கரூரில் இருந்து விஜய் கௌம்பி போன சொகுசு காரின் விலை இத்தன கோடியா!
தவெக என சுருக்கமாக அழைக்கப்படும் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK - Tamilaga Vettri Kazhagam) பிரச்சாரம், கரூரில் (Karur) நேற்று (செப்டம்பர் 27) நடைபெற்றது. இதில், தவெக தலைவர் விஜய் (Vijay) கலந்து கொண்டு பேசினார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் (Stampede) சிக்கி, ஒட்டுமொத்தமாக 40 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதில், குழந்தைகள் மற்றும் பெண்களும் அடக்கம். எனவே இந்த சம்பவம் தமிழ்நாடு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கியுள்ளது. குடியரசு தலைவர் திரவுபதி முர்மு (President Droupadi Murmu) மற்றும் பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) உள்ளிட்டோர், இந்த சம்பவத்திற்கு தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (Tamil Nadu CM M.K. Stalin) நேரடியாக கரூர் வந்து, பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து சென்று விட்டார். மேலும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரான விஜய்யும், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் தமிழக அரசு, மத்திய அரசு, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் காங்கிரஸ் (Congress) உள்பட பல்வேறு அமைப்புகளும், உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு நிவாரண தொகையை அறிவித்து கொண்டுள்ளன. முன்னதாக கரூரில் பிரச்சாரத்தை முடித்து கொண்டு, திருச்சி விமான நிலையத்திற்கு (Trichy Airport) சென்ற விஜய், அங்கிருந்து சென்னை (Chennai) சென்றடைந்தார்.

இதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு அவர் மிகவும் விலை உயர்ந்த சொகுசு காரில் (Luxury Car) வந்தார். அப்போது எடுக்கப்பட்ட வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது காட்டு தீ போல் வேகமாக பரவி வருகிறது. டைம்ஸ் நவ் யூடியூப் (YouTube) பக்கத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவில் நாம் பார்ப்பது, லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் (Land Rover Range Rover) ஆகும். வீடியோவில் நாம் பார்க்கும் காரில் உள்ள TN 07 DV 5050 என்ற பதிவு எண்ணை வைத்து தேடியதில், இந்த தகவல் தெரிய வந்துள்ளது. இன்னும் மிகவும் தெளிவாக சொல்வதென்றால், இது லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் காரின் 3.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட ஆட்டோபயோகிராபி (Autobiography) வேரியண்ட் ஆகும்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த வேரியண்ட்டின் விலை 2.57 கோடி ரூபாய் என்று கார்தேக்கோ தளம் கூறியுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) மட்டுமே. ஆன்-ரோடு விலை (On-Road Price) சுமாராக 3.20 கோடி ரூபாய் வரும் என்று கூறப்படுகிறது. விஜய் பயணம் செய்த லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் கார் புத்தம் புதியது ஆகும். கடந்த பிப்ரவரி மாதம்தான் அந்த கார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கரூரில் நடைபெற்றுள்ள சம்பவம் துரதிருஷ்டவசமானது. இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, தவறு நடந்திருந்தால், அதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்துடன் எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதும் அவசியம்.


Click it and Unblock the Notifications








