சாமிக்கே ஐஸ் வைத்த டிவிஎஸ்.. செய்ய வேண்டியத செய்தாச்சு இனி விற்பனை பிச்சுக்க போகுது!!!
இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தி நிறுவனம், டிவிஎஸ் (TVS). இந்த நிறுவனமே உலக புகழ்பெற்ற கோவில் ஒன்றிற்கு தன்னுடைய பிரபலமான ஸ்கூட்டர் மாடலின் சில யூனிட்டுகளை நன்கொடையாக வழங்கி இருக்கின்றது. குருவாயூர் கோவிலுக்கே அது தன்னுடைய இரண்டு சக்கர வாகனங்களை நன்கொடைச் செய்திருக்கின்றது. டிவிஎஸ் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (TVS iQube Electric Scooter) மாடலே வழங்கப்பட்டு இருக்கின்றன. மொத்தமாக ஐந்து யூனிட்டுகள் நன்கொடையாக வழங்கப்பட்டு இருக்கின்றது.
நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக ஐக்யூப் உள்ளது. சென்ற மாத விற்பனையில்கூட முதல் மூன்றில் ஓர் எலெக்ட்ரிக் டூ-வீலராக இது இருந்தது என்பது கவனிக்கத்தகுந்தது. இத்தகைய வாகனத்தின் ஐந்து யூனிட்டுகளையே குருவாயூர் கோவில் நிர்வாகத்திற்கு டிவிஎஸ் தற்போது நன்கொடையாக வழங்கி இருக்கின்றது.

இதுபோன்று வாகனங்களை வாகன உற்பத்தி நிறுவனங்கள் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கும் நிகழ்வு இந்தியாவில் அரங்கேறுவது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் இதுமாதிரியான சம்பவங்கள் நாட்டில் அரங்கேறியிருக்கின்றன. அந்தவகையில், சென்ற ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் கிராண்டு ஐ10 நியாஸ் (Grand i10 Nios) கார் மாடலை இதே குருவாயூர் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கியது என்பது கவனிக்கத்தகுந்தது.
மஹிந்திரா (Mahindra)கூட கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதேபோல் தன்னுடைய பிரபல கார் மாடலை பரிசாக வழங்கி இருந்தது. எக்ஸ்யூவி 700 (XUV 700) கார் மாடலையே அது வழங்கியது. இதுவும், கேரளாவில் உள்ள இதே குருவாயூர் கோவிலுக்கே தன்னுடைய காரை பரிசாக வழங்கியது என்பது கவனிக்கத்தகுந்தது.

இந்த காரை மட்டுமல்ல தார் (Thar) போன்ற கார் மாடலையும் அது இந்த கோவிலுக்கு நன்கொடைச் செய்திருக்கின்றது. இவர்களஇன் வரிசையிலேயே தற்போது டிவிஎஸ் நிறுவனமும் இணைந்திருக்கின்றது. நிறுவனத்தின் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் ரூ. 89,999 என்கிற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இது ஆரம்ப நிலை தேர்வான ஐக்யூப்-இன் விலையே இதுவாகும். இந்த தேர்வில் மட்டுமல்ல ஐக்யூப் எஸ் மற்றும் ஐக்யூப் எஸ்டி ஆகிய வேரியண்டுகளிலும் அது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த வேரியண்டுகளில் 2.2 kWh, 3.4 kWh மற்றும் 5.1 kWh ஆகிய பேட்டரி பேக் ஆப்ஷன்களே இதில் வழங்கப்படுகின்றன.
இதில் முதல் ஒன்று ஓர் முழு சார்ஜில் 75 கிமீ ரேஞ்சையும், இரண்டாவது ஒன்று 100 கிமீ ரேஞ்சையும், மூன்றாவது ஒன்று 150 கிமீ ரேஞ்சையும் வழங்கும் என்பது கழனிக்கத்தகுந்தது. இதில் எந்த வேரியண்டை டிவிஎஸ் நிறுவனம் குருவாயூர் கோவிலுக்கு பரிசாக வழங்கி இருக்கின்றது என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், இது பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிவிஎஸ் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை கடவுளுக்கு ஐஸ் வைக்கும் செயலாகவே பார்க்கப்படுகின்றது. ஐக்யூப் இன்னும் அதிக எண்ணிக்கையில் நாட்டில் விற்பனையாக வேண்டும் என்கிற நோக்கிலேயே இந்த நன்கொடை வழங்கலை டிவிஎஸ் நிறுவனம் செய்திருக்கின்றது. எனவே வரும் நாட்களில் இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் இ-ஸ்கூட்டராக ஐக்யூப் மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








