500 தமிழக இன்ஜினியரிங் மாணவர்களுக்காக ரூ.100 கோடி ஒதுக்கிய சென்னை நிறுவனம்... இவங்களுக்கு இவ்ளோ நல்ல மனசா!!

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று 500 இன்ஜினியரிங் மாணவர்களின் படிப்பிற்கு உதவி செய்வதற்காக ரூ. 100 கோடியை ஒதுக்கி இருக்கின்றது. அது எந்த நிறுவனம்? எதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது? என்பது போன்ற முக்கியமான மற்றும் சுவாரஷ்ய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்த நிறுவனங்களில் டிவிஎஸ் (TVS)-ம் ஒன்றாகும். தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களையே முக்கிய உற்பத்தியாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிறுவனமே 500 இன்ஜினியரிங் மாணவர்களின் படிப்பிற்கு உதவும் ரூ. 100 கோடியை ஒதுக்கி இருக்கின்றது.

TVS cheema scholarship for tn engineering students

'டிவிஎஸ் சீமா ஸ்காலர்ஷிப்' (TVS Cheema Scholarship) எனும் திட்டத்தின் கீழே இந்த பெரும் தொகையை இன்ஜினியரிங் மாணவர்களுக்கு டிவிஎஸ் நிறுவனம் ஒதுக்கி இருக்கின்றது. இந்த திட்டத்தை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் நேற்றைய (சனிக் கிழமை) தினம் தொடங்கி வைத்தார்.

நிறுவனத்தின் சேர்மேன் வேணு சீனிவாசன் முன்னிலையிலேயே இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தைச் சேர்ந்த மெக்கானிக்கல் பிரிவு மாணவர்களுக்கு நிதியுதவி வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன் கூறியுள்ளார்.

Cm

தமிழக மாணவர்களின் நலனில் அக்கறைக் கொண்டு இந்த திட்டத்தை டிவிஎஸ் நிறுவனம் கொண்டு வந்திருக்கின்றது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. பலர் டிவிஎஸ் நிறுவனத்தை இதற்காக பாராட்டிக் கொண்டு இருக்கின்றனர். மேலும், டிவிஎஸ் நிறுவனத்தின் மீதிருந்த நற்மதிப்பும் இதன் வாயிலாக மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

டிவிஎஸ் நிறுவனத்தின் நிறுவனர் டிஎஸ் சீனிவாசன் பிறந்த தினத்தை முன்னிட்டே இந்த நிதியுதவி திட்டத்தை டிவிஎஸ் அறிமுகம் செய்திருக்கின்றது. இவர் சீமா என்றும் அறியப்படுகின்றார். இதனாலேயே திட்டத்திற்கு சீமா என்கிற பெயர் சூட்டப்பட்டு இருக்கின்றது. இவரும் மெக்கானிக்கல் இன்ஜினியர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஸ்காலர்ஷிப் திட்டம் குறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் முக ஸ்டாலின், "இந்த திட்டம் மிக சிறந்த நினைவஞ்சலியாக அமையும்" என்று தெரிவித்தார். மேலும், பேசிய அவர், "மாணவர்களின் திறமையை ஊக்குவிப்பது மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடப் பிரிவை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த திட்டம் அமையும்" என்றார்.

சமீப காலமாக மாணவர்கள் மத்தியில் இன்ஜினியரிங் பாடப் பிரிவிற்கு பெரிய அளவில் வரவேற்புக் கிடைக்காத நிலை தென்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவிற்கு கூடுதல் வலுசேர்க்கும் விதமாக டிவிஎஸ் தன்னுடைய டிவிஎஸ் சீமா ஸ்காலர்ஷிப் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கின்றது.

ரோபோட்டிக்ஸ் மற்றும் எதிர்கால தொழில்நுட்ப பாடப் பிரிவிற்கும் இது ஓர் திறவுகோளாக இருக்கும் என டிவிஎஸ் நிறுவனம் நம்பிக்கைத் தெரிவித்து இருக்கின்றது. தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு முழு ஆதரவை இந்த ஸ்காலர்ஷிப் திட்டம் வழங்கும் என்றும் நிறுவனம் கூறி இருக்கின்றது. முழு டியூசன் கட்டணம், ஸ்டடி மெட்டீரியல் மற்றும் பலவற்றிற்கு சப்போர்ட் செய்யும் என கூறப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த ஸ்காலர்ஷிப் திட்டத்தின்கீழ் பயன்பெறுவதற்கான மாணவர்களை தேர்வு செய்ய ஓர் தனிக் குழுவையே டிவிஎஸ் சார்பில் உருவாக்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், தகுதியான மாணவர்கள் மட்டுமே இந்த திட்டத்தின்கீழ் பலன் பெறுவார்கள் என நம்பப்படுகின்றது. பல தகுதியுள்ள மாணவர்கள் வறுமையின் காரணத்தினால் பிடித்த மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை படிக்க முடியாமல் அந்த திட்டத்தை கைவிடுகின்றனர். இத்தகையோருக்கே டிவிஎஸ் தன்னுடைய சிறப்பு ஸ்காலர்ஷிப் திட்டத்தின் உதவி கரத்தை நீட்டி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Sunday, October 29, 2023, 22:18 [IST]
English summary
Tvs announced tvs cheema scholarship to serve tn engineering students
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+