டூவீலர் சர்வீஸில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக டிவிஎஸ் தான் நம்பர் 1; ஆய்வு முடிவில் தகவல்

இந்தியாவில் டூவீலர் விற்பனைக்கு பின்பு செய்யப்படும் சர்வீஸ்களில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக டி.வி.எஸ். நிறுவனம் தான் நம்பர் 1 இடத்தில் இருப்பதாக தற்போது வெளியாகியுள்ள ஆய்வு முடிவு ஒன்றில் தெரிவிக்கப்பட்ட

By Balasubramanian

இந்தியாவில் டூவீலர் விற்பனைக்கு பின்பு செய்யப்படும் சர்வீஸ்களில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக டி.வி.எஸ். நிறுவனம் தான் நம்பர் 1 இடத்தில் இருப்பதாக தற்போது வெளியாகியுள்ள ஆய்வு முடிவு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டூவீலர் சர்வீஸில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக டிவிஎஸ் தான் நம்பர் 1; ஆய்வு முடிவில் தகவல்

இந்தியாவில் விற்கப்படும் டூவீலர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட பின்பு செய்யப்படும் சர்வீஸ்கள் அந்தந்த நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டர்கள் மூலம் நடந்தப்படுகின்றன. பெரும்பாலும் டூவிலரை சர்வீஸ் செய்தல் மற்றும் வாட்டர் சர்வீஸ் செய்தல் உள்ளிட்ட வேலைகள் அங்கே நடக்கிறது.

டூவீலர் சர்வீஸில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக டிவிஎஸ் தான் நம்பர் 1; ஆய்வு முடிவில் தகவல்

இது குறித்து அமெரிக்காவை சேர்ந்த ஜே.டி. என்ற மார்கெட்டிங் குறித்து கணிக்க கூடிய நிறுவனம் இந்தியாவில் டூவிலர் சர்வீஸ் குறித்து ஒரு ஆய்வு ஒன்றை நடந்தியது. இந்தியா முழுவதும் உள்ள 45 நகரங்களில் கடந்த நவம்பர் 2017 முதல் மார்ச் 2018 வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

டூவீலர் சர்வீஸில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக டிவிஎஸ் தான் நம்பர் 1; ஆய்வு முடிவில் தகவல்

நவம்பர் 2015 முதல் மார்ச் 2017 வரை டூவீலர் வாங்கியவர்களின் பட்டியலை கொண்டு தற்போது அவர்கள் எப்பொழுது டூவீலரை சர்வீஸிற்கு எடுத்து வருகின்றனர். என்பதை பொருத்து அந்த ஆய்வு நடந்தது.

டூவீலர் சர்வீஸில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக டிவிஎஸ் தான் நம்பர் 1; ஆய்வு முடிவில் தகவல்

இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது டூவிலர் கஸ்டமர் சர்வீஸ் இன்டெக்ஸ் குறியீடாக வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி 88 சதவீத டூவிலர்கள் அங்கிகரீக்கப்பட்ட டீலர்களிடம் சர்வீஸ் செய்கின்றனர் என கூறப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் திருப்தியடைவர்களின் புள்ளி 1000த்திற்கு 764 என நிர்ணயக்கப்பட்டுள்ளது.

டூவீலர் சர்வீஸில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக டிவிஎஸ் தான் நம்பர் 1; ஆய்வு முடிவில் தகவல்

இது ஒட்டு மொத்த ஆட்டோ மொபைல் சர்வீஸ் துறையில் சராரியாக உள்ள புள்ளிகளை விட 16 புள்ளிகள் உயர்வு, அதாவது 1000 வாகனங்களுக்கு 764 வாகனங்கள் சர்வீஸ் சென்டரில் சர்வீஸ் செய்யப்படுகிறது.

டூவீலர் சர்வீஸில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக டிவிஎஸ் தான் நம்பர் 1; ஆய்வு முடிவில் தகவல்

மேலும் சர்வீஸிற்கு வந்த வாகனங்களின் எண்ணிக்கையில் சரியான காலகட்டத்தில் சர்வீஸிற்கு வந்த எண்ணிக்கைகளை கணக்கிடும் போது அதன் புள்ளிகள் 1000த்திற்கு 799 புள்ளிகள் என நிர்ணயக்கப்பட்டுள்ளது. இது மொத்த ஆட்டோமொபைல் சர்வீஸ் துறையில் உள்ள சராசரி புள்ளிகளை விட 51 புள்ளிகள் அதிகம்

டூவீலர் சர்வீஸில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக டிவிஎஸ் தான் நம்பர் 1; ஆய்வு முடிவில் தகவல்

அதுமட்டுமல்லாமல் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனம் சர்வீஸ் குறித்த தேதி மற்றும் நேரத்தை முன்னரே புக் செய்யும் சதவீதமும் கடந்த 2017ம் ஆண்டு 31% மாக அதிகரித்துள்ளது. இது கடந்த 2016ம் ஆண்டு வெறும் 20% மட்டுமே இருந்தது. அதேபோல் முன்னரே புக் செய்யாமல் சர்வீஸிற்கு கொண்டு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

டூவீலர் சர்வீஸில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக டிவிஎஸ் தான் நம்பர் 1; ஆய்வு முடிவில் தகவல்

மேலும் இந்த ஆய்வில் எந்தெந்த சர்வீஸ் சென்டர்களில் ஏ.சி., காத்திருப்பு அறை, இலவச வை-பை வசதிகள் இருக்கிறதோ அந்தந்த சர்வீஸ் சென்டர்களில் திருப்தியடையும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

டூவீலர் சர்வீஸில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக டிவிஎஸ் தான் நம்பர் 1; ஆய்வு முடிவில் தகவல்

ஒட்டுமொத்த டூவீலர் பயன்பாட்டாளர்களில் 5 :1 என்ற கணக்கில் அதாவது 18 சதவீதம் பேர் அங்கீகரிக்கப்படாத சர்வீஸ் சென்டர்களின் வாகனங்களை சர்வீஸ் செய்கின்றனர். இது வாகனம் வாங்கி 2 ஆண்டிற்குள் உள்ள வாகனங்கள் குறித்த கணக்கீடு மட்டுமே

டூவீலர் சர்வீஸில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக டிவிஎஸ் தான் நம்பர் 1; ஆய்வு முடிவில் தகவல்

கடந்த 2017ம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டர்களில் சர்வீஸ் செய்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ள நிலையில் அங்கீரிக்கப்படாத சர்வீஸ் சென்டர்களின் சர்வீஸ் செய்பவர்களின் எண்ணிக்கை 12% வரை குறைந்துள்ளது.

டூவீலர் சர்வீஸில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக டிவிஎஸ் தான் நம்பர் 1; ஆய்வு முடிவில் தகவல்

மேலும் இந்த புள்ளி விபரங்களின் படி வாடிக்கையாளர்களை திருப்திபடுத்துவதில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக டி.வி.எஸ் நிறுவனம் தான் 784 புள்ளிகளை நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. தெடர்ந்து ராயல் என்பீல்டு நிறுவனம் 749 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.

டூவீலர் சர்வீஸில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக டிவிஎஸ் தான் நம்பர் 1; ஆய்வு முடிவில் தகவல்

டூவலர் சர்வீஸ்களில் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டரில் சர்வீஸ் செய்பவர்களின் புள்ளிகள் ஸ்கூட்டர்களுக்கு 746ஆகவும், பைக்குகளுக்கு 749 ஆகவும் உள்ளது.

டூவீலர் சர்வீஸில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக டிவிஎஸ் தான் நம்பர் 1; ஆய்வு முடிவில் தகவல்

இந்த ஆய்வு முடிவுகள் 5 முக்கிய அம்சங்களை கொண்டே கணக்கிடப்பட்டது. அதன் படி வாகனத்தை பிக்கப் செய்வதில் 22 % வாடிக்கையாளர்களும், சர்வீஸ் குறித்து சர்வீஸ் சென்டர்கள் அறிவுரை வழங்குவதில் 21% வாடிக்கையாளர்களும், சர்விஸ் குறித்த வசதிகளில் 19% வாடிக்கையாளர்களும், சர்வீஸ் குறித்த முனைப்பில் 18% வாடிக்கையாளர்களும் திருப்தியடைவதாக அந்த ஒட்டு மொத்த முடிவுகள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

Article Published On: Friday, April 27, 2018, 11:05 [IST]
English summary
TVS Continues To Lead Customer Satisfaction With Two-Wheeler After-Sales Service. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+