டிற்காக மாடிஃபிகேஷன் செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக வெளிப்புறத்தில் பிரிமியம் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. வீல்கள் எல்லாம் அலாய் வீல்களாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தின் உட்புறம் கேபின் பகுதியில் வெளியிருந்து பார்த்தால் தெரியும் படி கொடியுடன் கூடிய நடிகர் விஜயின் புகைப்படம் இருக்கிறது. ரியர் வியூ மிரரில் TVK என அச்சிடப்பட்டுள்ளது. இது போக இவர் காரின் முன்சீட்டில் அமர்ந்தால் வெளியிலிருந்து பார்க்கும் போது வியூ சிறப்பாக இருக்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது. அதற்கு பின்னால் ஒரு கேராவேன் போன்ற வசதி செய்யப்பட்டுள்ளது.
இதில் மசாஜ் சீட்டுகள், அமர்வதற்கோ அல்லது சிறிது நேரம் படுத்து ரெஸ்ட் எடுப்பதற்கோ சிறிய பெட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது முழுடவதுமாக ஏசி வாகனமாக உள்ளது. உள்ள எல்லாம் பிரிமியம் லெதர் கொண்டு ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. பின்புறம் விஜய் மற்றும் ஆனந்த் ஆகியோரின் புகைப்படம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கும் பின்புறம் சிறிய கழிவறை வசதியும் வழங்கப்பட்டுள்ளது. அதில் வெஸ்டன் டாய்லெட், வாஷ் பேஷன் சிறிய ஷவர் வசதிகள் இதில் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இவர் வேன் மேலே ஏறி நின்று பேச வசதியாக சன்ரூஃப் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கு கீழே மேடை வழங்கப்பட்டுள்ளது. அந்த மேடை மேலே அவர் ஏறியதும் அவரை தாங்கி செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அரசியல் தலைவர்கள் பலர இப்படியான பிரச்சார வேனை பயன்படுத்தி வரும் நிலையில்இந்த வேன் நடிகர் விஜய் பயன்படுத்துவதால் பிரபலமாகியுள்ளது. வரும் 25ம் தேதி மதுரை மாநாட்டிற்கு வரும் விஜய் இந்த வேனை பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









